ஸ்பெஷல் எடிஷன்: "ஒன்பிளஸ் 6டி மெக்லாரன்" அறிமுகம்.! எவ்வளவு மெமரி தெரியுமா?
ஒன்பிளஸ் ரசிகர்களிடையே கிடைத்த நல்ல வரவேற்பைத் தொடர்ந்து, தற்பொழுது ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஸ்பெஷல் எடிஷன் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட் போன் மாடலை வெளியிடப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனம் அன்மையில் தனது புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 6டி மாடலை வெளியிட்டது.
ஒன்பிளஸ் ரசிகர்களிடையே கிடைத்த நல்ல வரவேற்பைத் தொடர்ந்து, தற்பொழுது ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஸ்பெஷல் எடிஷன் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட் போன் மாடலை வெளியிடப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் ஸ்பெஷல் எடிஷன் பற்றிய இந்த இரண்டு டிவீட்களை பதிவுசெய்துள்ளது.

"ஒன்பிளஸ் 6டி மெக்லாரன்" ஸ்பெஷல் எடிஷன்
ஒன்பிளஸ் நிறுவனம் வரும் டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி, "ஒன்பிளஸ் 6டி மெக்லாரன்" ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போனை லண்டனில் வெளியிடுமென்று தந்து டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து டிசம்பர் 12 ஆம் தேதி இந்த புதிய ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட் போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

"சல்யூட் டு ஸ்பீட்"
முன்னணி ஆட்டோமோட்டிவ் நிறுவனமான மெக்லாரன் நிறுவனத்துடன் இணைந்து ஒன்பிளஸ் நிறுவனம், இந்த ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கிறது. "சல்யூட் டு ஸ்பீட்" என்ற டேக்லைனுடன் ஒன்பிளஸ் 6டி மெக்லாரன் எடிஷன் வெளியிடப்படும் என்று தெரியவந்துள்ளது.

10 ஜிபி ரேம்
ஒன்பிளஸ் 6டி மெக்லாரன் எடிஷன் ஸ்மார்ட் போன் 10ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்ளடக்கச் சேமிப்புடன் வெளியிடப்படுகிறது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் 10 ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போனாக ஒன்பிளஸ் 6டி மெக்லாரன் எடிஷன் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்பிளஸ் 6டி
ஒன்பிளஸ் 6டி மெக்லாரன் எடிஷன் ஸ்மார்ட்போன் இன் ரேம் மற்றும் உள்ளடக்கச் சேமிப்பு மட்டுமே மாற்றப்பட்டுள்ளது, மற்ற அனைத்து அம்சங்களும் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் இல் இருக்கும் அம்சங்கள் போன்றதே. ஒன்பிளஸ் 6டி மெக்லாரன் எடிஷன் போன் மஞ்சள் மற்றும் வைப்ரன்ட் ரெட் நிறத்தில் அறிமுகம் செய்யப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்பிளஸ் 6டி மெக்லாரன் எடிஷன் விலை
ஒன்பிளஸ் 6டி மெக்லாரன் ஸ்மார்ட்போன் இன் விலை பற்றிய விபரங்கள் இன்னும் தெரியவில்லை. இருப்பினும் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் இன் அதிகபட்ச விலை ரூ.45,999 என்பதனால் ஒன்பிளஸ் 6டி மெக்லாரன் எடிஷன் இன் விலை சுமார் ரூ.47,999க்கு அறிமுகம் செய்யப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications