எவ்ளோ கேட்டாலும் கொடுக்கலாம் என்கிற ரேன்ஞ்சில் வெளியாகும் OP 6.!

ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை முதன்மை ஸ்மார்ட்போன் ஆன ஒன்ப்ளஸ் 6, மிக விரைவில் வெளியிடப்படும் என்பது போல் தெரிகிறது.

|

ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை முதன்மை ஸ்மார்ட்போன் ஆன ஒன்ப்ளஸ் 6, மிக விரைவில் வெளியிடப்படும் என்பது போல் தெரிகிறது. இந்தாண்டு வெளியாகும் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் உள்ள இந்த ஸ்மார்ட்போன் பற்றிய பல தகவல்கள் வெளியாகிவிட்ட நிலைப்பாட்டில் கூட, ஆர்வம் அடங்கிய பாடில்லை, அதிகரித்துக் கொண்டே தான் போகிறது.

அதை இன்னும் அதிகரிக்கும் படி, ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் சிஇஓ ஆன பீட் லாவ், நேற்று ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மொழியை வெளிப்படுத்தும் ஒரு புகைப்படத்தை, ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார். வெளியான புகைப்படமானது ஒன்ப்ளஸ் 6-ன் வடிவமைப்பு பற்றிய ஒரு தெளிவான யோசனை கொடுக்கிறது. இன்னும் வெளிப்படையாக சொல்ல வேண்டும் எனில், முந்தைய ஒன்ப்ளஸ் ஸ்மார்ட்போன்கள் போலல்லாமல், ஒன்ப்ளஸ் 6 ஆணையு முற்றிலும் புதிய வடிவமைப்பை இணைத்து கொண்டுள்ளது.

கிளாஸ் பின்புறம் கொண்டு வெளியாகும் முதல் ஒன்ப்ளஸ் ஸ்மார்ட்போன்.!

கிளாஸ் பின்புறம் கொண்டு வெளியாகும் முதல் ஒன்ப்ளஸ் ஸ்மார்ட்போன்.!

ஒன்ப்ளஸ் ஸ்மார்ட்போன்கள் எப்போதுமே தங்கள் அழகான வடிவமைப்பு மொழியினால் அறியப்படுகிறது. அந்த புகழை வரவிருக்கும் ஒன்ப்ளஸ் 6 ஆனது வேறொரு உச்சத்திற்கு கொண்டு செல்லும். ஏனெனில் ஒன்ப்ளஸ் 6 தான் கண்ணாடி பின்பக்கம் கொண்டு வெளியாகும் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் ஆகும். அதை நிறுவனத்தின் சிஇஓ ஆன பீட் லாவ்வும் உறுதிப்படுத்தியுள்ளார். ஆக, ஸ்மார்ட்போன் சந்தையில் ஏற்பட்டுள்ள பாணிகளுக்கு எல்லாம் பொருந்தும் வண்ணம் ஒன்ப்ளஸ் 6-ன் வடிவமைப்பு இருக்கும் என்பது உறுதியாகி விட்டது. அதே சமயம், ஒன்ப்ளஸ் 6 ஆனது அதன் பிரீமியம் உணர்வை இழக்காது என்றும் நம்பலாம்.

5-அடுக்கு நானோடெக் பூச்சு கொண்ட ஒன்ப்ளஸ் 6-ன் பின்புறம்.!

5-அடுக்கு நானோடெக் பூச்சு கொண்ட ஒன்ப்ளஸ் 6-ன் பின்புறம்.!

கண்ணாடி பின்புறம் கொண்டு வெளியாவதெல்லாம் ஒரு சிறப்பமா.? ஏகப்பட்ட கிளாஸ் பேக் கொண்ட ஸ்மார்ட்போன்கள் சந்தையில் உள்ளன தான், ஆனால் அவைகள் யாவும் ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போன் போன்று 5-அடுக்கு நானோடெக் பூச்சு கொண்டிருக்கவில்லை. ஆக, ஒன்ப்ளஸ் 6, நிச்சயமாக கூட்டத்தில் இருந்து வெளியே நிற்கும். மூன்று வழக்கமான லேயருக்குப் பதிலாக, இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில், ஐந்து அடுக்கு நானோடெக் கோட்டிங் நிகழ்த்தப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போன் துறையில் யாரும் பார்த்திராத ஒரு வடிவமைப்பாகும். இது ஒன்ப்ளஸ் 6-ன் பிரீமியம் உணர்வை அதிகரிக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

ஒன்ப்ளஸ்-ன் நேர்மையான வடிவமைப்பு அணுகுமுறை.!

ஒன்ப்ளஸ்-ன் நேர்மையான வடிவமைப்பு அணுகுமுறை.!

எதையாவது ஒன்றை புதிதாக சேர்க்க வேண்டுமே என்கிற கட்டாயத்தின் கீழ், ஒன்ப்ளஸ் 6-ல் எந்த வடிவமைப்பு திணிப்பும், மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை. ஒரு நேர்மையான வடிவமைப்பு அணுகுமுறையை கொண்டுள்ளது. அதே சமயம் ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் தத்துவத்தை ஒன்ப்ளஸ் 6 தக்க வைத்துள்ளது. ஆகமொத்தம் தொழில்துறை வடிவமைப்பை நேர்மையாக வைத்துக்கொள்வது தான் முக்கியம். சம்பந்தம் இல்லாத விளம்பரத்தை உண்டாகும் பொருட்டு கூடுதல் உறுப்புகளை வடிவமைப்பில் திணிப்பது தேவையற்றது என்பதை ஒன்ப்ளஸ் நன்றாக புரிந்து வைத்திருக்கிறது

உண்மையான பெஸல்-லெஸ் வடிவமைப்பு.!

உண்மையான பெஸல்-லெஸ் வடிவமைப்பு.!

ஒன்ப்ளஸ் 6-ன் முன் பக்கத்தில், பேனல்களுக்கான இடைவெளிகள் எதுவும் இல்லாமல், முழுமையாக டிஸ்பிளே நிறைந்திருப்பதை காண முடிகிறது. இதுவொரு புதிய ஒன்ப்ளஸ் வடிவமைப்பு ஆகும். இது வேற லெவல் பயனர் அனுபவத்தை வழங்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். இதன் முன்னோடி ஸ்மார்ட்போன்களில் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்பட்ட பெஸல்கள் ஆனது ஒன்ப்ளஸ்-ல் கிட்டத்தட்ட முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. டிஸ்பிளேயின் மேல்பக்கம் செல்பீ கேமராவிற்கான மற்றும் வழக்கமான சென்சார்களுக்கான இடம் மட்டுமே காட்சிப்படுகிறது.

வாட்டர் ரெசிஸ்டென்ட் பாடி.!

வாட்டர் ரெசிஸ்டென்ட் பாடி.!

வடிவமைப்பில் மட்டுமின்றி, ஒன்ப்ளஸ் 6-ல் முன் எப்போதும் காணப்படாத அம்சங்களும் இடம்பெறும். அதில் மிக முக்கியமான ஒரு அம்சமாக, ஒன்ப்ளஸ் 6-ன் வாட்டர் ரெசிஸ்டென்ட் பாடி திகழும். ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் சமீபத்திய டீஸரில், ஒன்ப்ளஸ் 6 ஆனது நீர் எதிர்ப்பு சக்தி கொண்டதாக இருக்கும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த நீர் எதிர்ப்பு அம்சமானது, ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போனை தினசரி பயன்பாட்டிற்கு ஒரு சிறந்த ஸ்மார்ட்போன் ஆக மாற்றும்.

டேக்அவே (Takeaway)

டேக்அவே (Takeaway)

ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போன் பற்றிய தொடர்ச்சியான வதந்திகள் ஏற்கனவே ரசிகர்களிடையே போதுமான உற்சாகத்தை அதிகப்படுத்தியுள்ள நிலையில், ஒன்ப்ளஸ் 6-ன் வடிவமைப்பு மொழி பற்றிய புகைப்படம் வெளியாகியுள்ளது, எங்களது ஆர்வத்தையும் கூட்டியுள்ளது. ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் வரவிருக்கும் ஒன்ப்ளஸ் 6-ன் முழு வடிவமைப்பு மற்றும் அம்சங்களை பற்றி மென்மேலும் அறிந்துகொள்ள தமிழ் கிஸ்பாட் தளத்துடன் இணைந்திருக்கவும்.

Best Mobiles in India

English summary
OnePlus 6 will set a new design standard with its gorgeous glass back. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X