ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போனின் முழு அம்சங்களும் வெளியானது.!

ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போனின் முழுமையான அம்சங்களும் ஆன்லைனில் கசிந்துள்ளது

|

இந்த 2018-ஆம் ஆண்டில் ஆப்பிள் ஐபோன்களுக்கு மிகப்பெரிய போட்டியாய் அமையுமென எதிர்பார்க்கப்படும் ஒன்ப்ளஸ் 6 ஆனது, ஏற்கனவே ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களின் தூக்கத்தை கெடுத்துள்ள நிலைப்பாட்டில் ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போன் கான்செப்ட் வீடியோ ஒன்று வெளியானது.

ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போனின் முழு அம்சங்களும் வெளியானது.!

அதனை தொடர்ந்து தற்போது ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போனின் முழுமையான அம்சங்களும் ஆன்லைனில் கசிந்துள்ளது. வெளியான விவரக்குறிப்புகளை உள்ளடக்கிய புகைப்படத்தின்படி, ஒன்ப்ளஸ் 6 ஆனது எப்/1.7 துள்ளி துல்லியத்துடன் கூடிய இரட்டை கேமரா அமைப்பை வெளிப்படுத்தியுள்ளது.

முன்பக்கத்தை பொறுத்தமட்டில், ஒரு 20எம்பி செல்பீ கேமராவை கொண்டுள்ளது. இந்த விவரங்களுடன் சேர்த்து, ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போனின் பேட்டரி திறன், டிஸ்பிளே அளவு மற்றும் ஆண்ட்ராய்டு பதிப்பு போன்ற பிரதான அம்சங்களும் கசிந்துள்ளன.

சுவாரசியம் என்னவெனில் வெளிப்படுத்தப்பட்டுள்ள பெரும்பாலான அம்சஙகள், சமீபத்தில் தொடங்கப்பட்ட ஒப்போ ஆர்15 உடன் ஒற்றுப்போகிறது. லீக்ஸ் படத்தின் படி, ஒன்ப்ளஸ் 6 ஆனது 6.28 அங்குல முழு எச்டி + அமோஎல்இடி டிஸ்ப்ளே (2280 x 1080 பிக்ஸல் தீர்மானம்) கொண்டுள்ளது. இது ஒப்போ ஆர்15 ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ள அதே டிஸ்பிளே அளவாகும்.

ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போனின் இதர அம்சங்களை பொறுத்தமட்டில், ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஓசி சிப்செட் கொண்டிருக்கலாம். இக்கருவியின் அடிப்படை மாதிரியானது, 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள் சேமிப்புடன் இணைக்கப்படும். நிறுவனத்தின் முந்தைய சேமிப்பு விருப்பங்களை பொறுத்தமட்டில், 6 ஜிபி + 64 ஜிபி சேமிப்பு மற்றும் 8 ஜிபி + 128 ஜிபி சேமிப்பு மாதிரிகளில் வெளியாகியுள்ளது.

ஒரு 6ஜிபி + 128ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு என்கிற அடிப்படை மாதிரி வெளியாகும் மறுகையில், ஒரு 8 ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு கொண்ட ஹை-எண்ட் மாதிரி ஒன்றும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னர் வெளியானதொரு அறிக்கையின்படி, ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போன் ஆனது எப்/1.7 துளை உடனான 16எம்பி முதன்மை சென்சார் + எப் / 1.7 துளையுடன் கூடிய 20எம்பி இரண்டாம் நிலை சென்சார் என்கிற இரட்டை கேமரா அமைப்பை கொண்டிருக்கும். முன்பக்கத்தை பொறுத்தமட்டில், கடைசி இரண்டு ஸ்மார்ட்போன்களில் காணப்பட்ட 16எம்பி சென்சாருக்கு பதிலாக, 20எம்பி என்கிற மேம்பாடு பெறலாம்.

How to Make a Video Intro for YouTube Video for FREE! - Tamil

ஒன்ப்ளஸ் 6 ஆனது அண்ட்ராய்டு 8.1 ஓரியோ அடிப்படையிலான ஆக்ஸிஜன் ஓஎஸ் கொண்டு இயங்கும். உடன் ஒப்போ ஆர்15 ஸ்மார்ட்போனில் இடம்பெற்ற அதே 3450எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும். மேலும், ஒன்ப்ளஸ் 6 அதன் பின்புறத்தில் கண்ணாடி வடிவமைப்பு கொண்டுள்ளதால் வயர்லெஸ் சார்ஜிங் அம்சமும் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
OnePlus 6 Rumoured to Sport a 20MP Selfie Camera and 3450mAh Battery. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X