வெளியாகப்போகும் ஒன்ப்ளஸ் 6-ஐ நம்பி வாங்கலாம் 8 காரணங்கள்.!

ஒன்ப்ளஸ் ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் வழியாக ஒரு புதிய டீஸர் வீடியோ வெளியாகியுள்ளது.

|

ஒன்ப்ளஸ் ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் வழியாக ஒரு புதிய டீஸர் வீடியோ வெளியாகியுள்ளது. அது நிறுவனத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, எதிர்வரும் தலைமை ஸ்மார்ட்போன் ஆன ஒன்ப்ளஸ்6-ன் செயல்திறன் மீதான ஒரு தெளிவான பார்வையை கொடுக்கிறது.

வெளியான வீடியோ ஆனது, வேகம் மற்றும் செயல்திறன் நோக்கி மனிதனின் ஆர்வத்தை பற்றி பேசுகிறது. மேலும் இந்த டீஸரின் வழியாக, ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போனின் வெளியீடு மிக தொலைவில் இல்லை என்பதையும் நம்மால் அறிய முடிகிறது. சந்தையில் கிடைக்கும் இதர முதன்மை கைபேசிகளை விட கணிசமாக குறைந்த விலை-புள்ளியில் மற்றும் ஒப்பிட முடியாத மொபைல் பயனர் அனுபவத்தை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஒன்ப்ளஸ் 6-ன் செயல்திறன் மிக்க அம்சங்கள் தான் என்ன.? கடந்த பல மாதங்களாக, கணக்கில் அடங்காத ஆன்லைன் லீக்ஸ் மற்றும் சில அதிகாரப்பூர்வ ஆதாரங்களை வெளிப்படுத்தி வரும் ஒன்ப்ளஸ் 6-ன் புதிய வரையறைகள் தான் என்ன.?

ஒன்ப்ளஸ் 6-ன் வடிவமைப்பு

வடிவமைப்பை பற்றி பேசும் போது, ஒன்ப்ளஸ் ட்விட்டர் அக்க்கவுண்ட் வழியாக வெளியான ஒரு டீஸர் படம் தான் நினைவிற்கு வருகிறது. அது மிகவும் புதிய வடிவமைப்பு மொழியை பற்றி பேசுகிறது. அதே சமயம் ஸ்மார்ட்போனின் பிரீமியம் தன்மையையும் குறைக்கவில்லை. வரவிருக்கும் ஒன்ப்ளஸ் 6 ஆனது ஒரு புதிய தோற்றத்தை கொண்டு வரும் என்பதில் சந்தேகமே வேண்டாம். அந்த வடிவமைப்பானது, எதிர்காலத்தையும், அடிப்படைகளையும் சேர்த்தே கவனித்துக்கொள்ளும். முக்கியமாக பயனர்களால் மிகவும் நேசிக்கப்படும் 3.5 மிமீ ஹெட்ஜாக்கை ஒன்ப்ளஸ் நிறுவனம் நீக்கவில்லை.

அலெர்ட் ஸ்லைடர்

ஒன்ப்ளஸ் நிறுவனம் ஒரு ட்வீட் வழியாக ஒன்ப்ளஸ் 6-ல் அலெர்ட் ஸ்லைடர் அம்சம் இடம்பெறும் என்பதை வெளிப்படுத்தியது. ஒன்ப்ளஸ் 6-ன் அலெர்ட் ஸ்லைடர் ஆனது கேமராவைப் பயன்படுத்தும்போது இன்னும் சுவரிசையமானதாக இருக்கும் மற்றும் தனித்துவமானதாகத் தோன்றும். அதாவது புகைப்பட பிடிப்பின் பொது போகஸ் சார்ந்த கட்டுப்பாடுகளை வன்பொருள் மூலம் சாத்தியமாக்கும். இதன் உண்மையான திறனை ஒன்ப்ளஸ் 6 வெளியான [பின்னரே பார்க்க ,முடியும். இந்த அம்சத்தை சோதிக்க காத்திருக்க முடியவில்லை என்பதே நிஜம்.

புதிய கெஸ்டர் சப்போர்ட்

நிறுவனத்தின் மற்றொரு ட்வீட்டின் படி, ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போன் மீது சில முன்-எப்போதும் பார்த்திராத கெஸ்டர் (சைகைகள்) அம்சங்கள் இடம்பெறும். இந்த சைகைகள் உங்கள் தினசரி ஸ்மார்ட்போன் அனுபவத்தை இன்னும் வேகமானதாக்க உதவுகின்றன.

முன்னொருபோதும் இல்லாத இன்னும் பெரிய திரை

ஒன்ப்ளஸ் 6-ல் ஒரு புதிய வகை டிஸ்பிளே இடம்பெறும் என்பது மிக உறுதி. அது சார்ந்த ஒரு அதிகாரபூர்வமான புகைப்படமும் வெளியானது. டிஸ்பிளேவின் அளவை மற்றும் வடிவமைப்பை மாற்றுவதின் வழியாக, பயனர்களின் அனுபவத்தை அதிகரிக்க ஒன்ப்ளஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த புதிய டிஸ்பிளேவின் மேல் மையத்தில் ஒரு சிறிய அளவிலான இடைவெளியை காண முடிகிறது. இதன் பொருள் என்னவென்றால், புதிய ஒன்ப்ளஸ் ஸ்மார்ட்போன் ஆனது முன்பை விட மிகவும் பெரிய மற்றும் பொருந்தக்கூடிய டிஸ்பிளே இடம் பெறும்.

ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் முதல் நீர் எதிர்ப்பு ஸ்மார்ட்போன்

ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் ட்விட்டர் தளத்தில் வெளியான ஒரு உத்தியோகபூர்வ டீஸர் வீடியோவில், அதன் முதல் தண்ணீர் எதிர்ப்பு ஸ்மார்ட்போன் ஒன்ப்ளஸ் 6 தான் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாகவே மிகவும் விரும்பப்படும் இந்த வாட்டர் ரெசிஸ்டெண்ட் அம்சம் ஆனது ஒன்ப்ளஸ் 6 மீதான மோகத்தை அதிகப்படுத்துகிறது என்றே கூறலாம்.

எதனுடனும் பொருந்தாத வேகம் மற்றும் செயல்திறன்

வெளியாகப்போகும் ஒன்ப்ளஸ் 6-ல் டாப் கிளாஸ் வன்பொருள் அம்சங்கள் இடம்பெறும் என்பது நிச்சயமாகி விட்ட நிலைப்பாட்டில், எம்மாதிரியான அம்சங்கள் என்பது மட்டும் தான் இங்கு எழும் ஒரே கேள்வி. அதற்கு பதில் அளிக்கும் வண்ணம் ஒன்ப்ளஸ் 6-ல் ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஓசி, 6ஜிபி / 8ஜிபி ரேம் ஜோடியாக 128ஜிபி மற்றும் 256ஜிபி போன்ற அம்சங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேற லெவல் கேமராக்கள்

ஒன்ப்ளஸ் 6-ல் ஸ்மார்ட்போன் கொண்டு எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகின. அந்த கேமரா சாம்பிள்கள் ஆனது வரவிருக்கும் ஒன்ப்ளஸ் 6 கேமராவை பற்றிய ஒரு அற்புதமான அளவு மற்றும் வியக்கத்தக்க நிற வேறுபாட்டை காட்டுகின்றன. வரவிருக்கும் முதன்மை ஸ்மார்ட்போன் கேமராக்கள் ஆனது, ஒளி, நிழல்கள் மற்றும் வெவ்வேறு வண்ண நிலைகளில் கூட சிறப்பான படத்தை பதிவு செய்துள்ளது. இந்த இந்த புதிய தலைமை ஸ்மார்ட்போனின் டூயல் லென்ஸ் கேமராவில் போர்ட்ரெயிட், போக்கே போன்றே பல கேமரா அம்சங்கள் நிச்சயமாக இடம்பெறும்.

லிமிடெட் எடிஷன்

கடைசியாக, ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போன் ஆனது அவென்ஜர்ஸ் : இன்பினிட்டி வார் வெர்ஷனிலும் வெளியாகும். கேட்கவே மிக மகிழ்ச்சியாக இருக்கிறது அல்லவா.? ஒன்ப்ளஸ் 6 மற்றும் மார்வெல் பிரியர்களை ஒரே நேரத்தில் கவரும் முனைப்பின் கீழ் இந்த லிமிடெட் எடிஷன் வெளியாகும். இதை ஒன்ப்ளஸ் நிறுவனமே அதிகாரபூர்வமாக கூறிவிட்டதால், சந்தேகம் எதுவும் வேண்டாம். இன்னும் பல நம்பமுடியாத ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போனின் அம்சங்களை அறிய நாம் அதன் வெளியீடு வரை காத்திருக்க வேண்டும்.

Best Mobiles in India

English summary
OnePlus 6 new teaser video gets us pumped for their new flagship smartphone. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X