வயர்லெஸ் சார்ஜிங் வசதியுடன் வெளிவரும் ஒன்பிளஸ் 6.!

இந்த சாதனத்தின் முன்புறம் அசத்தலான கேமரா மற்றும் இயர்பீஸ் போன்றவை இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு வலது பொத்தான்மற்றும் அலெர்ட் ஸ்லைடர் ஆனது வலதுபுறத்தில் வைக்கப்படுகின்ற.

|

மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் தற்சமயம் ஆன்லைனில் வெளிவந்துள்ளது, அதன்படி ஒன்பிளஸ் 5டி ஸ்மார்ட்போனை விட அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போது வெளிவந்துள்ள அறிவிப்பில் வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் கண்ணாடி மற்றும் பீங்கான் உடல் வடிவமைப்பு கொண்ட ஒரு புஃல் ஸ்க்ரீன் டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும் ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் மாடல்.

ஐபோன் எக்ஸ் ஸ்மார்ட்போனின் வடிவமைப்பைக் கொண்டுள்ளது, இந்த அட்டகாசமான ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் மாடல். மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த சாதனம். அதன்பின்பு கண்டிப்பாக டூயல் கேமரா வசதியுடன் வெளிவரும் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.

ஒன்பிளஸ் 6:

ஒன்பிளஸ் 6:

இந்த ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை சிறந்த ஸ்க்ரீன்-டூ-பாடி விகிதத்தை கொண்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின்
வடிவமைப்புக்கு அதிக முக்கியதுவம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஐபோன் எக்ஸ் வடிவமைப்பைக் கொண்டுள்ளதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

ஸ்னாப்டிராகன் 845:

ஸ்னாப்டிராகன் 845:

ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஒசி செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆப் மற்றும் விளையாட்டு அம்சங்களுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வால்யூம் ராக்கர்ஸ்:

வால்யூம் ராக்கர்ஸ்:

இந்த சாதனத்தின் முன்புறம் அசத்தலான கேமரா மற்றும் இயர்பீஸ் போன்றவை இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு வலது பொத்தான் மற்றும் அலெர்ட் ஸ்லைடர் ஆனது வலதுபுறத்தில் வைக்கப்படுகின்ற என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வால்யூம் ராக்கர்ஸ் இடதுபுறத்தில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நினைவகம்;

நினைவகம்;

இந்த ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6ஜிபி அல்லது 8ஜிபி ரேம் கொண்டு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின் 128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெறலாம். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இடம்பெற்றுள்ளது.

 முக அங்கீகாரம் :

முக அங்கீகாரம் :

ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனில் ஆப்பிள் ஐபோன் எக்ஸ் சாதனத்தில் இடம்பெற்றுள்ள முக அங்கீகாரம் அம்சங்களுடன் வெளிவரும்
எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு 3டி கேமரா வசதி அம்சங்கள் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் 6 சாதனம்.

How to check PF Balance in online (TAMIL)
இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
OnePlus 6 Expected to Arrive With Wireless Charging and Glass Body; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X