ஒன்ப்ளஸ் 6-ன் 8ஜிபி ரேம் + 256 ஜிபி மாடல் விலையை சொன்னால் நம்புவீர்களா?

ஒன்ப்ளஸ் 6 ஆனது பிரதான அம்சங்கள், பிரீமியம் வடிவமைப்பு மற்றும் முதன்மை தயாரிப்பு என்பதில் சந்தேகமே இல்லை.

|

ஒன்ப்ளஸ் 6 எப்போது வெளியாகும்.? என்ன விலைக்கு வெளியாகும்.? என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும் என்கிற நமது காத்திருப்பு நேரம் கிட்டத்ட்ட முடிவடைய உள்ளது. ஆம், பல வகையான லீக்ஸ் தகவல்களில் சிக்கிய ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் அடுத்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆன ஒன்ப்ளஸ் 6-ன் அதிகாரப்பூர்வ வெளியீட்டு நாள் மிக அருகாமையில் தான் உள்ளது.

இந்நிலைப்பாட்டில், கடந்த பல மாதங்களாக வெளியான ஒன்ப்ளஸ் 6-ன் சில உறுதிசெய்யப்பட்ட அம்சங்கள் மற்றும் எதிர்பார்க்கப்படும் விலை போன்ற விடயங்களை ஆராய்வதின் விளைவாக நாம் ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போன் பற்றிய ஒரு தெளிவான முடிவுக்கு வர முடியும். அப்படியாக ஒன்ப்ளஸ் 6 பற்றிய வெளியான முதல் தகவல், அதன் வன்பொருள் பற்றியது.

ஹை-எண்ட் வன்பொருள் அம்சங்கள்.!

ஹை-எண்ட் வன்பொருள் அம்சங்கள்.!

ஒன்ப்ளஸ் 6-ல் மிகவும் சிறந்த வன்பொருள் அம்சங்கள் இடம்பெறும் என்பதை உறுதி செய்யும் வண்ணம், அது சமீபத்திய ஸ்னாப்டிராகன் 845 CPU மற்றும் 8ஜிபி அளவிலான ரேம் மற்றும் 256ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு கொண்டு இயங்கும் என்கிற தகவல் வெளியானது. பின்னர் அது உறுதியும் செய்யப்பட்டது. ஆக, ஒன் ப்ளஸ் 6-ல் வேகம் மற்றும் செயல்திறன் சார்ந்த எந்த விதமான பின்னடைவும் இருக்காது. மேலும், இதற்கு முன்னர் வெளியான அறிக்கைகள் நம்பப்படுமானால், ஒன்ப்ளஸ் 6 ஆனது ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ ஓஎஸ் கொண்டு இயங்கும். மேலும் இந்த ஆண்டின் இறுதியில், ஒன்ப்ளஸ் 6 ஆனது ஆண்ட்ராய்டு பி மேம்பாட்டிற்கு மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வேற லெவல் டிஸ்பிளே அனுபவம்.!

வேற லெவல் டிஸ்பிளே அனுபவம்.!

ஒன்ப்ளஸ் 6-ன் மேல் பக்க (சிறிய பகுதி) புகைப்படத்தை வெளியிட்டு, புதிய ஒன்ப்ளஸ் 6 ஆனது ஒன்ப்ளஸ் 5டி வழங்கிய டிஸ்பிளே அனுபவத்தை விட இன்னும் அழகான AMOLED அனுபவத்தை வழங்கும் என்பதை ஒன்ப்ளஸ் நிறுவனமே உறுதி செய்தது. உடன் சிறந்த மல்டி மல்டிமீடியா அனுபவத்தை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு 6 அங்குல எட்ஜ்-டு-எட்ஜ் டிஸ்பிளே இடம்பெறுவதும் உறுதியாகிவிட்டது. ஒன்ப்ளஸ் 6 ஆனது நிச்சயாமாக பெஸல்லெஸ் வடிவமைப்பை கொண்டு வரும். அது வாசிப்பு, இணைய உலாவுதல், கேமிங் மற்றும் வீடியோ பின்னணி ஆகியவற்றிற்கான மிகவும் பொருந்தக்கூடிய திரை அனுபவத்தை வழங்கும் ஒரு சுவாரசியமான ஸ்க்ரீன்-டூ-பாடி விகிதத்தை கொண்டிருக்கும் என்பது உறுதி. வெளியான சில டீஸர்கள், ஒன்ப்ளஸ் 6 ஆனது சைகை கட்டுப்பாட்டு ஆதரவைக் கொண்டிருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கின்றன. அதைப்பற்றிய கூடுதல் விவரங்கள் ஏதும் இல்லை.

முன்  எப்போதும் காணாத வண்ணங்களில் ப்ரீமியம் வடிவமைப்பு.!

முன் எப்போதும் காணாத வண்ணங்களில் ப்ரீமியம் வடிவமைப்பு.!

வடிவமைப்பு துறையை பொறுத்தவரை, மிக சமீபத்திய மேம்படுத்தல்களை ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போனில் காணலாம். இதைப்பற்றி நிறைய பேச முடியும் ஏனெனில் அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் உள்ளன. வெளியான ஒரு அதிகாரப்பூர்வ படத்தின் அடிப்படையின் கீழ், ஒன்ப்ளஸ் 6 ஆனது செங்குத்தாக அடுக்கப்பட்ட இரட்டை பின்புற கேமரா அமைப்பு, வட்டமான கைரேகை ஸ்கேனர் மற்றும் ஒன்ப்ளஸ் பிராண்டிங் ஆகியவற்றை அதன் பின்புறத்தில் கொண்டுள்ளது. மேலும் மிகவும் எதிர்பார்த்தபடியே, ஒன்ப்ளஸ் 6 ஆனது அதன் இடது பக்கத்தில் வால்யூம் ராக்கர்ஸ் மற்றும் அலெர்ட் ஸ்லைடர் பட்டனை கொண்டுள்ளது. மேலும் மென்மையான பூச்சு, வட்டமான முனைகள் மற்றும் மென்மையான வளைவுகளை கொண்டுள்ள ஒரு அழகான ஸ்மார்ட்போனாக காட்சிப்படுகிறது. குறிப்பாக ஒரு புதிய ப்ளூ வண்ண மாறுபாட்டில் காணப்பட்ட ஒன்ப்ளஸ் 6 ஆனது மிகவும் கவர்ச்சிகரமான ஒன்றாக இருந்தது. இன்னும் வேறு என்ன என்ன வண்ணங்களில் வெளியாகும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

3.5மிமீ ஹெட்ஜாக் இருக்கும்.!

3.5மிமீ ஹெட்ஜாக் இருக்கும்.!

ஒன்ப்ளஸ் 6-ல் மிகவும் நேசிக்கக்கூடிய ஒரு அம்சமாக அதன் ஹெட்ஜ்ஆக் நீட்டிப்பு திகழும். ஆம், ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போனில் ஹெட்ஜாக் தக்க வைக்கப்பட்டுள்ளது. சில முன்னணி ஸ்மார்ட்போன்களில் வடிவமைப்பு மற்றும் வயர்லெஸ் செயல்பாட்டை ஊக்குவிக்கும் காரணத்தினால் ஹெட்ஜாக் அம்சம் நீக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒன்ப்ளஸ் 6-ல் அப்படி எதுவும் நடக்கவில்லை. ஒன்ப்ளஸ் 6 உடன், உங்கள் வசதியைப் பொறுத்து, எந்த நிலையான ஹெட்போன்களையும் (வயர்லெஸ் கூட) பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

டூயல் லென்ஸ் கேமரா அமைப்பு மற்றும் பெரிய பேட்டரி

டூயல் லென்ஸ் கேமரா அமைப்பு மற்றும் பெரிய பேட்டரி

வரவிருக்கும் புதிய ஒன்ப்ளஸ் 6-ல் டூயல் லென்ஸ் கேமரா இடம்பெறுவது உறுதி. உடன் அது சோனி இமேஜ் சென்சாரின் கீழ் இயங்கும் என்றும் கூறப்படுகிறது. ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போனின் கேமராவைப் பற்றி நமக்கு அதிகமான தகவல்கள் இல்லை; இருப்பினும், இதன் புகைப்பட தரம் ஒரு திட்டவட்டமான மேம்பாட்டை பெறும் என்பது உறுதி. இது தவிர, ஒன்ப்ளஸ் 6 ஆனது ஒரு பெரிய பேட்டரி அலகு கொண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சார்ஜிங் வேகத்தை மேம்படுத்த உதவும் டாஷ் சார்ஜிங் ஆதரவு கொண்ட ஒரு 3,500mAh பேட்டரி அலகை எதிர்பார்க்கலாம்.

எதிர்பார்க்கப்படும் வெளியீட்டு தேதி.?

எதிர்பார்க்கப்படும் வெளியீட்டு தேதி.?

வதந்திகளின் படி, ஒன்ப்ளஸ் 6 ஆனது ஜூன் 2018 க்கு முன்னர் அறிமுகமாகும். மிக துல்லியமான வெளியீட்டு தேதி பற்றிய வார்த்தைகள் இல்லை. அதை நிறுவனத்தின் சிஇஓ ஆன பீட் லாவ் தான் அறிவிக்க வேண்டும். நிறுவனத்தின் அடுத்த பங்குகள் 2018 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளதால், ஒன்ப்ளஸ் 6-ன் அறிமுகம் வெகு தொலைவில் இல்லை என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

How to find out where you can get your Aadhaar card (TAMIL GIZBOT)
எதிர்பார்க்கப்படும் விலை.?

எதிர்பார்க்கப்படும் விலை.?

ஒன்ப்ளஸ் 6 ஆனது பிரதான அம்சங்கள், பிரீமியம் வடிவமைப்பு மற்றும் முதன்மை தயாரிப்பு என்பதில் சந்தேகமே இல்லை. ஸ்மார்ட்போனின் பாணியை மாற்றி அமைக்கும் வல்லமை கொண்ட ஒன்ப்ளஸ் 6 ஆனது இதே போன்ற அம்சங்கள் கொண்ட மற்ற ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிடும்போது, மிகவும் குறைந்த செலவே ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ரோம் கொண்ட மாறுபாட்டின் விலையானது ரூ.40,000/- என்கிற புள்ளியை எட்டலாம்.

Best Mobiles in India

English summary
OnePlus 6 Roundup: Specifications, features and expected price. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X