புதிய மாறுபாடுகளுடன் விற்பனைக்கு வரும் ஒன்பிளஸ் 6டி.!
ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனில் 3700எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
ஒன்பிளஸ் நிறுவனம் தொடர்ந்து தரம் வாய்ந்த ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்து வருகிறது, மேலும் சில நாட்களுக்கு முன்பு அந்நிறுவனம் ஒன்பிளஸ் 6டி என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது, இந்த ஸ்மார்ட்போன்
மாடல் இந்திய சந்தையில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.
ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் ஊதா நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போன் மாடலை பயன்படுத்துவதற்கு மிக அருமையாக இருக்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடலின் அம்சங்கள்
மற்றும் விலைப் பற்றிய தகவலைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:
ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6.41-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2,340 x 1,080 பிக்சல் திர்மானம் மற்றும் 19.5:9 திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

ஸ்னாப்டிராகன் 845சிப்செட்:
இக்கருவி குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிக அருமையாக
இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேமிப்பு:
ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் மாடல் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. பின்பு இன்-டிஸ்பிளே-கைரேகை ஸ்கேனர் மற்றும்
185 கிராம் எடையை கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன்.

கேமரா:
இந்த ஸ்மார்ட்போனின் கேமராவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு 16எம்பி+20எம்பி டூயல் ரியர் கேமரா இவற்றுள் பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 16எம்பி செல்பீ கேமரா மற்றும் ஏஐ-எனப்படும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த
அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

பேட்டரி:
ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனில் 3700எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் இந்த சாதனத்தின் ஆரம்ப விலை ரூ.41,999-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications