Home
Mobile

நம்பமுடியாத 256ஜிபி மாடல்; மிக நியாயமான விலை; ஆப்பிள்-சாம்சங் காலி.!

ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு நிகழ்வானது, லண்டனில் வருகிற மே 16 ஆம் தேதியும், இந்தியாவில் மே 17 ஆம் தேதியும் நடக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

By Muthuraj

ஸ்மார்ட்போன் பிரியர்களின் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்படும், ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் அடுத்த தலைமை ஸ்மார்ட்போன் ஆன ஒன்ப்ளஸ் 6-ன் வெளியீட்டிற்கு முன்னரே, அதன் இந்திய விலை நிர்ணயம் பற்றிய தகவல் லீக் ஆகியுள்ளது.

ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு நிகழ்வானது, லண்டனில் வருகிற மே 16 ஆம் தேதியும், இந்தியாவில் மே 17 ஆம் தேதியும் நடக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வெளியாகியுள்ள விலை நிர்ணயம் பற்றிய தகவல்களின்படி, ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போனின் 64 ஜிபி சேமிப்பு மாடல் ஆனது ரூ.36,999/-க்கும், 128 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு மாடல் ஆனது ரூ.39,999/-க்கும் வெளியாகும்.

ஒரு மிகச்சிறந்த மேம்படுத்தல் இருக்கும் என்பது மட்டும் உறுதி.!

ஒரு மிகச்சிறந்த மேம்படுத்தல் இருக்கும் என்பது மட்டும் உறுதி.!

நிறுவனத்தின் ஹை எண்ட் சேமிப்பு மாடல் ஆன 256 ஜிபி மறுபாட்டின் வருகை உறுதி செய்யப்பட்டுள்ளதே தவிர, அதன் விலை நிர்ணயம் பற்றி எந்த தெளிவும் இல்லை. அதே போல ஒன்ப்ளஸ் 6-ன் சில பிரதான அம்சங்களை தவிர்த்து, இதர விவரங்களிலும் எந்த தெளிவும் இல்லை. இருந்தாலும் கூட, ஒன்ப்ளஸ் 5டி ஸ்மார்ட்போன் உடன் ஒப்பிடும் போது, ஒரு மிகச்சிறந்த மேம்படுத்தல் இருக்கும் என்பது மட்டும் உறுதி.

ஆப்பிள் ஐபோன் எக்ஸ் மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்9 ப்ளஸ்.!

ஆப்பிள் ஐபோன் எக்ஸ் மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்9 ப்ளஸ்.!

வெளியான விலை விவரங்கள் உண்மையாகும் பட்சத்தில், இதுவரை வெளியான ஒன்ப்ளஸ் ஸ்மார்ட்போன்களிலேயே மிகவும் விலையுயர்ந்த ஸ்மார்ட்போன் ஒன்ப்ளஸ் 6 ஆகத்தான் இருக்கும். ஆனால் இதர நிறுவனங்களின் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களுடன் - அதாவது ஆப்பிள் ஐபோன் எக்ஸ் மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்9 ப்ளஸ் - ஒப்பிடும்போது, ​​ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போனின் விலை இன்னும் நியாயமான தெரிகிறது.

பெரிய ஸ்க்ரீன்-டூ-பாடி விகிதம் (19: 9) கொண்டு ஒரு முற்றிலும் புதிய வடிவமைப்பு மொழி.!

பெரிய ஸ்க்ரீன்-டூ-பாடி விகிதம் (19: 9) கொண்டு ஒரு முற்றிலும் புதிய வடிவமைப்பு மொழி.!

இதுவரை ஒருசில அம்சங்களே அறிவிக்கப்பட்டுள்ள நிலைப்பாட்டில், ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போனை நினைத்து கடந்த பல நாட்களாக தூக்கத்தை தொலைத்துவிட்டு சுற்றுகிறது ஆப்பிள் நிறுவனம். ஏனெனில் ஹை-எண்ட் அம்சங்களை கொண்ட ஸ்மார்ட்போன்களை, ஆப்பிள் ஐபோனை விட மலிவான விலைக்கு கொடுக்க முடியும் என்பதை நிரூபித்த நிறுவனம் - ஒன்ப்ளஸ் தான் என்பது நம் எல்லோருக்குமே தெரியும். அந்நிறுவனத்தின் ஒன்ப்ளஸ் 5 மற்றும் 5டி வெற்றியை தொடர்ந்து, அடுத்த தலைமை ஸ்மார்ட்போன் ஆன ஒனப்ளஸ் 6 வெளியீடு சார்ந்த பணிகள் திவீரமாக நடைபெற்று வருகிற நிலைப்பாட்டில், கூறப்படும் ஒன்ப்ளஸ் 6 ஆனது சில அற்புதமான வன்பொருள் மேம்பாடுகள் மற்றும் ஒரு பெரிய ஸ்க்ரீன்-டூ-பாடி விகிதம் (19: 9) கொண்டு ஒரு முற்றிலும் புதிய வடிவமைப்பு மொழியை வெளிப்படுத்தவுள்ளது.

கிளாஸ் பின்புறம் கொண்டு வெளியாகும் முதல் ஒன்ப்ளஸ் ஸ்மார்ட்போன்.!

கிளாஸ் பின்புறம் கொண்டு வெளியாகும் முதல் ஒன்ப்ளஸ் ஸ்மார்ட்போன்.!

இதனால் எதிர்பார்ப்புகளை எக்கச்கக்கமாய் எகிறியுள்ளது. அதற்கு மேலும் தீனிபோடும் வகையில், சில எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் பற்றிய விவரங்களும் வெளியாகின. ஒன்ப்ளஸ் ஸ்மார்ட்போன்கள் எப்போதுமே தங்கள் அழகான வடிவமைப்பு மொழியினால் அறியப்படுகிறது. அந்த புகழை வரவிருக்கும் ஒன்ப்ளஸ் 6 ஆனது வேறொரு உச்சத்திற்கு கொண்டு செல்லும். ஏனெனில் ஒன்ப்ளஸ் 6 தான் கண்ணாடி பின்பக்கம் கொண்டு வெளியாகும் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் ஆகும். அதை நிறுவனத்தின் சிஇஓ ஆன பீட் லாவ்வும் உறுதிப்படுத்தியுள்ளார். ஆக, ஸ்மார்ட்போன் சந்தையில் ஏற்பட்டுள்ள பாணிகளுக்கு எல்லாம் பொருந்தும் வண்ணம் ஒன்ப்ளஸ் 6-ன் வடிவமைப்பு இருக்கும் என்பது உறுதியாகி விட்டது. அதே சமயம், ஒன்ப்ளஸ் 6 ஆனது அதன் பிரீமியம் உணர்வை இழக்காது என்றும் நம்பலாம்.

5-அடுக்கு நானோடெக் பூச்சு கொண்ட ஒன்ப்ளஸ் 6-ன் பின்புறம்.!

5-அடுக்கு நானோடெக் பூச்சு கொண்ட ஒன்ப்ளஸ் 6-ன் பின்புறம்.!

கண்ணாடி பின்புறம் கொண்டு வெளியாவதெல்லாம் ஒரு சிறப்பம்சமே.? ஏகப்பட்ட கிளாஸ் பேக் கொண்ட ஸ்மார்ட்போன்கள் சந்தையில் உள்ளன தான், ஆனால் அவைகள் யாவும் ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போன் போன்று 5-அடுக்கு நானோடெக் பூச்சு கொண்டிருக்கவில்லை. ஆக, ஒன்ப்ளஸ் 6, நிச்சயமாக கூட்டத்தில் இருந்து வெளியே நிற்கும். மூன்று வழக்கமான லேயருக்குப் பதிலாக, இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில், ஐந்து அடுக்கு நானோடெக் கோட்டிங் நிகழ்த்தப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போன் துறையில் யாரும் பார்த்திராத ஒரு வடிவமைப்பாகும். இது ஒன்ப்ளஸ் 6-ன் பிரீமியம் உணர்வை அதிகரிக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

ஒன்ப்ளஸ்-ன் நேர்மையான வடிவமைப்பு அணுகுமுறை.!

ஒன்ப்ளஸ்-ன் நேர்மையான வடிவமைப்பு அணுகுமுறை.!

எதையாவது ஒன்றை புதிதாக சேர்க்க வேண்டுமே என்கிற கட்டாயத்தின் கீழ், ஒன்ப்ளஸ் 6-ல் எந்த வடிவமைப்பு திணிப்பும், மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை. ஒரு நேர்மையான வடிவமைப்பு அணுகுமுறையை கொண்டுள்ளது. அதே சமயம் ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் தத்துவத்தை ஒன்ப்ளஸ் 6 தக்க வைத்துள்ளது. ஆகமொத்தம் தொழில்துறை வடிவமைப்பை நேர்மையாக வைத்துக்கொள்வது தான் முக்கியம். சம்பந்தம் இல்லாத விளம்பரத்தை உண்டாகும் பொருட்டு கூடுதல் உறுப்புகளை வடிவமைப்பில் திணிப்பது தேவையற்றது என்பதை ஒன்ப்ளஸ் நன்றாக புரிந்து வைத்திருக்கிறது.

உண்மையான பெஸல்-லெஸ் வடிவமைப்பு.!

உண்மையான பெஸல்-லெஸ் வடிவமைப்பு.!

ஒன்ப்ளஸ் 6-ன் முன் பக்கத்தில், பேனல்களுக்கான இடைவெளிகள் எதுவும் இல்லாமல், முழுமையாக டிஸ்பிளே நிறைந்திருப்பதை காண முடிகிறது. இதுவொரு புதிய ஒன்ப்ளஸ் வடிவமைப்பு ஆகும். இது வேற லெவல் பயனர் அனுபவத்தை வழங்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். இதன் முன்னோடி ஸ்மார்ட்போன்களில் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்பட்ட பெஸல்கள் ஆனது ஒன்ப்ளஸ்-ல் கிட்டத்தட்ட முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. டிஸ்பிளேயின் மேல்பக்கம் செல்பீ கேமராவிற்கான மற்றும் வழக்கமான சென்சார்களுக்கான இடம் மட்டுமே காட்சிப்படுகிறது.

வாட்டர் ரெசிஸ்டென்ட் பாடி.!

வாட்டர் ரெசிஸ்டென்ட் பாடி.!

வடிவமைப்பில் மட்டுமின்றி, ஒன்ப்ளஸ் 6-ல் முன் எப்போதும் காணப்படாத அம்சங்களும் இடம்பெறும். அதில் மிக முக்கியமான ஒரு அம்சமாக, ஒன்ப்ளஸ் 6-ன் வாட்டர் ரெசிஸ்டென்ட் பாடி திகழும். ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் சமீபத்திய டீஸரில், ஒன்ப்ளஸ் 6 ஆனது நீர் எதிர்ப்பு சக்தி கொண்டதாக இருக்கும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த நீர் எதிர்ப்பு அம்சமானது, ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போனை தினசரி பயன்பாட்டிற்கு ஒரு சிறந்த ஸ்மார்ட்போன் ஆக மாற்றும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 6 Price in India Leak Suggests the Upwards Trend Will Continue. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X