8ஜிபி ரேம்+ 256ஜிபி சேமிப்பும் உறுதி; நியாயமான விலையும் உறுதி; ஆப்பிளுக்கு அடி.!

ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களின் தலைமை சாதங்களை தூக்கி சாப்பிடும் அளவிலான விலை நிர்ணயம் மற்றும் ஒரு நம்பமுடியாத 8ஜிபி ரேம் + 256ஜிபி என்கிற அளவிலான சேமிப்பு மாதிரி கொண்டிருக்கும்.

|

இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஒன்ப்ளஸ் நிறுவனத்தி சிஇஓ ஆன பீட் லாவ், நிறுவனத்தின் வரவிருக்கும் தலைமை ஸ்மார்ட்போன் ஆனது 2018-ஆம் ஆண்டும் காலாண்டிற்குள் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறியிருந்தார். அது உறுதியாகும் படி, கடந்த சில நாட்களாகவே தொடர்ச்சியான முறையில் ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போனின் லீக்ஸ் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.

முன்னர் வெளியானதொரு தகவலின்படி, கூறப்படும் ஒன்ப்ளஸ் 6 ஆனது சில அற்புதமான வன்பொருள் மேம்பாடுகள் மற்றும் ஒரு பெரிய ஸ்க்ரீன்-டூ-பாடி விகிதம் (19: 9) கொண்ட, ஒரு முற்றிலும் மாறுபட்ட புதிய வடிவமைப்பு மொழி கொண்டிருக்கும். உடன் ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களின் தலைமை சாதங்களை தூக்கி சாப்பிடும் அளவிலான விலை நிர்ணயம் மற்றும் ஒரு நம்பமுடியாத 8ஜிபி ரேம் + 256ஜிபி என்கிற அளவிலான சேமிப்பு மாதிரி கொண்டிருக்கும்.

6.28 அங்குல ஆப்டிக் அமோஎல்இடி டிஸ்பிளே.!

6.28 அங்குல ஆப்டிக் அமோஎல்இடி டிஸ்பிளே.!

இதுவரை வெளியான ஒன்ப்ளஸ் 6 அம்சங்களையே ஜீரணித்துக்கொள்ள முடியாத ஆப்பிள் நிறுவனத்தின் தலையில் மேலுமொரு இடியை இறக்கியுள்ளது - இன்று வெளியானதொரு ஒன்ப்ளஸ் 6 கான்செப்ட் வீடியோ. வெளியாகியுள்ள புதிய வீடியோவின் கீழ், ஒன்ப்ளஸ் 6 ஆனது ரெட், வயலட் மற்றும் பிளாக் ஆகிய மூன்று வண்ண மாறுபாடுகளில் காட்சிப்படுகிறது. மேலும் ஒன்ப்ளஸ் 6 ஆனது ஒரு அலுமினிய உடல் வடிவமைப்பை கொண்ட ஒரு 6.28 அங்குல ஆப்டிக் அமோஎல்இடி டிஸ்பிளேவும் கொண்டுள்ளது.

16எம்பி + 16 எம்பி ரியர் மற்றும் 16எம்பி செல்பீ

16எம்பி + 16 எம்பி ரியர் மற்றும் 16எம்பி செல்பீ

மேலும் வீடியோவில் காட்சிப்படும் ஒன்ப்ளஸ் 6 ஆனது, முழுமையான எச்டி + திரை தீர்மானம் கொண்ட, 2280 x 1080 என்கிற பிக்சல்கள் அளவிலான டிஸ்பிளேவை வெளிப்படுத்துகிறது. உடன் க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 845 எஸ்ஓசி, முன்னர் வெளியான தகவலை உறுதி செய்யும்படியான 8 ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு (ஹை-எண்ட் மாடல்), எல்இடி ப்ளாஷ் கொண்ட இரண்டு 16எம்பி கேமராக்கள் (இரட்டை பின்புற கேமரா அமைப்பு) மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் புகுத்தப்பட்ட 16எம்பி செல்பீ கேமரா ஆகியவைகளும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

பேஸ் ஐடியை விட அதிவேகமாக செயல்படும் 3டி முக அடையாள அங்கீகாரம்.!

பேஸ் ஐடியை விட அதிவேகமாக செயல்படும் 3டி முக அடையாள அங்கீகாரம்.!

பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தமட்டில், ஒன்ப்ளஸ் 6 ஆனது, அதன் டிஸ்பிளேவில் உட்பொதிக்கப்பட்ட கைரேகை ஸ்கேனர் ஒன்றை கொண்டுள்ளது.இதுதவிர, சமீபத்திய ஆப்பிள் ஐபோன்களில் இடம்பெற்றுள்ள பேஸ் ஐடியை விட அதிவேகமாக செயல்படுமென கருதப்படும் 3டி முக அடையாள அங்கீகாரமும் இக்கருவியின் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது.

கேட்.16 சூப்பர்பாஸ்ட் எல்டிஇ ஜிகாபைட் இணைப்பு.!

கேட்.16 சூப்பர்பாஸ்ட் எல்டிஇ ஜிகாபைட் இணைப்பு.!

மேலும் ஒன்ப்ளஸ் 6 ஆனது கேட்.16 சூப்பர்பாஸ்ட் எல்டிஇ ஜிகாபைட் இணைப்பும் கொண்டுவரும். உடன் ப்ளூடூத், வைஃபை, ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட மற்ற இணைப்பு விருப்பங்களும் இடம்பெறும். மற்ற நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களை போலல்லாமல், ஒன்ப்ளஸ் நிறுவனமானது இக்கருவியை 3.5மிமீ ஹெட்ஜாக் இணைப்புடன் ஒட்டிக்கொள்ளும் என்றே தோன்றுகிறது.

இந்திய மதிப்பில் ரூ.48,000/-

இந்திய மதிப்பில் ரூ.48,000/-

ஒரு 5வி / 4ஏ டாஷ் சார்ஜ் ஆதரவுடன் கூடிய 3400எம்ஏஎச் பேட்டரித்திறன் கொண்டு சக்தியூட்டப்படும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ அடிப்படையிலான ஆக்ஸிஜென்ஸ் 6.0 ஓஎஸ் கொண்டு இயக்கப்படும். இதன் விலையுயர்ந்த, 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பு கொண்ட உயர் இறுதியில் மாறுபாடானது சுமார் 749 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ,48.000/-) என்கிற புள்ளியை எட்டலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

நியாமான விலை நிர்ணயம்.!

நியாமான விலை நிர்ணயம்.!

மறுகையில் உள்ள லோ-எண்ட் மாறுபாடுகளானது - அதாவது 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு மற்றும் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு மாறுபாடுகள் - முரளியே 549 முதல் 569 அமெரிக்க டாலர்கள் என்பதற்கு இடையிலான விலை நிர்ணயத்தை பெறலாம். இந்த விலை நிர்ணயமானது மிகவும் நியாமானது என்பதை ,மறுக்கவே முடியாது

How to download Movies in your Mobile (GIZBOT TAMIL)
ஒப்பிடும்போது இன்னும் நியாயமானதாக தெரிகிறது.!

ஒப்பிடும்போது இன்னும் நியாயமானதாக தெரிகிறது.!

ஒருவேளை கூறப்பட்டுள்ள விலை உண்மையென்றால், இதுவரை வெளியான ஒன்ப்ளஸ் ஸ்மார்ட்போன்களிலேயே மிகவும் விலையுயர்ந்த சாதனம் இதுவாகத்தான் இருக்கும். ஆனால் இதர நிறுவனங்களின் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களுடன் - ஆப்பிள் ஐபோன் எக்ஸ் மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்9 ப்ளஸ் - ஒப்பிடும்போது, ​​ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போனின் விலை இன்னும் நியாயமான தெரிகிறது.

Best Mobiles in India

English summary
OnePlus 6 Imagined in a New Concept Video With In-Display Fingerprint Scanner. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X