நம்பமுடியாத 8ஜிபி ரேம் + 256ஜிபி; மிக நியாயமான விலை; ஆப்பிள்-சாம்சங் காலி.!

ஹை-எண்ட் அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போன்களை ஆப்பிளை விட மலிவான விலைக்கு கொடுக்க முடியும் என்பதை நிரூபித்த நிறுவனம் - ஒன் ப்ளஸ் தான்.!

|

இன்னும் ஒரு சில மாதங்களில், வெளியாகப்போகும் ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போனை நினைத்து கடந்த பல நாட்களாக தூக்கத்தை தொலைத்துவிட்டு சுற்றுகிறது ஆப்பிள் நிறுவனம். ஏனெனில் ஹை-எண்ட் அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போன்களை ஆப்பிளை விட மலிவான விலைக்கு கொடுக்க முடியும் என்பதை நிரூபித்த நிறுவனம் - ஒன் ப்ளஸ் தான்.!

அந்நிறுவனத்தின் ஒன்ப்ளஸ் 5 மற்றும் 5டி வெற்றியை தொடர்ந்து, அடுத்த தலைமை ஸ்மார்ட்போன் ஆன ஒனப்ளஸ் 6 வெளியீடு சார்ந்த பணிகள் திவீரமாக நடைபெற்று வருகிறது. அதுவும் கூறப்படும் ஒன்ப்ளஸ் 6 ஆனது சில அற்புதமான வன்பொருள் மேம்பாடுகள் மற்றும் ஒரு பெரிய ஸ்க்ரீன்-டூ-பாடி விகிதம் (19: 9) கொண்டு ஒரு முற்றிலும் புதிய வடிவமைப்பு மொழியை வெளிப்படுத்தவுள்ளது என்பதால், எதிர்பார்ப்புகளை எக்கச்கக்கமாய் எகிறியுள்ளது. அதற்கு மேலும் தீனிபோடும் வகையில், சில அம்சங்கள் மற்றும் விலைப்புள்ளி சார்ந்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

மிக நியாயமான விலைப்புள்ளி.!

மிக நியாயமான விலைப்புள்ளி.!

வெளியான தகவலின்படி, ஒன்ப்ளஸ் 6 ஆனது 256ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பை கொண்டிருக்கும் மற்றும் அதன் விலை நிர்ணயம் சுமார் 749 அமெரிக்க டாலர்கள் (ஏறத்தாழ ரூ.48,800/-) என்கிற புள்ளியில் இருக்குமென்பது கூடுதல் சுவாரசியம்.

இரண்டு விருப்பங்களில் மட்டுமே எதிர்பார்க்கப்பட்டது.!

இரண்டு விருப்பங்களில் மட்டுமே எதிர்பார்க்கப்பட்டது.!

நினைவூட்டும் வண்ணம், ஒன்ப்ளஸ் 5டி ஆனது இரண்டு சேமிப்பு விருப்பங்களில் - 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள் சேமிப்பு மற்றும் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்ளடக்க சேமிப்பு - தொடங்கப்பட்டது. அதே வகையிலான சேமிப்பு விருப்பங்கள் வரவிருக்கும் ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போனில் இடம்பெறுமென எதிர்பார்க்கப்பட்டது.

8 ஜிபி ரேம் + ஒரு பெரிய 256 ஜிபி உள் சேமிப்பு.!

8 ஜிபி ரேம் + ஒரு பெரிய 256 ஜிபி உள் சேமிப்பு.!

ஆனால், வெளியான லீக்ஸ் புகைப்படத்தில் 8 ஜிபி ரேம் மற்றும் ஒரு பெரிய 256 ஜிபி உள் சேமிப்புடன் கூடிய மூன்றாவது மாறுபாடு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஆக இதுவொரு உயர்மட்ட மாறுபாடாக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுகையில் உள்ள அடிப்படை மற்றும் நடுத்தர மாறுபாட்டின் விலை பற்றிய வார்த்தைகள் ஏதுமில்லை.

ஒப்பிடும்போது இன்னும் நியாயமானதாக தெரிகிறது.!

ஒப்பிடும்போது இன்னும் நியாயமானதாக தெரிகிறது.!

ஒருவேளை கூறப்பட்டுள்ள விலை உண்மையென்றால், இதுவரை வெளியான ஒன்ப்ளஸ் ஸ்மார்ட்போன்களிலேயே மிகவும் விலையுயர்ந்த சாதனம் இதுவாகத்தான் இருக்கும். ஆனால் இதர நிறுவனங்களின் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களுடன் - ஆப்பிள் ஐபோன் எக்ஸ் மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்9 ப்ளஸ் - ஒப்பிடும்போது, ​​ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போனின் விலை இன்னும் நியாயமான தெரிகிறது.

சில பிரதான அம்சங்களையும் வெளிப்படுத்தியுள்ளது.!

சில பிரதான அம்சங்களையும் வெளிப்படுத்தியுள்ளது.!

இருப்பினும் இதுவொரு லீக்ஸ் தகவல் என்பதை மீண்டும் நினைவூட்ட விரும்புகிறோம். அதாவது இதன் நம்பகத்தன்மையை நாம் சரிபார்க்க முடியாது என்று அர்த்தம். வெளியான லீக்ஸ் புகைப்படமானது விலைப்புள்ளியை மட்டுமின்றி, ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போனின் சில பிரதான அம்சங்களையும் வெளிப்படுத்தியுள்ளது.

Translate English to Tamil In your Mobile Easily (GIZBOT TAMIL)
6.2 அங்குல டிஸ்பிளே மற்றும் டாஷ் சார்ஜ் ஆதரவு.!

6.2 அங்குல டிஸ்பிளே மற்றும் டாஷ் சார்ஜ் ஆதரவு.!

கூறப்படும் ஒன்ப்ளஸ் 6 ஆனது ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 16எம்பி + 20எம்பி இரட்டை பின்புற கேமரா அமைப்பு, 6.2 அங்குல டிஸ்பிளே மற்றும் டாஷ் சார்ஜ் ஆதரவு ஆகியவைகளை கொண்டுருக்கும். மேலும் ஒன்ப்ளஸ் 6 பற்றிய தொடர்ச்சியான அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் தளத்தின் மொபைல் பிரிவுடன் இணைந்திருக்கவும்.

Best Mobiles in India

English summary
OnePlus 6 Expected to Come With 256GB of Storage. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X