ஒன்ப்ளஸ் 6-ன் 6 ஜிபி ரேம் + 64 ஜிபி மாடலின் விலை வெளியானது; பயனர்கள் ஷாக்.!

மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வமான வெளியீடு, வருகிற மே 16 ஆம் தேதி அன்று லண்டனில் நடக்கிறது.

|

மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வமான வெளியீடு, வருகிற மே 16 ஆம் தேதி அன்று லண்டனில் நடக்கிறது. இதற்கிடையில் ஒன்ப்ளஸ் 6 பற்றிய, பல ஸ்மார்ட்போன் ஸ்மார்ட்போலீக்ஸ் தகவல்கள் மற்றும் சில அதிகாரபூர்வமான அம்சங்கள் வெளியான வண்ணம் உள்ளன.

இந்த ஆண்டின் சிறந்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக திகழும் என் எதிர்பார்க்கப்படும் ஒன்ப்ளஸ் 6, அதற்கேற்ற - கிட்டத்தட்ட முழுமையான பெஸல்லெஸ் - வடிவமைப்பை பெற்றுள்ளது என்கிற தகவல் வெளிப்பட்டலும் கூட, அதன் பிரதான அம்சங்கள் மர்மமாகவே இருந்தன. தற்போது ஒன்ப்ளஸ் 6, அதன் வெளியீட்டை நெருங்காவதால், அதன் முழுமையான வடிவமைப்பு மற்றும் விலை நிர்ணயம் தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

ஒன்ப்ளஸ் 6-ன் 'மிரர் பிளாக்' பினிஷை காண முடிகிறது.!

ஒன்ப்ளஸ் 6-ன் 'மிரர் பிளாக்' பினிஷை காண முடிகிறது.!

வெளியான தகவலின் படி, ஒன்ப்ளஸ் 6 ஆனது ஒரு கண்ணாடி பின்புறத்தை கொண்டுள்ளதையும், மற்றும் முன்பக்கத்தில், நாட்ச் வடிவமைப்பிலான டிஸ்பிளேவை கொண்டுள்ளதையும் மிக தெளிவாக காண முடிகிறது. வின்பியூச்சர் (WinFuture) தளம் வழியாக காணப்பட்ட இந்த புதிய லீக்ஸ் புகைப்படத்தில், ஒன்ப்ளஸ் 6-ன் 'மிரர் பிளாக்' பினிஷை காண முடிகிறது.

ஐபோன் 7 மாடல்களில் உள்ள ஜெட் பிளாக் பூச்சுடன் ஒப்பிடும்போது.!

ஐபோன் 7 மாடல்களில் உள்ள ஜெட் பிளாக் பூச்சுடன் ஒப்பிடும்போது.!

ஜெர்மனியின் அமேசான் தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் ஆனது, உலோக பின்புற வடிவமைப்பை தவிர்த்து, கண்ணாடி வடிவமைப்பை பெறும் என்பதை மென்மேலும் உறுதி செய்கிறது. காணப்பட்டுள்ள 'மிர்ரர் பிளாக்' பூச்சு ஆனது மிகவும் அசத்தலாக உள்ளது தான், ஆனால், ஐபோன் 7 மாடல்களில் உள்ள ஜெட் பிளாக் பூச்சுடன் ஒப்பிடும்போது எம்மாதிரியான ஈர்ப்பை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து தான் காண வேண்டும்.

ஒரு வெள்ளை மாறுபாடியில் தோன்றியுள்ளதால்.!

ஒரு வெள்ளை மாறுபாடியில் தோன்றியுள்ளதால்.!

இந்த மிரர் பிளாக் பூச்சு ஆனது, முந்தைய ஒன்ப்ளஸ் ஸ்மார்ட்போன்களில் நாம் பார்த்த மிட்நைட் பிளாக் பூச்சு அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வெளியாகும் ஒன்ப்ளஸ் 6 ஆனது பிளாக் வண்ணத்தில் மட்டும் தான் வெளியாகுமா அல்லது அறிமுகப்படுத்தப்படும் நேரத்தில் பல வண்ண விருப்பங்களை வழங்க திட்டமிட்டுள்ளதா என்பது பற்றி உடனடியாகத் தெரியவில்லை. ஆனால் முந்தைய கசிவுகளில், ஒன்ப்ளஸ் 6 ஒரு வெள்ளை மாறுபாடியில் தோன்றியுள்ளதால், இதர சில வண்ண மாறுபாடுகளை எதிர்பார்க்கலாம்.

ஸ்மார்ட்போனின் நாட்ச் வடிவமைப்பானது.!

ஸ்மார்ட்போனின் நாட்ச் வடிவமைப்பானது.!

கடந்த காலத்தில், சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் ஆன ஒன்ப்ளஸ், இரண்டு வண்ண விருப்பங்களின் கீழ் தான் தனது ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அமேசான் வழியாக கசிந்த ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போனின் நாட்ச் வடிவமைப்பானது, ஒப்போ ஆர15 மற்றும் ஆர்15 டிரீம் மிரர் வெர்ஷன் ஸ்மார்ட்போன்களை போலவே தெரிகிறது.

3.5 மிமீ ஹெட்ஜாக் ஆனது, ஒன்ப்ளஸ் 6-ல் இடம்பெறும்.!

3.5 மிமீ ஹெட்ஜாக் ஆனது, ஒன்ப்ளஸ் 6-ல் இடம்பெறும்.!

பின்புறத்தை பொறுத்தவரை, ப்ளாஷ் மற்றும் கைரேகை சென்சருடன் ஒரு செங்குத்தாக அடுக்கப்பட்ட இரட்டை பின்புற கேமரா அமைப்பு உள்ளது. ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போனின் இரட்டை கேமராக்கள், ஒன்ப்ளஸ் 5டி-ஐ விட சிறந்ததாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். ஸ்மார்ட்போனின் வலது பக்கத்தில் அலெர்ட் ஸ்லைடர் ஒன்று இடம்பெற்றுள்ளது. மற்ற பெரும்பாலான பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் அகற்ற பட்டிருக்கும் 3.5 மிமீ ஹெட்ஜாக் ஆனது, ஒன்ப்ளஸ் 6-ல் இடம்பெறும்.

ஒன்ப்ளஸ் 6-ன் விலை நிர்ணயம்.!

ஒன்ப்ளஸ் 6-ன் விலை நிர்ணயம்.!

அமேசான் ஜெர்மனி வழியாக வெளியான ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மற்றும் இதர அம்சங்கள் தவிர்த்து, ஒன்ப்ளஸ் 6-ன் விலை நிர்ணயமும் வெளியாகியுள்ளது. அதன்படி, ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு கொண்ட அடிப்படை மாதிரியானது 519 யூரோவில் (சுமார் ரூ.41,800) தொடங்கும் என்றும், மறுகையில் உள்ள 128ஜிபி மாடல் ஆனது 569 யூரோவில் (சுமார் ரூ. 45,800) தொடங்கும்.

How to download Movies in your Mobile (GIZBOT TAMIL)
8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பு.!

8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பு.!

இந்த இரண்டு மாடல்களை தவிர்த்து, ஒன்ப்ளஸ் நிறுவனம், இந்த ஆண்டு 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பு கொண்ட மாடல் ஒன்றையும் அறிமுகப்படுத்தவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் விலை நிர்ணயம் பற்றிய வார்த்தைகள் இல்லை. சந்தையில் கிடைக்கும் இதர, பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களின் விளையாடு ஒப்பிடும் போது, ஒன்ப்ளஸ் 6 மலிவானதாகவே இருக்கிறது என்பது வெளிப்படை. இருந்தாலும் அதன் உறுதியான வெற்றியை, மே 16 ஆம் தேதிக்கு பின் தான் அறிய முடியும்.

Best Mobiles in India

English summary
OnePlus 6 leaked in full glory, reveals the 'Mirror Black' finish and price. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X