தண்டர் பர்ப்பிள் ஒன்பிளஸ் 6டி விற்பனைக்கு வந்தது.!
ஒன்பிளஸ் நிறுவனத்தின், முதல் வாட்டர் நாட்ச் டிஸ்பிளே மற்றும் இன்பில்ட் பிங்கர் பிரிண்ட் சென்சார்களுடன் அறிமுகம் ஆகும் முதல் ஒன்பிளஸ் பிளாக்ஷிப் போன்
ஒன்பிளஸ் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய சாதனங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, அதன்படி அன்மையில் அந்நிறுவனம் அறிமுகம் செய்த ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் மாடல் இந்தியாவில் அதிக வரவேறப்பை பெற்றுள்ளது என்று
தான் கூறவேண்டும். இந்த ஸ்மார்ட்போன் ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் ஸ்டோர்களில் எளிமையாக வாங்க முடியும். மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் தண்டர் பர்ப்பிள் நிறத்தில் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது, இது ஒன்பிளஸ் ரசிகர்களை கவரும் வண்ணம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்டர் நாட்ச் டிஸ்பிளே
புதிய வண்ணம் விருப்பம் கொண்ட இந்த ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் பொறுத்தவரை இன்று அளவிலும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பின்பு அமேசான் வலைதளத்தில் கூட இந்த ஸ்மார்ட்போனை மிகவும் எளிமையாக வாங்க முடியும். மேலும் இந்த ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு பரிசு மற்றும் பல்வேறு சலுகைகளை வழங்குகிறது ஒன்பிளஸ் நிறுவனம்.
ஒன்பிளஸ் நிறுவனத்தின், முதல் வாட்டர் நாட்ச் டிஸ்பிளே மற்றும் இன்பில்ட் பிங்கர் பிரிண்ட் சென்சார்களுடன் அறிமுகம் ஆகும் முதல் ஒன்பிளஸ் பிளாக்ஷிப் போன் இந்த ஒன்பிளஸ் 6டி என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் முந்தைய மாடலான ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட் போன் மாடலை தொடர்ந்து, இந்த புதிய ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட் போன் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட் போன் இல் பெரிய பேட்டரி, புதிய கேமரா, செயல்திறன் மற்றும் இன்னும் பல அதீத அம்சங்களுடன் களமிறக்கப்பட்டுள்ளது.

இன்று வரை
கடந்த 2-ம் தேதி இந்த ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் உள்ள முக்கிய 9நகரங்களில் அதிகளவு ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இன்று வரை அதிகளவில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்படுகிறது என்று அந்நிறுவனம் சார்பாக தகவல் வெளிவந்துள்ளது. இருந்தபோதிலும் அதிக வாடிக்கையாளர்கள் இந்த ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனை வாங்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர் என்று தான் தெரிகிறது.

ஆயிரக்கணக்கான மக்கள்
ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் ஒன்பிளஸ் ரசிகர்கள் இந்த ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனை வரிசையில் நின்றுகைப்பற்றினர். சில இடங்களில் ஒன்பிளஸ் 6டி மிக அதிகமாக விற்பனை செய்யப்பட்டது. குறிப்பாக பெங்களூருவில் ஒன்பிளஸ் ஸ்டோர் முன்பு அதிக ரசிகர்கள் வரிசையில் நின்று இந்த அட்டகாசமான ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனை வாங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விலை:
ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட் போன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு ஒரு வேரியண்டாகவும், 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு கொண்ட இன்னொரு வேரியண்டாகவும் மற்றும் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு கொண்ட இன்னொரு வேரியண்டாகவும் களமிறங்கியுள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் அமேசான் வலைதளம் மற்றும் ஒன்பிளஸ்.இன் ரிலையன்ஸ் டிஜிட்டல் போன்ற ஸ்டோர்களில் சலுகைகளுடன் கிடைக்கும் என்று ஒன்பிளஸ் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்சங்கள்:
ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6.41-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2,340 x 1,080 பிக்சல் திர்மானம் மற்றும் 19.5:9 திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. இக்கருவி குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிக அருமையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனில் 3700எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.


Click it and Unblock the Notifications