Home
Mobile

ஸ்கிரீன் அன்லாக் வசதியுடன் வெளிவரும் மிரட்டலான ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன்.!

ஏற்கனவே கிடைக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் ஒப்பிடும்போது ஒன்பிளஸ் 6டி தொழில்நுட்பம் மிகச் சிறந்த ஒட்டுமொத்த செயல்திறனை அளிக்கும் என நாம் கூறலாம்.

ஒன்பிளஸ் நிறுவனம் விரைவில் ஒன்பிளஸ் 6டி என்ற ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் மக்களிடம் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று தான் கூற வேண்டும். மேலும் ஒன்பிளஸ் நிறுவனத்தின் நிறுவனர் அறிவித்த தகவலின் அடிப்படையில் இந்த ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் ஆனது இன்-டிஸ்பிளே-அன்லாக் வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த தொழில்நுட்பம் விவோ ஸ்மார்டபோனில் இடம்பெற்றுள்ளது என்பத குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த ஸ்மார்ட்போனில் கைரேகை ஸ்கேனர் தொழில்நுட்பமும் இடம்பெற்றுள்ளது எனவே பயன்படுத்த மிகவும் அருமையாக இருக்கும். இதுதவிற இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் மூன்று கேமராக்கள் அமைந்துள்ளது என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்திய சந்தையில் இந்த ஸ்மார்ட்போன் அதிக வெற்றிபெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறந்த கிராபிக்ஸ் கார்ட் மற்றும் சிறந்த செயலியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். எனவே இந்த ஸ்மார்ட்போனின் விலை சற்று உயர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்-டிஸ்பிளே-கைரேகை ஸ்கேனர்

இன்-டிஸ்பிளே-கைரேகை ஸ்கேனர்

பிளாக்-மிட்நைட் பிளாக்,மிரர் பிளாக் என இரண்டு நிறங்களில் இந்த ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இன்-டிஸ்பிளே-கைரேகை ஸ்கேனர் இடம்பெற்றுள்ளதால் கோப்புகள், வீடியோக்கள், புகைப்படங்கள், போன்ற அனைத்தும் மிகவும் பாதுகாப்பான முறையில் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே பகுதிக்கு அதிக முக்கியத்தும் கொடுத்துள்ளது ஒன்பிளஸ் நிறுவனம். ஏற்கனவே கிடைக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் ஒப்பிடும்போது ஒன்பிளஸ் 6டி தொழில்நுட்பம் மிகச் சிறந்த ஒட்டுமொத்த செயல்திறனை அளிக்கும் என நாம் கூறலாம்.ஒன்பிளஸ் 6டி பிராண்ட் தூதர் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் சமீபத்தில் வெளிவந்த விளம்பரத்தில் இந்த ஸ்மார்ட்போனின் சில குறிப்புகளை மிக அருமையாக தெரிவித்தார். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே-கைரேகை ஸ்கேனர் மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களை அமிதாப் பச்சன் தெளிவாக எடுத்து தெரிவித்தார்.

ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்:

ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்:

ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் பொதுவாக மேம்பட்ட டாஷ் சார்ஜ் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. மேலும் வேகமான சார்ஜ் வழங்கும் என்பதால் அனைத்து இடங்களிலும் எளிமையாக பயன்படுத்த முடியும். பின்பு சிறந்த டாஷ் சார்ஜ் இணைந்து நீண்ட காரணமாக மொபைல் பேட்டரி பிரச்சினைகள் தீர்க்க போகிறது என்று தான் கூறவேண்டும்.

செயற்கை நுண்ணறிவு சார்ந்த கேமரா

செயற்கை நுண்ணறிவு சார்ந்த கேமரா

இந்த ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனில் 3லென்ஸ் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் இனி வரும் ஸ்மார்ட்போன்களில் 3லென்ஸ் கேமரா அமைக்கப்படும் என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக செயற்கை நுண்ணறிவு சார்ந்த கேமரா வசதியுடன் இந்த ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். அதிகமான வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் கேமராவுக்கே அதிக முக்கியத்தும் கொடுக்கின்றனர், எனவே அதற்கு தகுந்த வகையில் ஸ்மார்ட்போன்களை தாயர் செய்து வருகிறது ஒன்பிளஸ் நிறுவனம்.

ஒன்பிளஸ் மற்றும் கூகுள் இடையே ஒருவித ஒத்துழைப்பு உள்ளது என்று தான் கூறவேண்டும், அதன்படி ஒன்பிளஸ் சாதனங்களை மக்களிடம் கொண்டு சேர்பதற்கு பெரிய முயற்சியை செயல்படுத்தி வருகிறது கூகுள் நிறுவனம். குறிப்பாக ஒன்பிளஸ் சார்ந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சார்ந்த அனைத்தும் மக்களிடையே கொண்டு சேர்க்கிறது கூகுள். பின்பு ஒன்பிளஸ் நிறுவனத்தின் வலைதளத்தில் கூட மிகவும் பிரபலமாக உள்ளது என்று தான் கூறவேண்டும்.

அமேசான் வலைதளம்:

அமேசான் வலைதளம்:

விரைவில் வெளிவரும் இந்த ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் மாடல் அமேசான் வலைதளம் மூலம் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வீடியோ கேம், வீடியோ, ஆப் போன்ற பயன்படுகளுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி அமைக்கப்பட்டுள்ளது. இதற்குமுன்பு வந்த ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனை விட அதிக பேட்டரி ஆயுள் அம்சத்துடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்சயம் அமேசான் வலைதளத்தில் விரைவில் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று அறிவிப்பு வெளிவந்துள்ளது, பின்பு வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக Notify Me என்ற விருப்பமும் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
OnePlus 6T Screen Unlock will forever change the way you interact with your phone: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X