ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனின் டீசர் வெளியீடு.!

ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு ஓரியோ 8.1 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

|

இந்தியாவில் ஒன்பிளஸ் 5டி ஸ்மார்ட்போன் மாடல் அதிக வரவேற்பை பெற்றது, அதை தொடர்ந்து விரைவில் ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம். தற்சமயம் ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் 6 சாதனத்தின் பக்கவாட்டு ஃபிரேம் டீசர் புகைப்படைத்தை ஆன்லைனில் வெளியிட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனின் டீசர் வெளியீடு.!

ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் ஆனது 6.28-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு 2280 x 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு ஓரியோ 8.1 இயங்குதளத்தை
கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன்.

இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக 256ஜிபி வரை மெமரி நீட்டிப்பு
ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் வீடியோ கால் அழைப்புகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள்.

இந்த ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனில் 16எம்பி +16எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது,அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். இதனுடைய
செல்பீ கேமரா 16மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள்
அடக்கம் எனக் கூறப்படுகிறது. ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனில் 3400எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தமட்டில், ஒன்ப்ளஸ் 6 ஆனது, அதன் டிஸ்பிளேவில் உட்பொதிக்கப்பட்ட கைரேகை ஸ்கேனர் ஒன்றை கொண்டுள்ளது. இதுதவிர, சமீபத்திய ஆப்பிள் ஐபோன்களில் இடம்பெற்றுள்ள பேஸ் ஐடியை விட அதிவேகமாக செயல்படுமென கருதப்படும் 3டி முக அடையாள அங்கீகாரமும் இக்கருவியில் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது.

ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனின் டீசர் வெளியீடு.!

வரும் வாரங்களில் இந்த ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

How to download Movies in your Mobile (GIZBOT TAMIL)

மேலும் ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனின் விலைமதிப்பு சற்று அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, இருந்தபோதிலும் அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

Best Mobiles in India

English summary
OnePlus 6 official photo shows the alert slider repositioned Watch all the official teasers here; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X