8ஜிபி ரேம் கொண்ட ஒன்ப்ளஸ் 6-ன் இந்திய விலை மற்றும் விற்பனை அறிவிப்பு.!
இருப்பினும், அந்த மாடலின் ஸ்டாக் மிகவும் குறைவாக இருந்ததால்அறிமுகமான சில நாட்களுக்குள் "விற்பனை அலமாரி"யில் இருந்து எடுக்கப்பட்டது.
ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் ஒன்ப்ளஸ் 6 ஆனது இந்த ஆண்டின் மே மாதத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. உடன் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்ளடக்க சேமிப்பு கொண்ட ஒன்ப்ளஸ் 6 மார்வெல் லிமிடெட் பதிப்பும் வெளியானது. இருப்பினும், அந்த மாடலின் ஸ்டாக் மிகவும் குறைவாக இருந்ததால்அறிமுகமான சில நாட்களுக்குள் "விற்பனை அலமாரி"யில் இருந்து எடுக்கப்பட்டது

8ஜிபி ரேம் மாடல் ஆனது இந்தியாவில் அறிமுகம் ஆகாதென்றே அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது நிறுவனம் தனது மனதை மாற்றிவிட்டதாக தோன்றுகிறது. ஆம், ஒன்ப்ளஸ் 6-ன் 8ஜிபி ரேம் மாடலை மிட்நைட் பிளாக் வெர்ஷனின் கீழ் அறிமுகம் செய்யுயவுள்ளதை உறுதி செய்துள்ளது. சுவாரசியம் என்னவெனில், இது மார்வெல் அவென்ஜர்ஸ் லிமிடெட் பதிப்பு மாடலை விட மலிவான விலையை கொண்டுள்ளது. அப்படி என்ன விலை.? எப்போது வெளியாகும்.?
விலை மற்றும் இந்திய வெளியீடு.!
ஒன்ப்ளஸ் 6 மிட்நைட் பிளாக் 8ஜிபி ரேம் / 256ஜிபி மாடல் ஆனது இந்தியாவில் ரூ.43,999/-க்கு (அவெஞ்சர்ஸ் எடிஷனை விட ரூ.1000/- குறைவான விலையில்) அறிமுகமாகும். இது பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான அமேசான்.இன் வழியாக ஜூலை 10 அன்று வாங்க கிடைக்கும். தவிர இந்த ஒன்ப்ளஸ் 6 மிட்நைட் பிளாக் மாறுபாடு அந்த ஒன்ப்ளஸ்.இன் மற்றும் ஒன்ப்ளஸ் ஆப்லைன் சேனல்களில் ஜூலை 14-ஆம் தேதி முதல் வாங்க கிடைக்கும்.
ஒன்ப்ளஸ் 6 அம்சங்கள்.!
ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ அடிப்படையிலான ஆக்ஸிஜனேஸ் ஓஎஸ் கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஒரு இரட்டை சிம் (நானோ) ஸ்மார்ட்போன் ஆகும். இதில் ஆண்ட்ராய்டு பி அப்டேட்டிற்கான வாக்குறுதியும் அளிக்கப்பட்டுள்ளது. இது 6.28 இன்ச் முழு எச்டி+ (1080x2280 பிக்சல்கள்; 19: 9 விகிதம் மற்றும் கார்னிங் கொரில்லா கண்ணாடி 5 பாதுகாப்புடன் கூடிய) AMOLED டிஸ்பிலேவை கொண்டுள்ளது. இதன் மையமானது, ஸ்னாப்ட்ராகன் 845 எஸ்ஓசி உடனான 6 ஜிபி / 8 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி / 128 ஜிபி / 256 ஜிபி உள் சேமிப்புடன் இணைந்துள்ளது.
கேமரா துறை.!
கேமரா துறையை பொறுத்தமட்டில், ஒன்ப்ளஸ் 6 ஆனது 16 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் ஒரு 20 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் என்கிற டூயல் கேமரா அமைப்பே கொண்டுள்ளது. அது இரட்டை எல்இடி ப்ளாஷ், எப் / 1.7 துளை, OIS, மற்றும் EIS உடன் இணைந்த ஒரு செங்குத்து இரட்டை பின்புற கேமரா அமைப்பு ஆகும். முன்பக்கத்தை பொறுத்தமட்டில், ஒரு 16 மெகாபிக்சல் சோனி IMX371 சென்சார் உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் டாஷ் சார்ஜ் ஆதரவுடன் கூடிய 3300mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








