Home
Mobile

128ஜிபி / 256ஜிபி மாடல்களில் மிரட்டும் ஒன்ப்ளஸ் 6; இந்திய அறிமுகம் எப்போது.?

ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போனின் வெளியீடு மிகத் தொலைவில் இல்லை.

By Muthuraj

ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போனின் வெளியீடு மிகத் தொலைவில் இல்லை. ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடானது வருகிற மே 17 ஆம் தேதி அன்று நடக்கிறது. ரசிகர்களையும் மற்றும் சமூக உறுப்பினர்களையும் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பை வழங்கும், ஒரு சில நிறுவனங்களில் ஒன்ப்ளஸ் நிறுவனமும் அடங்கும். நிகழ்வில் கலந்து கொள்ளும் நபர்கள் புதிய ஸ்மார்ட்போனை, முதன்முறையாக பயன்படுத்தி பார்க்கும் வாய்ப்பு வழங்கப்படும்.

128ஜிபி / 256ஜிபி மாடல்களில் மிரட்டும் ஒன்ப்ளஸ் 6; இந்திய அறிமுகம்.?

அப்படியான ஒரு வாய்ப்பு ஒன்ப்ளஸ் 6 வெளியீட்டிலும் அணுக கிடைக்கும். வெளியீட்டு நிகழ்விற்கான டிக்கெட்டுகள் வெறும் 4 நிமிடங்களில் விற்று தீர்ந்து விட்டாலும் கூட, கவலைப்பட வேண்டாம். மே 17, 2018 அன்று, மும்பையில் நாடாகும் நேரடி நிகழ்ச்சியை பார்க்க ஒரு சிறந்த வாய்ப்பை, ஒன்ப்ளஸ் அறிவித்துள்ளது. அந்த வெளியீட்டின் லைவ் ஸ்ட்ரீமை, ரசிகர்கள் காண வேண்டும் என்கிற முனைப்பில் கீழ், ஒன்ப்ளஸ் நிறுவனம் ஒரு பிரத்யேக பக்கத்தை அமைத்துள்ளது. அதை வழங்கப்பட்டுள்ள லின்க்கின் கீழ் அணுகலாம் (https://www.oneplus.in/launch-6). இந்த இணைப்பை கொண்டு உங்கள் ஸ்மார்ட்போன் அல்லது பிசியில், ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போனின் நேரடி ஒளிபரப்பை காணலாம்.

ஒன்ப்ளஸ் 6 மீது இருக்கும் மாபெரும் எதிர்பார்ப்பை அறிய முடிகிறது.!

ஒன்ப்ளஸ் 6 மீது இருக்கும் மாபெரும் எதிர்பார்ப்பை அறிய முடிகிறது.!

இந்த நிகழ்வின் நுழைவு வவுச்சர்களின் கிடைக்கும் அறிவிப்பை, கடந்த மே 8 ஆம் தேதி, ஒன்ப்ளஸ் அறிவித்தது, அது https://www.oneplus.in/launch-6 என்கிற தளம் வழியாக வாங்க கிடைத்தது. இருப்பினும், இந்த டிக்கெட்டுகள் வெறும் 4 நிமிடங்களில் விற்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இதில் இருந்தே ஒன்ப்ளஸ் 6 மீது இருக்கும் மாபெரும் எதிர்பார்ப்பை அறிய முடிகிறது. தொடக்க நிகழ்வில் கலந்து கொள்ளும் அனைத்து ரசிகர்களும் வரவிருக்கும் முதன்மை ஸ்மார்ட்போனை பயன்படுத்தலாம். சில அதிர்ஷ்டசாலி ஒன்ப்ளஸ் ரசிகர்களுக்கு, அவென்ஜர்ஸ் கேப், மார்வெல் அவென்ஜர்ஸ் டி-ஷர்ட், ஒன்ப்ளஸ் டோடோ பேக், ஒன்ப்ளஸ் நோட்புக் ஆகியவைகளும் கிடைக்கும்.

அதே நாளில் தான் ஒன்ப்ளஸ் 6 லிமிடெட் பதிப்பும் அறிமுகப்படுத்தப்படும்.!

அதே நாளில் தான் ஒன்ப்ளஸ் 6 லிமிடெட் பதிப்பும் அறிமுகப்படுத்தப்படும்.!

அதெல்லாம் வேண்டாம், லைவ் ஸ்ட்ரீமை பார்த்தல் போதும் என்று கூறுபவர்கள், மேற்குறிப்பிட்டுள்ள இணைப்புடன் இணைந்து இருக்கவும். அந்த இணைப்பை ஸ்மார்ட்போன் மற்றும் பிசி வழியாக, உலகெங்கிலும் உள்ள ஒன்ப்ளஸ் ரசிகர்கள் வெளியீட்டு நிகழ்வை நேரடியாக காணலாம். ஒன்ப்ளஸ் 6 வெளியாகும், அதே நாளில் தான் ஒன்ப்ளஸ் 6 லிமிடெட் பதிப்பும் அறிமுகப்படுத்தப்படும். அது சார்ந்த புதிய டீஸர் வீடியோ ஒன்றை ஒன்ப்ளஸ் வெளியிட்டதும், அது OnePlus 6 x Marvels Avengers Limited Edition ஸ்மார்ட்போன் ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

128ஜிபி  / 256 ஜிபி என்கிற அளவிலான உள்ளடக்க சேமிப்பு மாடல்களில் வெளியாகும்.!

128ஜிபி / 256 ஜிபி என்கிற அளவிலான உள்ளடக்க சேமிப்பு மாடல்களில் வெளியாகும்.!

அம்சங்களை பொறுத்தவரை,ஒன்ப்ளஸ் 6-ல் சிறந்த வன்பொருள் திறன்கள் இணைக்கப்பட்டுள்ளன. அதாவது சமீபத்திய ஸ்னாப்டிராகன் 845 சிபியூ உடனான 6 ஜிபி மற்றும் 8 ஜிபி அளவிலான ரேம் கொண்டு இயங்கும். உள்ளடக்க சேமிப்பை பொறுத்தவரை, 128ஜிபி / 256 ஜிபி என்கிற அளவிலான உள்ளடக்க சேமிப்பு மாடல்களில் வெளியாகும். இந்த அளவிலான திறன், தலைசிறந்த வேகத்தையும், செயல்திறனையும் வழங்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். வடிவமைப்பை பொறுத்தவரை, எட்ஜ் டூ எட்ஜ் டிஸ்பிளே மற்றும் நீர் எதிர்ப்பு ஆதாரம் கொண்ட உலோக யூனிபாடி வடிவமைப்பை கொண்டுள்ளது.

மே 21, 2018 அன்று முதல் வாங்க கிடைக்கும்.!

மே 21, 2018 அன்று முதல் வாங்க கிடைக்கும்.!

இதன் கேமராக்கள் வேற லெவலில் இருக்கும் என்பதற்கு, வோக் பத்திரிகையில் வெளியான கவர் போட்டோவே ஆகச்சிறந்த ஆதாரம். ஸ்மார்ட்போன் கொண்டு பதிவு செய்யப்பட்ட முதல் இந்திய பத்திரிகை அட்டை படம் அதுவாகும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அந்த புகைப்படத்தின் வழியாக சில மகத்தான இமேஜிங் திறன்களை காண முடிகிறது. ஒன்ப்ளஸ் 6-ல் இரட்டை லென்ஸ் கேமரா அமைப்பு இடம்பெறும் என்பதும் உறுதியாகியுள்ளது. ஒன்ப்ளஸ் 6-ன் வெளியீட்டை தொடர்ந்து, அமேசான் ப்ரைம் மெம்பர்களுக்கு மே 21, 2018 அன்று முதல் வாங்க கிடைக்கும் என்பதும், அந்த விற்பனையானது மே 21, 2018 அன்று 12 மணிக்கு தொடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
OnePlus 6 launch event tickets sold out in 4 minutes. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X