ஒன்ப்ளஸ் 6 இந்தியாவில் என்னென்ன மாடல்கள், என்ன விலையில் கிடைக்கிறது.?

இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மார்ட்போன் ஆன ஒன்ப்ளஸ் 6 ஆனது இந்திய சந்தையில் இப்போது ரூ.34,999/-க்கு (6ஜிபி ரேம் + 64ஜிபி) வாங்க கிடைக்கிறது.

|

கடந்த சில மாதங்களாக வெளியான லீக்ஸ் மற்றும் வதந்திகளுக்குப் பிறகு, இறுதியாக ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போன் அதன் அறிமுகத்தை சந்தித்துள்ளது. இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மார்ட்போன் ஆன ஒன்ப்ளஸ் 6 ஆனது இந்திய சந்தையில் இப்போது ரூ.34,999/-க்கு (6ஜிபி ரேம் + 64ஜிபி) வாங்க கிடைக்கிறது. சிறந்த ஹை எண்ட் அம்சங்களை கொண்டுள்ள ஒன்ப்ளஸ் 6 ஆனது நிறுவனத்தின் முதல் ஆள்-கிளாஸ் டிசைன் ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன் விளைவாகவே இந்த ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் மிக நுட்பமான மொபைலாக திகழ்கிறது.

ஸ்மார்ட்போன் தொழில்நுட்ப ஆர்வலர்கள், ஒன்ப்ளஸ் சமூக உறுப்பினர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களாலும் ஒன்ப்ளஸ் 6 வரவேற்கப்பட்டுள்ளது. முக்கியமாக அதன் புதிய பிரீமியம் வடிவமைப்பு, எட்ஜ் டூ எட்ஜ் டிசைன், FHD+ டிஸ்பிளே மற்றும் அற்புதமான கேமராத்துறை போன்றவைகளை பார்ப்பதற்கே ஆச்சரியமாக உள்ளது. உடன் வெளியான, மார்வெல் அவென்ஜர்ஸ் லிமிடெட் பதிப்பு ஒன்ப்ளஸ் 6 ஆனது வேற லெவலில் உள்ளது.

ஒன்ப்ளஸ் 6 இந்தியாவில் என்னென்ன மாடல்கள், என்ன விலையில் கிடைக்கிறது.?

வெளியான ஒன்ப்ளஸ் 6 ஆனது வாட்டர் ப்ரூப் கொண்டு வெளியாகும் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் ஆகும் என்பதும், சந்தையில் கிடைக்கும் முன்னணி ஸ்மார்ட்போன்களின் விலை நிர்ணயத்துடன் ஒப்பிடும் போது, மிக மலிவான விலையில் ஒன்ப்ளஸ் 6 அறிமுகம் ஆகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. ஒன்ப்ளஸ் 6-ன் அம்சங்கள் மற்றும் இதர மாடல்களின் விலை நிர்ணயம் என்ன என்பதை விரிவாக காண்போம்.

வடிவமைப்பு & டிஸ்ப்ளே :

வடிவமைப்பு & டிஸ்ப்ளே :

ஒன்ப்ளஸ் நிறுவனத்திலிருந்து வெளியான மற்ற சாதனங்களை போன்றே ஒன்ப்ளஸ் 6 ஆனதும் ஒரு எளிய வடிவமைப்பை வைத்திருக்கிறது. ஆனால் ஒன்ப்ளஸ் 5டி ஸ்மார்ட்போனில் காணப்பட்டதை விட அதிக அளவிலான பெஸல் டிஸ்பிளே இடம்பெறும். அதேபோல ஒன்ப்ளஸ் 6 ஆனது உலோகத்திற்குப் பதிலாக, இன்னும் சிறப்பான மற்றும் பயனளிக்கும் வண்ணம் ஒரு கண்ணாடி வடிவமைப்பை கொண்டுள்ளது. மிரர் பிளாக் மாறுபாடு மற்றும் மிட்நைட் பிளாக் மாறுபாடு என்கிற இரண்டு வேரியண்ட்களில் வெளியாகியுள்ளது. உடன் வரையறுக்கப்பட்ட மாடலாக சில்க் வைட் வேரியண்ட்டும் கிடைக்கும். பின்புற பேனலின் இடது மூலையில் ஒரு இரட்டை கேமரா அமைப்பு உள்ளது. கைரேகை சென்சார் ஆனது கேமரா தொகுதி கீழ் உள்ளது. 2280 x 1080 பிக்ஸல் தீர்மானம் கொண்ட 6.28 அங்குல FHD+ ஆப்டிக் டிஸ்ப்ளேவை கொண்டுள்ள ஒன்ப்ளஸ் 6 ஆனது 19: 9 என்ற அளவிலான திரை விகிதத்தையும் கொண்டுள்ளது.

வன்பொருள்:

வன்பொருள்:

ஒன்ப்ளஸ் 6 ஆனது வேகமான மற்றும் மென்மையான அனுபவத்தை வழங்கும் ஒரு அதிவேக ஸ்மார்ட்போன் என்று அறிவிக்கப்பட்டது. அதை உண்மையாகும் வண்ணம், ஒன்ப்ளஸ் 6 ஆனது, க்வால்காம் ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஓசி கொண்டுள்ளது. இது செயல்திறன் அடிப்படையில், முந்தைய மாடலை விட 30% வேகமாகவும், 10% அதிக திறன் கொண்டதாகவும் உள்ளது. இந்த செயலியானது அட்ரெனோ 630 ஜிபியூ உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது யூஜிபி 2.1 சேமிப்பு திறன் அடிப்படையிலான 6 ஜிபி / 8 ஜிபி ரேம் உடனாக 64 ஜிபி / 128 ஜிபி / 256 ஜிபி ஆகிய உள்ளடக்க சேமிப்பு மாடல்களின் கீழ் வெளியாகியுள்ளது. பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான (4வி மற்றும் 4ஏ) உடனான ஒரு 3300mAh பேட்டரி கொண்டு உள்ளது. இது 30 நிமிடங்களில் ஒரு நாள் முழுக்க தாங்கும்படியான பேட்டரியை வழங்கும்.

கேமரா:

கேமரா:

குறைந்த ஒளி நிலைமைகளில் கூட, சிறப்பான புகைப்படங்களை எடுக்க உதவும் ஒரு 16 எம்பி பிரதான கேமரா உட்பட அதன் பின்புறத்தில் ஒரு இரட்டை கேமரா தொகுதி உள்ளது. இரண்டாம் நிலை கேமராவை பொறுத்தவரை, அதுவொரு 20 எம்பி சென்சார் ஆகும். போர்ட்ரெயிட் மோட்ம் விரைவாக புகைப்படத்தை காட்சிப்படுத்துதல், OIS மற்றும் EIS திறன், உட்பட ஒன்ப்ளஸ் 6 கேமராத்துறையில் ஒரு குறையையும் சொல்ல முடியாதபடி உள்ளது. குறிப்பாக, இதன் இன்ட்பில்ட் வீடியோ எடிட்டர், சோனி IMX 371 சென்சார் மற்றும் எப் / 2.0 துளை கொண்ட ஒரு 16 எம்பி செல்பே கேமராக்கள் போன்ற அம்சங்கள் கேமராவை வேற லெவலுக்கு கொண்டு செல்கின்றன என்றே கூறலாம். பின்புற கேமராவை பொறுத்தவரை சோனி IMX519 சென்சார் மற்றும் சோனி IMX376K சென்சார்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மென்பொருள் மற்றும் பிற அம்சங்கள்:

மென்பொருள் மற்றும் பிற அம்சங்கள்:

ஒன்ப்ளஸ் 6 ஆனது ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ உடனான ஆக்சிஜென் ஓஎஸ் 5.1 கொண்டு இயங்குகிறது. இது ஆண்ட்ராய்டு பி இயங்குதளத்தின் ஆரம்பகால நுண்ணறிவுகளில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்ட்ராய்டு பி டெவலப்பர் முன்னோட்டம் இரண்டு நாட்களில் உருட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பேஸ் அன்லாக் அம்சம். ஸ்மார்ட்போனை திறக்க 0.4 வினாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும். பின்புறத்தில் கைரேகை சென்சார் ஒன்றும் உள்ளது. இது 0.2 விநாடிகளில் ஸ்மார்ட்போனை அன்லாக் செய்ய உதவும். உடன் NFC, ப்ளூடூத் 5.0, 4ஜி VoLTE மற்றும் இன்னும் பல இணைப்பு ஆதரவுகளும் உள்ளன. இந்த ஸ்மார்ட்போனில் ஒரு கேமிங் மோட் ஒன்றும் உள்ளது. அது முந்தைய ஸ்மார்ட்போனில் இருந்த கேமிங் முறையை மேம்படுத்தியுள்ளது. மிகவும் சுவாரஸ்யமாக ஒன்ப்ளஸ் 6 ஆனது 3.5மிமீ ஆடியோ ஜாக்கை கொண்டுள்ளது.

விலை மற்றும் கிடைக்கும் தன்மை :

விலை மற்றும் கிடைக்கும் தன்மை :

ஒன்ப்ளஸ் 6 ஆனது, மே 21, சரியாக 12:00 மணிக்கு பெங்களூரில், அமேசான்,இன் மற்றும் ஒன்ப்ளஸ்.இன், உடன் ஒன்ப்ளஸ் ஸ்டோரில் ஒரு ஆரம்ப அணுகல் விற்பனையின் கீழ் வாங்க கிடைக்கும். பின்னர் மே 22 முதல், மிரர் பிளாக் மற்றும் மிட்நைட் பிளாக் வண்ண விருப்பங்களின் கீழ், 6 ஜிபி ரேம் + 64 ஜிபி சேமிப்பு மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ரேம் ஆனது முறையே ரூ.34,999/-க்கும் மற்றும் ரூ.39,999/-க்கும் வாங்க கிடைக்கும். மார்வெல் அவென்ஜர்ஸ் லிமிடெட் பதிப்பின் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மாடல் ஆனது ரூ.44.999/-க்கு விற்பனையாகும். இதன் விற்பனை மே 29-ல் தொடங்கும். 128 ஜிபி சேமிப்பு கொண்ட லிமிடெட் சில்க் வைட் மாறுபாடு ஆனது ஜூன் 5 முதல் ரூ.39.999/-க்கு வாங்க கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
OnePlus 6 receives a warm welcome from leading brands across the globe. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X