சிறந்த தொழில்நுட்ப வசிதயுடன் வெளிவரும் அட்டகாசமான ஒன்பிளஸ் 6டி.!

விரைவில் வெளிவரும் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் மாடல் உடன் ஒன்பிளஸ் டைப்-சி புல்லட் இயர்போன வெளியிடப்படும் என்றுஅந்நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

|

இந்திய மொபைல் சந்தையில் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் மாடல் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று தான் கூறவேண்டும். அதன்படி பல்வேறு சிறந்த அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று ஒன்பிளஸ் நிறுவனம் கூறியுள்ளது. குறிப்பாக இந்த நிறுவனம் வாடிக்கையாளர்களைக் கவரும் பல்வேறு புதிய முயற்சிகளை செய்து வருகிறது, அதற்குதகுந்தபடி இதன் சர்வீஸ் மையத்தில் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் புதிய அம்சங்களை சேர்த்துள்ளது என்று தான் கூறவேண்டும்.

சிறந்த தொழில்நுட்ப வசிதயுடன் வெளிவரும் அட்டகாசமான ஒன்பிளஸ் 6டி.!

தற்சமயம் இணையத்தில் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் மாடல் பற்றிய பல்வேறு வதந்திகள் தொடர்ந்து வந்துகொண்டே தான் இருக்கிறது, அதன்படி வரும் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள், பின்புறம் மூன்று கேமரா வசதி, இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் மற்றும் பல்வேறு அம்சங்கள் இதனுள் இடம்பெற்றுள்ளது என்று ஒன்பிளஸ் நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை மட்டும் தான் சற்று உயர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேட்டரி யூனிட் :

பேட்டரி யூனிட் :

சிறந்த மற்றும் நீடித்த தினசரி பயன்பாட்டிற்கான பெரிய பேட்டரி யூனிட் மூலம் இந்த ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் மாடல் இயக்கப்படுகிறது. பின்பு ஒரு முழு நாள் பயன்பாட்டை எளிதாக்கும் வகையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் உருவாக்ப்பட்டுள்ளது. குறிப்பாக வீடியோ கேம், வீடியோ, ஆப் போன்ற பயன்படுகளுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி அமைக்கப்பட்டுள்ளது. இதற்குமுன்பு வந்த ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனை விட அதிக பேட்டரி ஆயுள் அம்சத்துடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஒன்பிளஸ் டைப்-சி புல்லட் இயர்போன்:

ஒன்பிளஸ் டைப்-சி புல்லட் இயர்போன்:

விரைவில் வெளிவரும் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் மாடல் உடன் ஒன்பிளஸ் டைப்-சி புல்லட் இயர்போன வெளியிடப்படும் என்று அந்நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நீடித்து உழைக்கும் பயன்பாட்டுடன் இந்த சாதனம் வெளிவரும், பின்பு அரமிட் பைபர்கள் மூலம் உருவாக்கப்பட்ட உட்கம்பிகளை கொண்டதால் இந்த இயர்போன் இழுக்கப்படும்பொழுது எளிதாகச் சேதம் அடையாது என ஒன்பிளஸ் நிறுவனம் உறுதியளித்துள்ளது. சிரஸ் லாஜிகுடன் கூடிய டிஎசி கொண்டு கூடுதல் டைனமிக் ரேன்ஜ் மற்றும் அதிக சிக்னல் - நாய்ஸ் விகிதத்துடன் கூடிய சிறந்த ஆடியோ அனுபவத்தை இந்த புல்லட் இயர்போன் நமக்கு வழங்குகிறது.

புதிதாக அறிமுகமாக இருக்கும் ஒன் பிளஸ் 6T இல் திரையிலேயே இன்பில்ட் கைரேகை சென்சார் இருக்கும் என்று ஏற்கெனவே நிறுவனம் உறுதிப்படுத்திய நிலையில், இப்போது இந்த இயர்போனும் அத்துடன் வெளியிட இருப்பதால் ஒன் பிளஸ் 6T இல் 3.5mm ஹெட்போன் ஜாக்-கும் நிச்சயம் இருக்காது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இயர்போனை ஒன் பிளஸ் 6வு மட்டுமின்றி இதே அளவு டைப்-ஊ போர்ட் உடைய அணைத்து மொபைல் போன்களிலும் பயன்படுத்த முடியும்.

ஒன்பிளஸ்-கூகுள் பிரத்யேக கூட்டு:

ஒன்பிளஸ்-கூகுள் பிரத்யேக கூட்டு:

ஒன்பிளஸ் மற்றும் கூகுள் இடையே ஒருவித ஒத்துழைப்பு உள்ளது என்று தான் கூறவேண்டும், அதன்படி ஒன்பிளஸ் சாதனங்களை மக்களிடம் கொண்டு சேர்பதற்கு பெரிய முயற்சியை செயல்படுத்தி வருகிறது கூகுள் நிறுவனம். குறிப்பாக ஒன்பிளஸ் சார்ந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சார்ந்த அனைத்தும் மக்களிடையே கொண்டு சேர்க்கிறது கூகுள். பின்பு ஒன்பிளஸ் நிறுவனத்தின் வலைதளத்தில் கூட மிகவும் பிரபலமாக உள்ளது என்று தான் கூறவேண்டும்.

இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார்:
ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் பொறுத்தவரை இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்குமுன்பு விவோ வி9, விவோ வி11, விவோ 11ப்ரோ போன்ற ஸ்மார்ட்போன்களில் இந்த
இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதி இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த புதிய தொழில்நுட்பம்
மூலம் ஸ்மார்ட்போனில் உள்ள தகவல்கள், வீடியோக்கள், புகைப்படங்களை மிகவும் பாதுகாப்பாக வைக்க முடியும்.

பெரிய டிஸ்பிளே வசதி:

பெரிய டிஸ்பிளே வசதி:

ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை 6-இன்ச் அல்லது அதற்கும் மேற்பட்ட பெரிய டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மல்டிமீடியா அனுபவம் வழங்கும் என்று உறுதி கொடுத்துள்ளது ஒன்பிளஸ் நிறுவனம். மேலும் எச்டி பிளஸ் டிஸ்பிளே கொண்டு இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் கேமிங் மற்றும் வீடியோ போன்ற வசதிக்கு திரையில் பார்க்கும் அனுபவம் வழங்கும் இந்த ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் மாடல்.

விரைவான டாஷ் சார்ஜிங் :

விரைவான டாஷ் சார்ஜிங் :

ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் பொதுவாக மேம்பட்ட டாஷ் சார்ஜ் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. மேலும் வேகமான சார்ஜ் வழங்கும் என்பதால் அனைத்து இடங்களிலும் எளிமையாக பயன்படுத்த முடியும். பின்பு சிறந்த டாஷ் சார்ஜ் இணைந்து நீண்ட காரணமாக மொபைல் பேட்டரி பிரச்சினைகள் தீர்க்க போகிறது என்று தான் கூறவேண்டும்.

வெளிவந்த தகவலின் அடிப்படையில் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனின் பின்புறம் 3 கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. பின்பு இதன் செல்பீ கேமரா 24எம்பி வரை இருக்க வாய்ப்பு உள்ளது. மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போனின் கேமராக்கள்.

Best Mobiles in India

English summary
OnePlus 6T Most technologically advanced and future driven flagship smartphone: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X