முன்னர் வெளியான மாடல்களை விட மிகவும் குறைவான விலையில் "ஐபோன் வில்லன்".!
அது சார்ந்த பல லீக்ஸ் தகவல்கள் ஏற்கனவே வெளியாகிவிட்ட நிலைப்பாட்டில் சமீபத்தில் வெளியான ஒரு லீக்ஸ் புகைப்படத்தின் வழியாக ஒரு சில சுவாரசியமான விஷயங்கள் வெளிப்பட்டுள்ளது.
மலிவான விலையில் ஹை-எண்ட் ஸ்மார்ட்போன் அம்சங்களை கொடுத்து, ஆப்பிளின் தூக்கத்தை கெடுக்கும் நிறுவனமான ஒன்ப்ளஸ், அதன் அடுத்த ஸ்மார்ட்போன் வெளியீடு - ஒன்ப்ளஸ் 6 - சார்ந்த பணிகளில் தீவீரமாக ஈடுபட்டுள்ளது என்பதை நாம் அறிவோம்.
அது சார்ந்த பல லீக்ஸ் தகவல்கள் ஏற்கனவே வெளியாகிவிட்ட நிலைப்பாட்டில் சமீபத்தில் வெளியான ஒரு லீக்ஸ் புகைப்படத்தின் வழியாக ஒரு சில சுவாரசியமான விஷயங்கள் வெளிப்பட்டுள்ளது. பிரபல லீக்ஸ்டர் ஆன இவான் பிளாஸ்-ன் ட்வீட்டர் அக்கவுண்ட்டில் இது ஒன்ப்ளஸ் 6 தானா.? இல்லையா.? என்ற வாக்கெடுப்பிற்காக பதிவிட்டுள்ள புகைப்படம் தான் அந்த லீக்ஸ்.!

மரத்தினால் ஆன பின்புறம்.!
வெளியான புகைப்படத்தில் காணப்படும் ஒன்ப்ளஸ் 6 ஆனது ஒரு 3.5மிமீ ஹெட்ஜாக், யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் கொண்டுள்ளது. குறிப்பாக "மரத்தினால் ஆன பின்புறம் மற்றும் ஒரு ஓவல் வடிவ கைரேகை ஸ்கேனர் உடன் டூயல் பின்பக்க கேமராக்களை கொண்டுள்ளது. இந்த புகைப்படத்தில் நாம் உற்றுநோக்க கூடிய விஷயம் ஒன்றும் உள்ளது, அது "டிசைன்டு பை ஒன்ப்ளஸ்" என்ற வாசகம் ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் பொறிக்கப்பட்டுள்ளது என்பது தான்.

ஹெட்ஜாக்கை தக்க வைக்கும்.!
இந்த லீக்ஸ் புகைப்படத்தின் வழியாக ஒன்ப்ளஸ் 6, அதன் ஹெட்ஜாக்கை தக்க வைக்கும் என்பது உறுதியாகியுள்ளது. யூஎஸ்பி போர்ட்டை பொறுத்தவரை, முந்தைய ஒன்ப்ளஸ் ஸ்மார்ட்போன்களில் காணப்பட்டுள்ளதை போன்றே தான் உள்ளது, பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை.

"டிசைன்டு பை ஒன்ப்ளஸ்" என்ற வாசகம்.!
சந்தேகத்திற்கு இடமின்றி காட்சிப்படும் 'வுட்டன் பேக்' ஆனது ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போனின் ஒரு சாத்தியமான வேரியண்ட் ஆக இருக்கும். அதாவது கடந்த ஆண்டு வெளியான சாண்ட் ஸ்டோன் வைட் ஒன்ப்ளஸ் 5டி வேரியன்டை போல. ஆனால் ஸ்மார்ட்போனின் பின்புறத்தில், "டிசைன்டு பை ஒன்ப்ளஸ்" என்ற வாசகம் ஏன் பொறிக்கப்பட்டுள்ளது என்பதற்கான விளக்கம் இல்லை. ஒருவேளை சியோமி நிறுவனத்தின் மிக்ஸ் தொடர் ஸ்மார்ட்போன்களுக்கு "மிக்ஸ், டிசைன்டு பை சியோமி" என்ற எழுதும் பாணியை பின்பற்ற பார்க்கலாம்.

ஓவல்-வடிவ கைரேகை ஸ்கேனர் இடம்பெறுவது ஏமாற்றம்.!
இந்த லீக்ஸ் புகைப்படத்தில் காணப்படும் ஒன்ப்ளஸ் 6 ஆனது ஒரு மெட்டல் பிரேமை கொண்டிருப்பதும், முன்னர் வெளியான அறிக்கைகளின் படி, ஒன்ப்ளஸ் 6 ஆனது கண்ணாடி வடிவமைப்பை பெறும் என்று கூறப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்களில் உட்பொதிக்கப்பட்ட ஓவல்-வடிவ கைரேகை ஸ்கேனருக்கு கிடைத்த மோசமான விமர்சனத்தை கண்டும் கூட ஒன்ப்ளஸ் 6-ல் ஓவல்-வடிவ கைரேகை ஸ்கேனர் இடம்பெறுவது ஏமாற்றம். ஒன்ப்ளஸ் 6-ல் டூயல் கேமரா இடம்பெறுவதில் எந்தவிதமான ஆச்சரியம் இல்லை.


மிகவும் குறைவான விலைக்கு அறிமுகமாக வாய்ப்புள்ளது.!
எதிர்பார்க்கப்படும் அம்சங்களை பொறுத்தமட்டில், ஒன்ப்ளஸ் 6 ஆனது 6.23 அங்குல முழு எச்டி+ டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஓசி, ஏஐ (ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ்) அடிப்படையிலான கேமரா அம்சங்கள், வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பம் ஆகியவைகளை கொண்டிருக்கலாம். அடுத்த ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் இக்கருவி, முன்னர் வெளியான ஒன்ப்ளஸ் ஸ்மார்ட்போன்களை விட மிகவும் குறைவான விலைக்கு அறிமுகமாக வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications