விரைவில் வெளியாகப்போகும் ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போன் ஆனது, ஒரு மெல்லிய மெட்டல் யூனிபாடி வடிவமைப்பிற்குள் பலமான வன்பொருள் மற்றும் மென்பொருள் அம்சங்களை கொண்டு வெளியாகும் என்பது அதிகாரப்பூர்வமாகி விட்டது.

அதாவது வரவிருக்கும் ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போன் ஆனது மற்ற முக்கிய ஸ்மார்ட்போன்களை விட கணிசமான குறைந்த விலை புள்ளியில் ஒரு ஒப்பிடமுடியாத மொபைல் பயனர் அனுபவம் வழங்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் சமீபத்திய அதிகாரப்பூர்வ மேம்படுத்தல்களின் படி, ஒன்ப்ளஸ் 6 ஆனது சமீபத்திய ஸ்னாப்டிராகன் 845 சிபியூ கொண்டு இயங்கும். இந்த சிப்செட் ஒரு நம்பமுடியாத 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்புடன் இணைந்துள்ளதென்பது கூடுதல் சிறப்பு.
நெகிழ்வான மற்றும் விரைவான.!
இதன் புதிய ஆக்ஸிஜென் ஓஎஸ் ஆனது நெகிழ்வான மற்றும் விரைவான மொபைல் பயனர் அனுபவத்தை வழங்குவதை உறுதி செய்யும். இத்தகைய திறன்களை பெறுவதற்காக, ஒன்ப்ளஸ் நிறுவனமானது, தொழில் நுட்ப போக்குகள் மற்றும் ஸ்மார்ட்போன் - மொபைல் பயனர் உறவுகள் போன்ற விஷயங்கள் மீது மிகவும் நெருக்கமாக ஆய்வுகளை செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ஒரு உண்மையான "சுமை இல்லாத " அனுபவம்.!
நவீனகால் ஸ்மார்ட்போன் பயனர்கள் ஒரு ஸ்மார்ட்போனிலிருந்து என்னென்ன எதிர்பார்க்கிறார்களோ, அது அனைத்துமே சில நாட்களில் வெளியாகப்போகும் ஒன்ப்ளஸ் 6 எனும் தலைமை ஸ்மார்ட்போனில் காணலாம். ஒரு உண்மையான "சுமை இல்லாத " அனுபவத்தை - அடைய, ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் பிரத்யேக ஆர்&டி (ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி) குழுவானது கடுமையாக பணியாற்றியுள்ளதை - விரைவில் நாம் அனுபவிக்கவுள்ளோம்.
வேகமாக, மிகவும் நிலையான மற்றும் திறமையான பயனர் அனுபவம்.!
இந்த குறிப்பிட்ட குழுவானது FSE (ஃபாஸ்ட், ஸ்டேபிள், எபிஷியன்ட) என்று அழைக்கப்படுகிறது. இந்த குழுவின் ஒரே நோக்கம், வரவிருக்கும் ஒன்ப்ளஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது வேகமாக, மிகவும் நிலையான மற்றும் திறமையான பயனர் அனுபவத்தை வழங்குகின்றன என்பதை உறுதி செய்வது மட்டும் தான். இந்த அர்ப்பணிப்பு குழுவானது, ஒன்ப்ளஸ் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான, பீட் லாவ் பார்வையின் கீழ் பணியாற்றுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்ப்ளஸ் நிறுவனத்தை பொறுத்தவரை, ஒரு ஸ்மார்ட்போன் ஆனது வாழ்வின் மீதான சுமைகளை அதிகரிக்காமல் அதை குறைக்கும் பணியை அதிகம் செய்ய வேண்டும் என்பதே ஆகும்.
வழக்கமான விதிமுறைகளை தாண்டி வேலை செய்யும்.!
வரவிருக்கும் ஒன்ப்ளஸ் 6 ஆனது, கூறப்படும் TEAM FSE மூலம் பரிசோதிக்கப்பட்டு, ஒரு "சுமையில்லாத பயனர் அனுபவத்தை" வழங்க தயாராக உள்ளது. அதாவது இது எந்தவித லேக், தொந்தரவு, bloatware அல்லது குறுக்கிடும் அறிவிப்புகள் இன்றி செயல்படும். இந்த நவீன ஸ்மார்ட்போன் ஆனது, வழக்கமான விதிமுறைகளை தாண்டி வேலை செய்யும் ஒரு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் ஆக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
1000-ல் 1 சதவீதத்திற்கும் குறைவான வாய்ப்பே உள்ளது.!
அதே சமயம் ஒரு நாள் முழுவதுமான மென்மையான பயன்பாட்டையும் வழங்கும். நீங்கள் ஒரு 4கே வீடியோவை பதிவு செய்தாலும் சரி, அல்லது தீவிரமான கேமிங்கில் ஈடுபட்டாலும் சரி, அல்லது வாட்ஸ்ஆப்/ பேஸ்புக்கில் மூழ்கி கிடந்தாலும் சரி ஒன்ப்ளஸ் 6 ஆனது எந்தவிதமான தரநிலைகளையும் மாற்றிகொள்ளாது. இன்னும் சொல்லப்போனால், ஒன்ப்ளஸ் 6, ப்ரீஸ் ஆவதற்கு 1000-ல் 1 சதவீதத்திற்கும் குறைவான வாய்ப்பே உள்ளது. இது நிலையான கனரக பயன்பாட்டிற்கும் பொருந்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Gizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.