இந்தியா: விரைவில் ஒன்பிளஸ் 6டி மற்றும் ஒன்பிளஸ் டிவி அறிமுகம்.!

இந்த ன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் உடன் ஒன்பிளஸ் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி மாடலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.

|

இந்திய சந்தையில் விரைவில் பல்வேறு மொபைல் நிறுவனங்கள் தொடர்ந்து அதிநவீன தொழில்நுட்ப வசதி கொண்ட ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது என்று தான் கூறவேண்டும். அந்தவரிசையில் விரைவில் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ள ஒன்பிளஸ் நிறுவனம்.மேலும் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் அமேசான் வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்து விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன்

சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன்

விரைவில் வெளிவரும் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதி இடம்பெற்றுள்ளது, எனவே உங்கள் அனுமதியுடன் தான் மற்றவர் உங்களது போனை இயக்கமுடியும். குறிப்பாக இந்த இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதி புகைப்படங்கள், வீடியோக்கள்,கோப்புகள், ஆடியோ போன்றவற்றை பாதுகாக்க பெரிதும் உதுவுகிறது.

மேலும் இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே பகுதிக்கு அதிக முக்கியத்தும் கொடுத்துள்ளது ஒன்பிளஸ் நிறுவனம். ஏற்கனவே கிடைக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் ஒப்பிடும்போது ஒன்பிளஸ் 6டி தொழில்நுட்பம் மிகச் சிறந்த ஒட்டுமொத்த செயல்திறனை அளிக்கும் என நாம் கூறலாம்.ஒன்பிளஸ் 6டி பிராண்ட் தூதர் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் சமீபத்தில் வெளிவந்த விளம்பரத்தில் இந்த ஸ்மார்ட்போனின் சில குறிப்புகளை மிக அருமையாக தெரிவித்தார். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே-கைரேகை ஸ்கேனர் மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களை அமிதாப் பச்சன் தெளிவாக எடுத்து தெரிவித்தார்

ஒன்பிளஸ் டிவி

ஒன்பிளஸ் டிவி

இந்த ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் உடன் ஒன்பிளஸ் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி மாடலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கபடுகிறது. குறிப்பாக சியோமி ஸ்மார்ட் டிவி மாடலுக்கு போட்டியாக இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பின்பு ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி மாடலில் பல்வேறு ஆப் வசதகள் மற்றும் இணையதளம் பயன்படுத்தும் வசதிகளும் இடம்பெறும்
என எதிர்பார்க்கப்படுகிறுது. மேலும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள், பல்வேறு மென்பொருள் தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட் டிவி வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்ப ஆதரவு

செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்ப ஆதரவு

ஒன்பிளஸ் 6டி இணையதளம் மற்றும் டிவி சேனல்களில் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனின் பல்வேறு விளம்பரப் படங்கள் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்ப ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் வீடியோ கேம் மற்றும் பல்வேறு ஆப் வசதிகளுக்கு தகுந்தபடி உருவாக்கப்பட்டுள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போனின் விளம்பரத்தில் நடிக்க அமிதாப் பச்சன் அவர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். எனவே இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று தான் கூறவேண்டும். சமீபத்திர் ஹாட்ஸ்டார் செயலி மற்றும் இந்தியா-பாக்கிஸ்தான் போட்டின் நடுவே இந்த ஸ்மார்ட்போனின் விளம்பரங்கள் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட விவோ வி11 ப்ரோ ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதி இடம்பெற்றுள்ளது,அந்தவரிசையில் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனிலும் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதி இடம்பெற்றுள்ளது என்று ஒன்பிளஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெரிய பேட்டரி யூனிட்

பெரிய பேட்டரி யூனிட்

சிறந்த மற்றும் நீடித்த தினசரி பயன்பாட்டிற்கான பெரிய பேட்டரி யூனிட் மூலம் இந்த ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் மாடல் இயக்கப்படுகிறது. பின்பு ஒரு முழு நாள் பயன்பாட்டை எளிதாக்கும் வகையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் உருவாக்ப்பட்டுள்ளது. குறிப்பாக வீடியோ கேம், வீடியோ, ஆப் போன்ற பயன்படுகளுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி அமைக்கப்பட்டுள்ளது. இதற்குமுன்பு வந்த ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனை விட அதிக பேட்டரி ஆயுள் அம்சத்துடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் பொதுவாக மேம்பட்ட டாஷ் சார்ஜ் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. மேலும் வேகமான சார்ஜ் வழங்கும் என்பதால் அனைத்து இடங்களிலும் எளிமையாக பயன்படுத்த முடியும். பின்பு சிறந்த டாஷ் சார்ஜ் இணைந்து நீண்ட காரணமாக மொபைல் பேட்டரி பிரச்சினைகள் தீர்க்க போகிறது என்று தான் கூறவேண்டும்.

 3லென்ஸ்  கேமரா

3லென்ஸ் கேமரா

இந்தஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனில் 3லென்ஸ் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் இனி வரும் ஸ்மார்ட்போன்களில் 3லென்ஸ் கேமரா அமைக்கப்படும் என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக செயற்கை நுண்ணறிவு சார்ந்த கேமரா வசதியுடன் இந்த ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். அதிகமான வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் கேமராவுக்கே அதிக முக்கியத்தும் கொடுக்கின்றனர், எனவே அதற்கு தகுந்த வகையில் ஸ்மார்ட்போன்களை தாயர் செய்து வருகிறது ஒன்பிளஸ் நிறுவனம்.

Best Mobiles in India

English summary
OnePlus 6T to take the center stage soon Heres what to look out for: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X