Home
Mobile

சியோமி, ஆப்பிள் ஓரம்போ: விரைவில் வருகிறது ஒன்பிளஸ் 6டி.!

ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் பொதுவாக மேம்பட்ட டாஷ் சார்ஜ் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.

ஒன்பிளஸ் நிறவனம் வரும் அக்டோபர் 30-தேதி மிகவும் எதிர்பார்த்த ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். மேலும் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனின் அறிமுகத்தை முன்னிட்டு பல்வேறு சிறப்பு சலுகைகள் வழங்கப்படும் என அந்நிறுவனம் சார்பாக தெரிவித்துள்ளது.

சியோமி, ஆப்பிள் ஓரம்போ: விரைவில் வருகிறது ஒன்பிளஸ் 6டி.!

ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் பொறுத்தவரை செய்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களை கொண்டு வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் மாடல் பயன்படுத்துவதற்கு மிக அருமையாக இருக்கும் என தகவல் வெளிவந்துள்ளது.

 ரூ.999 விலையில் அழைப்பிதல்:

ரூ.999 விலையில் அழைப்பிதல்:

வரும் அக்டோபர் 30-ம் தேதி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற ரூ.999 விலையில் அழைப்பிதல் இன்று வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த மற்றும் நீடித்த தினசரி பயன்பாட்டிற்கான பெரிய பேட்டரி யூனிட் மூலம் இந்த ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் மாடல் இயக்கப்படுகிறது. பின்பு ஒரு முழு நாள் பயன்பாட்டை எளிதாக்கும் வகையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் உருவாக்ப்பட்டுள்ளது. குறிப்பாக வீடியோ கேம், வீடியோ, ஆப் போன்ற பயன்படுகளுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி அமைக்கப்பட்டுள்ளது. இதற்குமுன்பு வந்த ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனை விட அதிக பேட்டரி ஆயுள் அம்சத்துடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயங்குதளம்:

இயங்குதளம்:

இந்த ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு பை OxygenOS 9.0 இயங்குதளம் இடம்பெறும் என்று அறிவிப்பு வெளிவந்துள்ளது எனவே இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். பின்பு இந்த இயங்குதளம் கூகுள் டெவலப்பர் மாநாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. எனவே பல்வேறு ஆப் பயன்பாடு மற்றும் பேட்டரி சார்ந்த தகவலை அறிய மிக எளிமையாக உதவும் ஆண்ட்ராய்டு பை OxygenOS 9.0 இயங்குதளம்.

சூப்பர் அமோல்ட் டிஸ்பிளே:

சூப்பர் அமோல்ட் டிஸ்பிளே:

ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனில் சூப்பர் அமோல்ட் டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது என அந்நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது, எனவே 5.99-இன்ச் டிஸ்பிளே வரை இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளது. பின்பு பெசல்-லெஸ் வசதி கூட இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிக அருமையாக இருக்கும் என்ற தகவல் வெளிவந்துள்ளது. மேலும் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் டூயல் செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு கொண்டுள்ளது என ஒன்பிளஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

விரைவான டாஷ் சார்ஜிங் :

விரைவான டாஷ் சார்ஜிங் :

ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் பொதுவாக மேம்பட்ட டாஷ் சார்ஜ் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. மேலும் வேகமான சார்ஜ் வழங்கும் என்பதால் அனைத்து இடங்களிலும் எளிமையாக பயன்படுத்த முடியும். பின்பு சிறந்த டாஷ் சார்ஜ் இணைந்து நீண்ட காரணமாக மொபைல் பேட்டரி பிரச்சினைகள் தீர்க்க போகிறது என்று தான் கூறவேண்டும். வெளிவந்த தகவலின் அடிப்படையில் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனின் பின்புறம் 3 கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போனின் கேமராக்கள்.

இன்-டிஸ்பிளே-கைரேகை சென்சார்:

இன்-டிஸ்பிளே-கைரேகை சென்சார்:

விரைவில் வெளிவரும் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே-கைரேகை சென்சார் இடம்பெற்றுள்ளது என்று ஒன்பிளஸ் நிறுவனத்தின் நிறுவனர் Pete Lau என்பவர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இதற்குமுன்பு விவோ வி9, விவோ வி11,விவோ 11ப்ரோ போன்ற ஸ்மார்ட்போன்களில் இந்த இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதி இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இந்த புதிய தொழில்நுட்பம் மூலம் ஸ்மார்ட்போனில் உள்ள தகவல்கள், வீடியோக்கள், புகைப்படங்களை மிகவும் பாதுகாப்பாக வைக்க முடியும். பின்பு மென்பொருள் மற்றும் வன்பொருள் சார்ந்த தொழில்நுட்பங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது ஒன்பிளஸ் நிறுவனம். அதன்படி குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியுடன் இந்த ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் அம்சம் இந்த ஸமார்ட்போனில் இடம்பெற்றுள்ள மிகச்சிறப்பாக அம்சமாக இருக்கும்.

Best Mobiles in India

English summary
OnePlus 6T launch event vouchers sold out within seconds of going live : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X