மிரட்டலான ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போன் இன் முதல் லுக்.! வைரல் ஆகும் டிவீட்.!
ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் இன் வெற்றியை தொடர்ந்து ஒன்பிளஸ் நிறுவனம் மிக விரைவில் ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்யுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் இன் வெற்றியை தொடர்ந்து ஒன்பிளஸ் நிறுவனம் மிக விரைவில் ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்யுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் செய்தியாக இந்த ஆண்டு மூன்று புதிய ஸ்மார்ட்போன்களை ஒன்பிளஸ் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.

5ஜி ஸ்மார்ட்போன்
ஒன்பிளஸ் நிறுவனம் இரண்டு மார்க்யூ போன்கள் மற்றும் மற்றொரு ஸ்பெஷல் 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்யவுள்ளது. ஒன்பிளஸ் இன் இந்த ஆண்டிற்கான முதல் ஸ்மார்ட்போனை ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் அறிமுகம் செய்யுமென்று எதிர்பாக்கப்படுகிறது.
சீனா டிப்ஸ்டர், ஸ்டீவன் டிவீட்
சீனா டிப்ஸ்டர், ஸ்டீவன் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒன்பிளஸ் 7 இன் முன்பக்க புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த பதிவில் ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போன் இன் பன்ச் ஹோல் கேமரா கூட இல்லாத நாட்ச்லெஸ் முழு டிஸ்பிளேயுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் 7
ஒன்பிளஸ் 7 மெட்டல் மற்றும் கிளாஸ் வடிவமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. செங்குத்தாக நேர்கோட்டில் கீழ் நோக்கி மூன்று கேமராகளுடன் கூடிய எல்.இ.டி பிளாஷ் உடன் வெளிவர போகிறதென்ற தகவலுடன் பதிவிடப்பட்டுள்ளது.

அறிமுக விழா
ஒன்பிளஸ் நிறுவனம் இந்த ஆண்டில் தனது 5ஜி ஸ்மார்ட்போனை ஸ்மார்ட்போன் சந்தையில் விற்பனை செய்யதென்ற செய்தியும் பரவலாக பரவி வருகிறது. ஆனால் இந்த செய்தி உண்மையா என்பதை தெரிந்துகொள்ள ஒன்பிளஸ் நிறுவனத்தின் அறிமுக விழா வரை காத்திருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications