6-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் அட்டகாசமான ஒன்பிளஸ் 6.!
ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் பொதுவாக 6-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் 18:9 என்ற விகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனம் இப்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி வரும் 2018ஆம் ஆண்டு ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்க்கு முன்பு ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது அந்நிறுவனம்.
ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போன் இந்திய மொபைல் சந்தையில் அதிக வரவேற்ப்பை பெற்றது. மேலும் இப்போது வரும் ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனில் சிறந்த மென்பொருள் தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது என ஒன்பிளஸ் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

6-இன்ச் டிஸ்பிளே:
ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் பொதுவாக 6-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் 18:9 என்றவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் (2880-1440)பிக்சல் தீர்மானம் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

பெசல்-லெஸ் :
இக்கருவி பொதுவாக பெசல்-லெஸ் வடிவமைப்பு பெற்று வெளிவரும் என அந்நிறுவனம் கூறியுள்ளது, ஒன்பிளஸ் 5ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ள சில முக்கிய அம்சங்கள் இந்த ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனில் இடம்பெறும் என எதிர்பார்க்கபடுகிறுது.

ஸ்னாப்டிராகன் 845:
ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஒசி செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆப் மற்றும் விளையாட்டு அம்சங்களுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் 6:
சாம்சங் கேலக்ஸி எஸ்9, எல்ஜி ஜி7, சியோமி மி 7போன்ற ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு இந்த ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன்போட்டியாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நினைவகம்;
இந்த ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6ஜிபி அல்லது 8ஜிபி ரேம் கொண்டு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின் 128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெறலாம்.


Click it and Unblock the Notifications