இந்தியா: அசத்தலான ஒன்பிளஸ் 6 அவெஞ்சர்ஸ் எடிஷன் விற்பனை துவங்கியது.!

ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் பொதுவாக 6.28-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 திரைவிகிதம் இடம்பெற்றுள்ளது.

|

மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் 6 அவெஞ்சர்ஸ் எடிஷன் சாதனத்தின் விற்பனை அமேசான் வலைதளத்தில் துங்கியது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஜூன் 3-ம் தேதி முதல் அனைத்து ஆஃப்லைன் விறப்னை மையங்களில் கிடைக்கும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம் என்னவென்றால் 3கெவெலர் டெக்ஸ்ச்சர் செய்யப்பட்ட கிளாஸ் பேக் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது, மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் உடன் ஐயன் மேன் கேஸ் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 ஒன்பிளஸ் 6 அவெஞ்சர்ஸ் எடிஷன் :

ஒன்பிளஸ் 6 அவெஞ்சர்ஸ் எடிஷன் :

ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் பொதுவாக 6.28-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல்
திர்மானம் மற்றும் 19:9 திரைவிகிதம் இடம்பெற்றுள்ளது. மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ்5 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன்
மாடல் வெளிவந்துள்ளது.

ஆண்ட்ராய்டு ஓரியோ:

ஆண்ட்ராய்டு ஓரியோ:

ஒன்பிளஸ் 6 அவெஞ்சர்ஸ் எடிஷன் ஸ்மார்ட்போனில் 2.8ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதி
இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ஆண்டராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் வீடியோ கால் அழைப்பு மற்றும் ஆப் வசதிகளுக்கு தகுந்தபடி இந்த
ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

 கேமரா:

கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 16எம்பி +20எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். இதனுடைய செல்பீ கேமரா 16மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

விலை:

விலை:

ஒன்பிளஸ் 6 அவெஞ்சர்ஸ் எடிஷன் ஸ்மார்ட்போனில் 3300எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும்
வாட்டர் ரெசிஸ்டண்ட் அம்சம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.44,999-ஆக
உள்ளது.

Best Mobiles in India

English summary
WhatsApp latest update on Android helps users hide photos videos received in chats:Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X