Subscribe to Gizbot

இந்த ஸ்மார்ட்போன்ல ஏதாச்சும் ஒரு குறை இருக்குனு சொல்லுங்க பார்ப்போம்.?!

Written By:

பொதுவாக ஒரு ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்கு பின்னரே, அது பரவலாக பேசப்படும். ஆனால் ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் அடுத்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஒன்ப்ளஸ் 6-ன் நிலைமை அப்படியே தலைகீழ்.!

இந்த ஸ்மார்ட்போன்ல ஏதாச்சும் ஒரு குறை இருக்குனு சொல்லுங்க பார்ப்போம்.?

வெளியாகும் முன்னரே பல வகையான லீக்ஸ் மற்றும் அதிகாரபூர்வ தகவல்களின் வழியாக மக்களின் ஆர்வத்தை தூண்டி வருகிறது. கணக்கில் அடங்காத லீக்ஸ்கள் ஒருபக்கம் இருக்க, மறுகையில் ஸ்னாப்டிராகன் 845 சிபியூ, 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு போன்ற அதிகாரபூர்வமான அம்சங்களும் வெளியாகி விட்ட நிலைப்பாட்டில், எப்போது அறிமுகமாகும்.? என்ன விலைக்கு அறிமுகமாகும்.? ஆப்பிள் ஐபோன்களையும், சாம்சங் மற்றும் நோக்கியாவின் சமீபத்திய ஸ்மார்ட்போன்களை ஒருவழி செய்யுமா என்பதே இங்கு எழும் ஒரே கேள்வி.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஒரு குறையை கூட கண்டுபிடிக்க முடியாதது போல ஒன்ப்ளஸ் 6 தயாராகி வருகிறது.!

ஒரு குறையை கூட கண்டுபிடிக்க முடியாதது போல ஒன்ப்ளஸ் 6 தயாராகி வருகிறது.!

ஆனால் ஒரு ஸ்மார்ட்போனின் வெற்றியை அதன் வன்பொருள் அம்சங்கள் மட்டுமே நிர்ணயம் செய்யாது. அதை ஒன்ப்ளஸ் நன்கு புரிந்து கொண்டதாக தெரிகிறது. அதனாலேயே, ஒரு குறையை கூட கண்டுபிடிக்க முடியாதது போல ஒன்ப்ளஸ் 6 தயாராகி வருகிறது. அதாவது நிறுவனத்தின் ஒன்ப்ளஸ் 3டி மற்றும் 5டி ஸ்மார்ட்போன்களில் கண்டிலாத அனுபவத்தை இது வழங்கும் என்பது உறுதி.

வாசிப்பு, இணைய உலாவுதல், கேமிங் மற்றும் வீடியோ பின்னணி.!

வாசிப்பு, இணைய உலாவுதல், கேமிங் மற்றும் வீடியோ பின்னணி.!

எங்களுக்கு கிடைத்த தகவலின் படி, ஒன்ப்ளஸ் 6 ஆனது 6-இன்ச் எட்ஜ் டூ எட்ஜ் டிஸ்ப்ளே கொண்டிருக்கும். அது பயனர்களுக்கான சிறந்த மல்டிமீடியா அனுபவத்தை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் பெஸல்லெஸ் வடிவமைப்பானது வாசிப்பு, இணைய உலாவுதல், கேமிங் மற்றும் வீடியோ பின்னணி ஆகியவற்றிக்கு மிகவும் பொருந்தக்கூடிய, ஒரு அட்டகாசமான ஸ்க்ரீன் டூ பாடி திரை விகிதத்தை கொண்டிருக்கும்.

ஒரு வசதியான அன்றாட பயனர் அனுபவத்தை உறுதி செய்யும்.!

ஒரு வசதியான அன்றாட பயனர் அனுபவத்தை உறுதி செய்யும்.!

மேலும் ஒன்ப்ளஸ் 6 ஆனது ஒரு மின்னல் வேக மற்றும் பாதுகாப்பான கைரேகை சென்சார் ஒன்றையும் அதன் பின்புறத்தில் இடம்பெற்றுள்ள செங்குத்தான இரட்டை கேமரா அமைப்பின் அருகில் உட்பொதிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் முந்தைய ஸ்மார்ட்போன்களின் வடிவமைப்பு சித்தாந்தத்தை தொடர்ந்து, ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போனில் மென்மையான வளைவுகள் மற்றும் மென்மையான பக்கங்கள் இடம்பெறும். இது ஹேண்ட்செட்டை வசதியாக ஒரு கையை பயன்படுத்தியே பிடித்துக்கொள்ள உதவி செய்யும். ஆகமொத்தம் ஒன்ப்ளஸ் 6 ஆனது ஒரு வசதியான அன்றாட பயனர் அனுபவத்தை உறுதி செய்யும்.

ஹெட்ஜாக் மற்றும் யூஎஸ்பி போர்ட்களை நீக்கும் பாணியை

ஹெட்ஜாக் மற்றும் யூஎஸ்பி போர்ட்களை நீக்கும் பாணியை

ஒன்ப்ளஸ் நிறுவனம் கையாளவில்லை.!
வடிவமைப்பை பொறுத்தவரை, ஒன்ப்ளஸ் 6 ஆனது அனைத்து நவீன தரநிலைகளை பின்பற்றி இருந்தாலும் கூட, பயனர்களுக்கு மிகத்தேவையான தரமான வயர்டு ஹெட்செட்கள் மற்றும் ஹெட்போன்களை பயன்படுத்த அனுமதிக்க கூடிய 3.5மிமீ ஹெட்ஜாக் இடம்பெற தவறவில்லை. ஒரு மிக மெல்லிய வடிவம் என்கிற பிரதான காரணியை முன்வைத்து, இந்த ஸ்மார்ட்போனில் ஹெட்ஜாக் மற்றும் யூஎஸ்பி போர்ட்களை நீக்கும் பாணியை ஒன்ப்ளஸ் நிறுவனம் கையாளவில்லை என்பது ஒரு சிறப்பான விஷயமாகும்.

செயல்திறன் மற்றும் வடிவமைப்பிலும் ஒரு குறையும் இருக்காது.!

செயல்திறன் மற்றும் வடிவமைப்பிலும் ஒரு குறையும் இருக்காது.!

ஒன்ப்ளஸ் 6 மீதான ஆர்வம் கூடி விட்டதா.? இப்போது வரையிலாக, நம்மால் காத்திருக்க மட்டுமே முடியும். நமது காத்திருப்பு ஒரு குறையும் வைக்காமல் ஒன்ப்ளஸ் 6 ஆனது ஒரு பிரீமியம் ஸ்மார்ட்போனாக வெளியாகும் என்பதில் ஐயம் வேண்டாம். உடன் செயல்திறன் மற்றும் வடிவமைப்பிலும் ஒரு குறையும் இருக்காது என்றே நம்பலாம். இதை அனைத்தையும் உறுதி செய்ய உத்தியோகபூர்வ வெளியீடு நாம் காத்திருக்க வேண்டும். அது ஒன்றும் மிக தொலைவில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒன்ப்ளஸ் 6 பற்றிய மேலும் பல சுவாரசியமான அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் உடன் இணைந்திருக்கவும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
OnePlus 6 will bring futuristic design without compromising on basics. Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot