சியோமி,நோக்கியா ஸ்மார்ட்போன்களுக்கு சவால்விடும் ஒன்ப்ளஸ்6.!
இதனுடைய புதிய உயர்தர வடிவமைப்பு, எட்ஜ்-எட்ஜ் FHD திரை, சிறப்பாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கும் மறுசீரமைக்கபட்ட கேமராவை பார்த்து அனைவரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.
பல்வேறு வதந்திகள், தகவல் கசிவுகள் என கடந்த சில மாதங்களாக பரபரப்பை கிளப்பிய ஒன்ப்ளஸ்6 ஒரு வழியாக வெளியாகிவிட்டது. இந்த ஆண்டின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மார்ட்போனான இது, இந்திய சந்தையில் ரூ34,999 என்ற துவக்க விலையில் 6GB+64GB என்ற வசதியுடன் கிடைக்கிறது. அனைத்து அம்சங்களும் சிறந்ததாகவே பெற்றுள்ள ஒன்ப்ளஸ்6, கூடுதலாக நிறுவனத்தின் முழுவதும் கண்ணாடியால் வடிவமைப்பட்ட அதிநவீன போன் என்ற பெயர்பெற்றுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் தொழில்நுட்ப வல்லுநர்கள், ஒன்ப்ளஸ் சமூக உறுப்பினர்கள் மற்றும் உலகின் முன்னணி பிராண்டுகளிடம் இருந்து பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனுடைய புதிய உயர்தர வடிவமைப்பு, எட்ஜ்-எட்ஜ் FHD திரை, சிறப்பாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கும் மறுசீரமைக்கபட்ட கேமராவை பார்த்து அனைவரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.அதேநேரம், மார்வெல் அவெஞ்சர்ஸ் லிமிட்டேட் எடிசன் ஒன்ப்ளஸ் 6 தனது சிறப்பம்சங்களால் வாயை பிளக்க வைக்கிறது.

ஒன்ப்ளஸ்6
உலகம் முழுக்கவுள்ள முன்னணி பிராண்டுகள் அனைத்தும் சமூக வலைதளங்கள் மற்றும் இதர ஊடகங்கள் மூலம் பதிவுகள் மற்றும் பேனர்கள் மூலம் ஒன்ப்ளஸ்6 ன் இந்திய வருகையை வரவேற்றுள்ளனர். சமூக வலைதளங்களில் காணப்பட்ட சில பதிவுகளை இங்கே பார்க்கலாம்.

திரை
ஒன்ப்ளஸ் மற்றும் மார்வெல் இணைந்து மார்வெல் அவெஞ்சர்ஸ் லிமிட்டேட் எடிசன் ஒன்ப்ளஸ் 6-ஐ வெளியிட்டுள்ளனர். மார்வெல் வெளியிட்ட பதிவின் மூலம் ஒன்ப்ளஸ் உடன் இணைந்து இதுபோன்ற சிறந்த படைப்பை உருவாக்கியதற்காக தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது. மார்வெல் அவெஞ்சர்ஸ் லிமிட்டேட் எடிசன் ஒன்ப்ளஸ் 6 ஆனது கார்பன் பைபர் பினிஷ் மற்றும் கோல்ட் ஆக்சென்ட்டை கொண்டுள்ளது. இந்த எடிசன் ஒன்ப்ளஸ்6 முழுவதும் கட்டுப்படுத்த முடியாதவாறு 8GB ரேம் மற்றும் 256GB உள்ளார்ந்த சேமிப்பு திறனை கொண்டுள்ளது. இதனுடைய 6.28 இன்ச் முழு எச்.டி திரையை மேலும் பிரகாசமூட்டும் வகையில் 5 அட்டகாசமான அவென்ஞர் வால்பேப்பர்களும் உள்ளன.

ஸ்னாப்டிராகன் 845
மொத்தத்தில் மார்வெல் அவெஞ்சர்ஸ் லிமிட்டேட் எடிசன் ஒன்ப்ளஸ் 6 பார்த்துப் பார்த்து செதுக்கப்பட்ட சிற்பம் போன்றது மற்றும் ஒவ்வொரு மார்வெல் ரசிகனும் வாங்கவேண்டிய ஒன்று. ஒன்ப்ளஸ்6ன் வியப்பூட்டும் கண்ணாடி வடிவமைப்பு புகைப்படத்தை பதிவிட்டு ஒன்ப்ளஸ் இந்தியாவை வாழ்த்தியுள்ளது க்வால்காம். ஒன்ப்ளல்6ன் அதிநவீன மற்றும் முழுவதும் கண்ணாடியால் செய்யப்பட்ட வடிவமைப்பு ஆச்சர்யத்தால் விழிபிதுங்கவைக்கிறது. ஒன்ப்ளஸ் 6 தான் இந்தியாவில் அதிக சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 845 சிபியூ வை இந்தியாவில் முதன்முதலில் அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

க்ரோமா ரீடைல்
க்ரோமா ரீடைல் ஸ்டோரில் ஒன்ப்ளஸ்6 கிடைக்கும் என்பதை கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். மே22 2018 முதல் இந்தியா முழுவதும் உள்ள க்ரோமா ஸ்டோர்களுக்கு வந்து புதிய ஒன்ப்ளஸ் மொபைலை வாங்கிச்செல்லலாம். பேடிம், ஸ்டேன்ட்டேட் சார்ட்டேட், ஆக்சிஸ் பேங்க், ஐசிஐசிஐ மற்றும் எச்.டி.எப்.சி வங்கிகளுடன் இணைந்து தினமும் பல்வேறு கேஷ்பேக் சலுகைகளையும் வழங்கி வருகிறது க்ரோமா ஸ்டோர். எங்களுக்கு இந்த வாய்ப்பை வழங்கிய ஒன்ப்ளஸ்க்கு நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறோம் என பதிவிட்டுள்ளது க்ரோமா ஸ்டோர்ஸ்.

விபத்து காப்பீடு
செர்விபை, ஐனாக்ஸ், கிளியர்டிரிப், கிண்டில், கேம்லாப்ட் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நிறுவனங்கள் சிவப்பு கம்பளம் விரிந்து ஒன்ப்ளஸ்6 ஐ வரவேற்றுள்ளன. சர்விபை(servify) காப்பீடு திட்டங்களை வழங்கி ஒன்ப்ளஸ்6ன் அழகிய வடிவமைப்பை பாதுகாக்கிறது.கோடாக்811 செயலியை பதிவிறக்கம் செய்வதன் மூலம் அனைத்து ஒன்ப்ளஸ்6 வாடிக்கையாளர்களுக்கும் 12 மாத விபத்து காப்பீடும் வழங்குகிறது.
அமேசான் ப்ரைம் வீடியோ மற்றும் அமேசான் கிண்டில் இ-புக்ஸ் போன்றவற்றிற்கு பல்வேறு சலுகைகளை ஒன்ப்ளஸ் தருகிறது. ஐடியா பயனர்களுக்கு 2000ரூ கேஷ்பேக் மற்றும் கருவிக்கான காப்ப்டும் வழங்கப்படுகிறது. கிளியர்டிரிப் விமானம் மற்றும் விடுதி களை புக் செய்யும் போது ரூ25,000 வரையிலான சலுகைகளை வழங்குகிறது.

ஒன்ப்ளஸ்6 ன் விலை மற்றும் கிடைக்கும் இடங்கள்
Amazon.in , oneplus.in மற்றும் பெங்களூர் ஒன்ப்ளஸ் ஸ்டோர்களில் முன்கூட்டியே மே21 2018 12:00pm முதல் ஒன்ப்ளஸ் கிடைக்கிறது. மற்ற இடங்களில் இந்த ஸ்மார்ட்போன் மே22 முதல் கிடைக்கிறது. 6 GB ரேம் + 64 GB சேமிப்புதிறன் மற்றும் 8 GB ரேம மற்றும் 128 GB என இரு வகைகளில் வரும் ஒன்ப்ளஸ்6 ன் விலை முறையே ரூ.34,999 மற்றும் ரூ. 39,999. ஒன்ப்ளஸ்6 x மார்வெல் அவெஞ்சர்ஸ் லிமிட்டேட் எடிசன் 8 GB ரேம் மற்றும் 256 GB சேமிப்புதிறன் உள்ளிட்ட வசதிகளுடன் ரூ. 44,999 விலையில் கிடைக்கிறது. மேலும் இதன் விற்பனை மே29 துவங்குகிறது. சில்க ஒயிட் நிறத்தில் 128 GB சேமிப்புதிறன் கொண்ட லிமிட்டேட் எடிசன் ரூ. 39,999 விலையில் ஜூன் 5 முதல் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications