ஆப்பிள், சாம்சங் நிறுவனத்தின் தூக்கத்தை கெடுக்கும் கனவு ஸ்மார்ட்போன்.!

ஆப்பிள் கருவிகளுக்கான சரியான போட்டியை கருதப்படும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் தனக்கென ஒரு முத்திரையை பதித்த நிறுவனம் தான் - ஒன்ப்ளஸ்.!

|

ஆப்பிள் கருவிகளுக்கான சரியான போட்டியை கருதப்படும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் தனக்கென ஒரு முத்திரையை பதித்த நிறுவனம் தான் - ஒன்ப்ளஸ்.!

இந்நிறுவனத்தின் அடுத்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆன ஒன்ப்ளஸ் 6 பற்றிய பல வதந்திகள் ஏற்கனவே ஆன்லைனில் தோன்றியுள்ளன. இருப்பினும் சமீபத்திய லீக்ஸ் ஆனது ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களை மென்மேலும் அச்சுறுத்தும் மறுகையில், ஒன்ப்ளஸ் 6 மீதான ஆர்வத்தை இன்னும் தூண்டுகிறது என்றே கூறலாம்.

அதிக அவிலான மேம்பாடுகள்

அதிக அவிலான மேம்பாடுகள்

கடந்த 2017-ஆம் ஆண்டில் வெளியான ஒன்ப்ளஸ் 5டி மற்றும் அதற்கு முன் வெளியான ஒன்ப்ளஸ் 5 ஆகிய இரு கருவிகளை விடவும் அதிக அவிலான மேம்பாடுகள் மற்றும் பெரிய மறுவடிவமைப்பை, ஒன்ப்ளஸ் 6 பெறவுள்ளதென்பதை இந்த லீக்ஸ் அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது.

ஸ்க்ரீன்ஷாட்ஸ் மற்றும் பெஞ்ச்மார்க் மதிப்பெண்கள்

ஸ்க்ரீன்ஷாட்ஸ் மற்றும் பெஞ்ச்மார்க் மதிப்பெண்கள்

இதில் இன்னும் சுவாரசியமான விடயம் என்னவெனில், ஒன்ப்ளஸ் 6 ஆனது ஐபோன் எக்ஸ் கருவியை போன்றே ஹை-எண்ட் அம்சங்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னர் வெளியான புகைப்படம் அதை உறுதியும் செய்தது. தற்போது வெளியாகியுள்ள புதிய அறிக்கையானது, ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போனின் ஸ்க்ரீன்ஷாட்ஸ் மற்றும் பெஞ்ச்மார்க் மதிப்பெண்கள் ஆகியவைகளை வெளிப்படுத்தியுள்ளது.

மிகப்பெரிய டிஸ்பிளே

மிகப்பெரிய டிஸ்பிளே

ஆண்ட்ராய்டு சென்டரலின்படி, ஒன்ப்ளஸ் 6 ஆனது ஐபோன் எக்ஸ் போன்ற டிஸ்பிளே மற்றும் ஸ்னாப்டிராகன் 845 ப்ராசஸர் உட்பட சில அதிநவீன அம்சங்களை கொண்டிருக்கும். உடன் ஒன்ப்ளஸ் 6 ஆனது ஒரு மிகப்பெரிய டிஸ்பிளேவை கொண்டிருக்கும்.

19: 9 என்கிற திரை விகிதம்

19: 9 என்கிற திரை விகிதம்

அதாவது இக்கருவி 19: 9 என்கிற திரை விகிதத்துடன் கூடிய ஒரு டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒன்ப்ளஸ் 5டி ஸ்மார்ட்போனின் 18: 9 என்கிறபேனலை விட உயரமானது. இந்திய புதிய திரை விகிதமானது டிஸ்பிளேவில் எந்த விதமான இடத்தையும் மீதமாக்க விடாது என்பது உறுதி.

2,76,510 என்கிற மதிப்பெண்கள்

2,76,510 என்கிற மதிப்பெண்கள்

கசிந்த படங்களின்படி, ஒன்ப்ளஸ் 6 ஆனது மாதிரி எண் ஏ6000 என்ற பெயரின் கீழ் அன்டுடு தளத்தில் காணப்பட்டுள்ளது மற்றும் சான்றிதழ் தளத்தில் 2,76,510 என்கிற மதிப்பெண்களை பெற்றுள்ளது. இதன் அர்த்தம் ஒன்ப்ளஸ் 6 ஆனது நிச்சயமாக ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஓசி கொண்டு வரும்.

உயர்த்த தூண்டும்

உயர்த்த தூண்டும்

இதர அம்சங்களை பொறுத்தமட்டில் ஒன்ப்ளஸ் 6 ஆனது 6 ஜிபி ரேம், 64 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு, ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் செங்குத்தாக அமைக்கப்பெற்ற இரட்டை பின்புற கேமரா அமைப்பு ஆகியவைகளை கொண்டிருக்கும். அதாவது ஆப்பிள், நோக்கியா மற்றும் சாம்சங் நிறுவனங்களின் கருவிகளின் அம்சங்களை உயர்த்த தூண்டும் அளவிலான அம்சங்களை கொண்டிருக்கும்.

வயர்லெஸ் சார்ஜிங்

வயர்லெஸ் சார்ஜிங்

முன்னர் வெளியானதொரு லீக்ஸ் புகைப்படத்தில் ஒன்ப்ளஸ் 6 ஆனது ஒரு பின்புற கண்ணாடியை வடிவமைப்பை கொண்டுள்ளது. இதன் அர்த்தம் ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய அம்சமான வயர்லெஸ் சார்ஜிங்கை ஒன்ப்ளஸ் 6-ல் இணைக்க நிறுவனம் விரும்புகிறது. மேலும் இதுவொரு வியக்கத்தக்க விடயமல்ல, மிகவும் எதிர்பார்ப்பார்க்கப்பட்ட ஒன்றே ஆகும்.

ஸ்க்ரீன்-டூ-பாடி

ஸ்க்ரீன்-டூ-பாடி

முன்னர் குறிப்பிட்டபடி ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போனின் முன்பக்கமானது, மிகவும் எதிர்பார்க்கப்பட்டபடியே ஐபோன் எக்ஸ் போன்றெதொரு வடிவமைப்பை கொண்டுள்ளது. அதன் விளைவாக ஒன்ப்ளஸ் 5டி உடன் ஒப்பிடும்போது, ஒரு சிறந்த ஸ்க்ரீன்-டூ-பாடி விகிதத்தை கொண்டுள்ளது.

ஆன்-ஸ்கிரீன் நேவிகேஷன் பொத்தான்

ஆன்-ஸ்கிரீன் நேவிகேஷன் பொத்தான்

மேல் மற்றும் கீழ் பக்கங்களில் "கிட்டத்தட்ட" பெஸல்கள் இல்லாத டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ள ஒன்ப்ளஸ் 6 ஆனது அதன் டிஸ்பிளேவில் ஆன்-ஸ்கிரீன் நேவிகேஷன் பொத்தான்களை கொண்டுள்ளது. மேலும் இந்த சாதனமானது ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோவை அடிப்படையாகக் கொண்ட ஆக்ஸிஜன் ஓஎஸ் 5.1.0 ரோம் கொண்டு இயங்குகிறது. ஆக வெளியாகும் தருணத்தில் தரநிலை மிக்க இயக்கமுறைமையை கொண்டிருக்குமென்று அர்த்தம்.

கேமரா மற்றும் இயர்பீஸ்

கேமரா மற்றும் இயர்பீஸ்

கருவியின் மேல்பக்கத்தில் முன்பக்கம் எதிர்கொள்ளும் கேமரா மற்றும் இயர்பீஸ் இடம்பெற்றுள்ளது. ஆனால் பொத்தான்களுக்கான இடங்களில் மாற்றம் தெரிகிறது. பவர் பொத்தான் மற்றும் அலெர்ட் ஸ்லைடர் ஆனது வலதுபுறத்தில் வைக்கப்படுகின்றன, மற்றும் வால்யூம் ராக்கர்ஸ் இடதுபக்கத்தில் வைக்கப்படுகின்றன.

பின்புற கேமராக்கள்

பின்புற கேமராக்கள்

ஒன்ப்ளஸ் 5 அல்லது 5டி உடன் ஒப்பிடுகையில் இதன் பின்புற வடிவமைப்பு கடுமையாக வேறுபடுகிறது. இரண்டு செங்குத்தாக சீரமைக்கப்பட்ட பின்புற கேமராக்கள், உடன் எல்இடி ப்ளாஷ் மற்றும் செவ்வக வடிவுடைய கைரேகை ஸ்கேனர், அதன் கீழே ஒன்ப்ளஸ் லோகோ உள்ளது. க்வால்காம் ஸ்னாப்டிராகன் 845 மொபைல் பிளாட்பார்ம் மூலம் தான் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படும் என்பதை ஒன்ப்ளஸ் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது. ஆக இந்த சிப்செட், ஒன்ப்ளஸ் 6-க்கு கூடுதல் அம்சங்களை சேர்க்க உறுதுணையாக இருக்கும்.

How to download Movies in your Mobile (GIZBOT TAMIL)
இறுதி தயாரிப்பு அல்ல

இறுதி தயாரிப்பு அல்ல

இது ஒரு ஆன்லைன் லீக்ஸ் என்பதையும், இறுதி தயாரிப்பு அல்ல என்பதையும் மீண்டும் ஒருமுறை அறிவுறுத்த விரும்புகிறோம். எனவே சிட்டிகையில் இருந்து உப்பை கிள்ளிக்கொள்வது போல இந்த லீக்ஸை அம்சங்களை எடுத்துக்கொள்ளுமாறும் பரிந்துரைக்கிறோம். மேலும் பல ஸ்மார்ட்போன் அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் உடன் இணைந்திருக்கவும்.

Best Mobiles in India

English summary
OnePlus 6 With 19:9 Display, Snapdragon 845 SoC Leaked via AnTuTu Listing. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X