இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதியுடன் வெளிவரும் ஒன்பிளஸ் 6டி.!
ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனில் கேமராவுக்கு எப்போதுமே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் அந்தவகையில் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த கேமரா வசதியுடன் வெளிவரும்.
ஒன்பிளஸ் நிறுவனம் தற்சமயம் பல்வேறு புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, அதன்படி விரைவில் ஒன்பிளஸ் 6டி என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட விவோ வி11 ப்ரோ ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதி இடம்பெற்றுள்ளது, அந்தவரிசையில் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனிலும் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதி இடம்பெற்றுள்ளது
என்று ஒன்பிளஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு அம்சங்களைப் பார்ப்போம்.

ஆண்ட்ராய்டு 9.0 பை :
குறிப்பாக ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த அட்டகாசமான ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் களமிறங்கும் என்று கூறப்படுகிறது. மேலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதி இதனுள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

8ஜிபி ரேம்:
எப்போதும் போல் 6ஜிபி மற்றும் 8ஜிபி ரேம் வசதியுடன் தான் இந்த ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனும் வெளிவரும் என்று கூறப்படுகிறது, ஆனால் மெமரி பொறுத்தவரை சற்று அதிகமாக இருக்க கூடிய வாய்ப்பு உள்ளது

டிஸ்பிளே அம்சம்:
இப்போது வெளிவந்த தகவலின் அடிப்படையில் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் 6.2-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பு கொண்டுள்ளது, மேலும் 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சத்துடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேமரா வசதி:
ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனில் கேமராவுக்கு எப்போதுமே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் அந்தவகையில் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த கேமரா வசதியுடன் வெளிவரும். குறிப்பாக டூயல் ரியர் கேமரா வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன்

இணைப்பு ஆதரவுகள் :
வைபை, ப்ளூடூத்,4ஜி வோல்ட்இ,ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி,என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications