அதிவேக இண்டர்நெட் வசதியுடன் வெளிவரும் ஒன்பிளஸ் 6.!

ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் மாடல் வரும் ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்திய மொபைல் சந்தையில அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஓன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன்.

|

ஓன்பிளஸ் நிறுவனம் தற்சமயம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி விரைவில் வெளிவரும் ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனில் அதிவேக டேட்டா வேகம் வழங்க கேட் எனும் புதிய தொழில்நுட்ப அம்சங்களுடன் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விரைவில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்படும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும், அதன்பின்பு குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் அமைப்புடன் வெளிவரும். பொதுவாக இந்த சிப்செட் மாடல் எக்ஸ்20 எல்டிஇ மோடம் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

1.5 ஜிபி டவுன்லோடு:

1.5 ஜிபி டவுன்லோடு:

ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் மாடலுக்கு வழங்கப்படும் புதிய கேட் .16 ஜிகாபிட் எல்டிஇ மோடம் அதிகபட்சம் நொடிக்கு 1.5 ஜிபி டவுன்லோடு வேகம் மற்றும் 150எம்பி அப்லோடு வேகமும் கொண்டுள்ளது என்று "எக்ஸ்டிஏ" டெவலப்பர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் அதிநவீன எல்டிஇ வசதி இவற்றில் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓன்பிளஸ் 6:

ஓன்பிளஸ் 6:

ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் மாடல் வரும் ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்திய மொபைல் சந்தையில அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஓன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன்.

 3டி கேமரா மாட்யூல்:

3டி கேமரா மாட்யூல்:

ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனில் 3டி கேமரா மாட்யூல் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது, அதன்பின் இந்த கேமரா வசதி பொறுத்தவரை இன்ஃப்ராரெட் வெளிச்சத்தை பயன்படுத்தி ஆழத்தை கணக்கிடும் என கூறப்படுகிறது.

 8ஜிபி ரேம்:

8ஜிபி ரேம்:

இந்த ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6ஜிபி அல்லது 8ஜிபி ரேம் கொண்டு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதன்பின் 128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெறலாம்.

19: 9 என்கிற திரை விகிதம் :

19: 9 என்கிற திரை விகிதம் :

அதாவது இக்கருவி 19: 9 என்கிற திரை விகிதத்துடன் கூடிய ஒரு டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒன்ப்ளஸ் 5டி ஸ்மார்ட்போனின் 18: 9 என்கிறபேனலை விட உயரமானது. இந்திய புதிய திரை விகிதமானது டிஸ்பிளேவில் எந்த விதமான இடத்தையும் மீதமாக்க விடாது என்பது உறுதி.

Translate English to Tamil In your Mobile Easily (GIZBOT TAMIL)
 வயர்லெஸ் சார்ஜிங் :

வயர்லெஸ் சார்ஜிங் :

முன்னர் வெளியானதொரு லீக்ஸ் புகைப்படத்தில் ஒன்ப்ளஸ் 6 ஆனது ஒரு பின்புற கண்ணாடியை வடிவமைப்பை கொண்டுள்ளது. இதன் அர்த்தம் ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய அம்சமான வயர்லெஸ் சார்ஜிங்கை ஒன்ப்ளஸ் 6-ல் இணைக்க நிறுவனம் விரும்புகிறது. மேலும் இதுவொரு வியக்கத்தக்க விடயமல்ல, மிகவும் எதிர்பார்ப்பார்க்கப்பட்ட ஒன்றே ஆகும்.

Best Mobiles in India

English summary
OnePlus 6 might support super fast Cat 16 LTE connectivity Gigabit data throughput speeds ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X