ஒன்ப்ளஸ் 6 மீதான சலுகைகள்: ரூ.250 தொடங்கி ரூ.25,000 வரை.! என்ஜாய்.!

காத்திருப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. ஒன்ப்ளஸ் நிறுவனம், மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒன்ப்ளஸ் 6-ஐ இன்று இந்தியாவில் அறிமுகம் செய்கிறது.

|

காத்திருப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. ஒன்ப்ளஸ் நிறுவனம், மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒன்ப்ளஸ் 6-ஐ இன்று இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. இந்தியாவில், ஒன்ப்ளஸ் 6 ஆனது, மே 17ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும். ஒன்ப்ளஸ் நிறுவனம், உலகளாவிய ரீதியில் ஒன்ப்ளஸ் ரசிகர்களுக்கு ஒரு நேரடி ஸ்ட்ரீம் இணைப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் ஸ்மார்ட்போன் மற்றும் பிசி வழியாக வெகுஜன மக்களும் பார்வையிடலாம் மற்றும் ஒன்ப்ளஸ் 6-ஐ வெல்லலாம். ஒன்ப்ளஸ் 6 இன் நேரடி அதிகாரப்பூர்வ வெளியீட்டை பார்க்க இந்த இணைப்பை பயன்படுத்தவும். https://www.oneplus.in/launch-6

ஒன்ப்ளஸ் 6 அறிமுக சலுகைகள்
அறிமுக விழாவை இன்னும் இனிமையாக்குவதற்கு ஒன்ப்ளஸ் 6-ஐ அமேசான் இந்தியாவில் விற்பனை செய்வதாக நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விற்பனையில் சில அறிமுக சலுகைகள் மற்றும் தள்ளுபடி,கேஷ்பேக், ஜீரோ ஈஎம்ஐ மற்றும் வரவிருக்கும் ஸ்மார்ட்போனிற்கு கூடுதல் உத்தரவாதம் ஆகியவைகளும் கிடைக்கின்றது. ஆர்வமுள்ள பயனர்கள் அமேசான் பிரைம் வீடியோ கிப்ட் கார்டுகள் மற்றும் அமேசான் கின்டெல் தள்ளுபடிகளையும் பெற முடியும்.

ரூ.250 தொடங்கி ரூ.25,000 வரை.!

ரூ.250 தொடங்கி ரூ.25,000 வரை.!

எஸ்பிஐ கிரெடிட் மற்றும் டெபிட் பயனர்கள், ஒன்ப்ளஸ் 6 மீதான (முதல் வார விற்பனையில் மட்டுமே) கொள்முதலுக்கு ரூ.2000/- என்கிற அளவிலான தள்ளுபடியை பெறுவார்கள். மேலும் நுகர்வோர்களுக்கு முதல் மூன்று மாதங்களுக்கான நோ காஸ்ட் இஎம்ஐ சலுகையும் கிடைக்கும். ஸ்மார்ட்போன் மீதான 12 மாதங்களுக்கான ஆக்சிடென்டல் டேமேஜ் இன்சூரன்ஸ் வழங்குவதற்கு, ஒன்ப்ளஸ் ஆனது சேர்விபை (Servify) உடன் இணைந்துள்ளது. ஐடியா பயனர்களுக்கு ரூ.2,000 கேஷ்பேக் மற்றும் சாதன காப்பீடு கிடைக்கும். அமேசான் பிரைம் வீடியோ சந்தாதாரர்களுக்கு ரூ.250/- மதிப்புள்ள கிப்ட் கார்ட், அமேசான் கின்டெல் மீதான ரூ.500 சலுகை கிடைக்கும். மேலும், ஒன்ப்ளஸ் 6 வாங்குவோர்களுக்கு கிளியர்ட்ரிப் வழியாக ரூ.25,000 மதிப்பிலான விமான டிக்கெட்டுகள் மற்றும் ஹோட்டல் முன்பதிவுகளுக்கான சலுகைகளும் கிடைக்கும்.

புதிய ஃபாஸ்ட் ஏஎப் விற்பனை.!

புதிய ஃபாஸ்ட் ஏஎப் விற்பனை.!

ஒன்ப்ளஸ் நிறுவனம், அதன் ஸ்மார்ட்போன் அறிமுகத்திற்க்கு கிடைக்கும் மிகப்பெரிய வரவேற்பைப் பார்த்து, அதன் அடுத்த பிரீமியம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் ஆன ஒன்ப்ளஸ் 6 மீதான ஃபாஸ்ட் ஏஎப் விற்பனையை அறிவித்துள்ளது. இந்த புதிய ஃபாஸ்ட் ஏஎப் விற்பனையானது அமேசான் இந்தியாவுடன் ஆன ஒரு பிரத்யேக கூட்டணியில் நடக்கிறது. ஆர்வமுள்ள பயனர்கள், ஒன்ப்ளஸ் 6-ஐ மட்டுமின்றி சில கூடுதல் நன்மைகளையும் இந்த வாய்ப்பின் கீழ் பெறலாம். விருப்பமுள்ள பயனர்கள், ஒன்ப்ளஸ் 6-ன் இந்திய அறிமுகத்தின் போதே, அதாவது வெளியான முதல் நாளிலேயே, ரிசர்வ் செய்ய கிடைக்கும். நேற்று முதல் தொடங்கப்பட்ட இந்த 'ஃபாஸ்ட் AF' விற்பனையானது மே 16, 2018 வரை தொடரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரூ.2000/- மதிப்பிலான கூடுதல் நன்மைகளும் கிடைக்கும்.!

ரூ.2000/- மதிப்பிலான கூடுதல் நன்மைகளும் கிடைக்கும்.!

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, நீங்கள் Amazon.in வலைத்தளத்தில். ரூ.1000/- மதிப்பிலான ஒரு இ-கிப்ட் கார்டை வாங்க வேண்டும். அதை மே 21 மற்றும் மே 22-ல் அமேசான் தளத்தில், ஒன்ப்ளஸ் 6-ஐ வாங்கும் போது பயன்படுத்தலாம். இந்த ரூ.1000/- மதிப்பிலான நன்மைகளுடன் சேர்த்து, ஒன்ப்ளஸ் 6-ஐ வாங்கு, போது ரூ.1000/- கேஷ்பேக்கும் கிடைக்கும். ஆகமொத்தம் இந்த வாய்ப்பின் கீழ் ஒரு பயனருக்கு ஒன்ப்ளஸ் 6 உடன் சேர்த்து ரூ.2000/- மதிப்பிலான கூடுதல் நன்மைகளும் கிடைக்கும்.

கூடுதலாக 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளர் உத்தரவாதம்.!

கூடுதலாக 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளர் உத்தரவாதம்.!

கூறப்படும் அமேசானின் இ-கிப்ட் கார்ட் ஆனது உங்களை ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போனை, முதல் நாளில் வாங்க தகுதியான அமேசான் ப்ரைம் மெம்பர்களுடன் சேர்த்துக்கொள்ள உதவும். இந்த முதல் விற்பனை மே 21 அன்று நடக்கும். ஒன்ப்ளஸ் 6-ஐ உடனடியாக வாங்கும், இந்த பொன்னான வாய்ப்புடன் சேர்த்து அமேசான் பயனர்களுக்கு ஒன்ப்ளஸ் 6 மீதான ஒரு சிறப்பு சலுகையும் கிடைக்கும்.அதாவது, ஒன்ப்ளஸ் 6 மீது ஏற்கனவே இருக்கும் 1 ஆண்டு உத்தரவாதத்தின் மேல் கூடுதலாக 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளர் உத்தரவாதத்தை அமேசான் வழங்குகிறது. இது ஒட்டுமொத்த திட்டமும் ஒன்ப்ளஸ் ரசிகர்களை குஷியாக்கி உள்ளது.

2018 ஆம் ஆண்டின் மிகவும் அதிகமாக எதிர்பார்க்கப்படும் ஒரு ஸ்மார்ட்போன்.!

2018 ஆம் ஆண்டின் மிகவும் அதிகமாக எதிர்பார்க்கப்படும் ஒரு ஸ்மார்ட்போன்.!

இந்த பாஸ்ட் ஏஎப் விற்பனையின் முழு முதல் நோக்கமுமே, அனைத்து பயனர்களும் ஒன்ப்ளஸ் 6-ஐ அறிமுகம் ஆகும் முதல் நாளிலேயே வாங்க வேண்டும் என்பதும், அதனை ஆர்டர் செய்யும் திறனை கொண்டிருக்க வேண்டும் என்பது தான். குறிப்பாக, ஒன்ப்ளஸ் 6 ஆனது 2018 ஆம் ஆண்டின் மிகவும் அதிகமாக எதிர்பார்க்கப்படும் ஒரு ஸ்மார்ட்போன் என்பதால், இந்த வாய்ப்பானது மிகவும் வரவேற்கத்தக்கதாக உள்ளது.

இந்தியாவின் முதல் பத்திரிக்கை அட்டைப்படம்.!

இந்தியாவின் முதல் பத்திரிக்கை அட்டைப்படம்.!

ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போனின் கேமராக்கள், ஸ்மார்ட்போன் சந்தையில் ஒரு புரட்சியை ஏற்படுத்த உள்ளதை முன்னரே வெளிப்படுத்தும் வண்ணம், ஸ்மார்ட்போன் கேமரா கொண்டு எடுக்கப்பட்ட இந்தியாவின் முதல் பத்திரிக்கை அட்டைப்படம் ஆனது வெளியானது. அதை எடுத்தது ஒன்ப்ளஸ் 6 கேமரா தான், அந்த பத்திரிக்கை பிரபல வோக் மேகஸின் ஆகும். அந்த கவர் போட்டோவில் இடம் பெற்றவரா பிரபலமான பாலிவுட் நடிகையான ஆதிதி ராவ் ஹைடிரி ஆவார். அந்த புகைப்படத்தில் இருந்து வரவிருக்கும் ஒன்ப்ளஸ் 6 ஆனது, ஒரு 20 எம்பி + 16 எம்பி அளவிலான இரட்டை லென்ஸ் கேமரா அமைப்பை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்னாப்டிராகன் 845 செயலி மற்றும் ஒரு 256ஜிபி சேமிப்பு மாறுபாடு.!

ஸ்னாப்டிராகன் 845 செயலி மற்றும் ஒரு 256ஜிபி சேமிப்பு மாறுபாடு.!

வேகம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றில் கவனம் செலுத்தும், ஒன்ப்ளஸ் 6 ஆனது, பயனர்களுக்கு ஒரு உறுதியான அனுபவத்தை வழங்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். அதனை உறுதிப்படுத்தும் வண்ணம், ஒன்ப்ளஸ் 6 ஆனது ஸ்னாப்டிராகன் 845 செயலி மற்றும் ஒரு 256ஜிபி சேமிப்பு மாறுபாடு ஆகியவைகளை கொண்டு வெளியாகிறது. மேலும் வெளியாகும் புதிய ஒன்ப்ளஸ் 6 ஆனது, ஹை எண்ட் இரட்டை லென்ஸ் கேமராவை கொண்டு அறிமுகமாகவுள்ளது. மேலும் ஒன்ப்ளஸ் 6 ஆனது சமீபத்திய OxygenOS உடனான ஆண்ட்ராய்டு ஓரியோ ஓஎஸ் கொண்டு இயங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எல்லாவற்றிக்கும் மேலாக ஒன்ப்ளஸ் 6 ஆனது நீர்-தூசி எதிர்ப்பு வடிவமைப்பு கொண்டு வரும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உடன் ஒரு பெரிய பெஸல்லேஸ் டிஸ்பிளே, எஃப்எச்டி+ டிஸ்பிளே, அனைத்து கண்ணாடி வடிவமைப்பு, மற்றும் ஒரு பெரிய பேட்டரி அலகு ஆகியவைகளும் கொண்டிருக்கும். மேலும் விவரங்களுக்கு, அதிகாரப்பூர்வ ஒன்ப்ளஸ் வலைத்தளத்தைப் பார்வையிடவும்: www.oneplus.in

Best Mobiles in India

English summary
OnePlus 6 is almost here and we cannot wait to own it. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X