விரைவில் வெளியாகும் முதன்மையான ஸ்மார்ட்போன்: ஒன்ப்ளஸ் 6 பற்றிய முழுவிவரம்.!

  இந்திய சந்தையில் மே17 அன்று அதிகாரப்பூர்வமாக வெளியாகும் முன்னரே இணைய உலகில் பரபரப்பை கிளிப்பியிருக்கிறது ஒன்ப்ளஸ்6. சிறந்த பிராண்ட் என்று நம்பும் அளவிற்கு, விரைவில் வெளியாகவுள்ள இந்த முதன்மையான ஸ்மார்ட்போன் ஒப்பிடமுடியாத வேகத்தையும் செயல்திறனையும் தரக்கூடியது. அதேநேரம் இந்த புதிய ஒன்ப்ளஸ் மொபைலின் வடிவமைப்பு,திரை மற்றும் கேமரா அமைப்புகள் மொபைல் உலகில் புதிய மைல்கல்லாக அமையப்போகின்றன.

  விரைவில் வெளியாகும் முதன்மையான ஸ்மார்ட்போன்: ஒன்ப்ளஸ் 6.!

  புதிதாக வெளிவர உள்ள இந்த ஸ்மார்ட்போனிற்கு வாடிக்கையாளர்கள் இடையே எழுந்துள்ள பெரும் எதிர்பார்ப்பை காணும் போது, ஒன்ப்ளஸ்6 பற்றிய அனைத்து தகவல்களையும் ஒரே இடத்தில் எளிதாக மக்கள் தெரிந்துகொள்ளவேணும் என நினைக்கிறோம். எனவே ஒன்ப்ளஸ்6 ன் சிறப்பம்சங்கள், வன்பொருள், பாகங்கள், எதிர்பார்க்கும் விலை மற்றும் எப்போது கிடைக்கும் என்பதை இங்கே காணலாம். ஒன்ப்ளஸ்6 பற்றி தெரிந்த அனைத்து விசயங்களும் இதோ உங்களுக்காக!

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  வடிவமைப்பு: தூசி, நீர் எதிர்ப்புதிறனுள்ள இசைவான உலோக வெளிப்புறம்

  ஒன்ப்ளஸ் பிராண்ட் எப்போதுமே உயர்தர பொருட்களை மட்டுமே கொண்டு தனது ப்ரீமியம் கருவிகளை வடிவமைப்பதில் ஆர்வம் மிகுந்தது மற்றும் அதை எப்போதும் விட்டுகொடுத்ததும் இல்லை. விரைவில் வெளியாகும் ஒன்ப்ளஸ்6 ம் அதே தரத்தில் தான் இந்நிறுவனம் வெளியிடுகிறது. 'மாற்றியமைக்கப்பட்ட வடிவத்தில் மேலும் மூழ்குங்கள்' என்ற டேக்லைனுடன் டிவிட்டரில் ஒன்ப்ளஸ்6 ன் முதல் அதிகாரப்பூர்வ படம் வெளியிடப்பட்டுள்ளது. அந்த படம் புதிய போனின் வடிவமைப்பை பற்றிய புதிய பார்வையை ஏற்படுத்தியுள்ளது.

  ஒன்ப்ளஸ்6 மொபைல்,அதன் மென்மையான பூச்சு, வளைவான மூலைகள் மற்றும் மென்மையான வளைவுகள் காரணமாக மிக அழகாக தெரிகிறது. மேலும் இது கண்ணாடியாலான பின்புறத்துடன் வெளிவருவதாக சமீபத்தில் நடைபெற்ற சந்திப்பு ஒன்றில் இந்நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சி.ஈ.ஓ வான பீடே லா உறுதிபடுத்தியுள்ளார். இந்த புதிய மொபைலில் இரண்டு பின்புற கேமராக்கள், வட்டவடிவ பிங்கன்பிரிண்ட் சென்சார் மற்றும் மற்ற ஒன்ப்ளஸ் பிராண்டிங் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்பார்த்தப்படியே, இடதுபுறத்தில் ஒலி பொத்தான்களும், தனிச்சிறப்பான 'அலர்ட் ஸ்லைடரும்' உள்ளன. முக்கியமாக பெரிதும் விரும்பப்பட்ட 3.5மிமி ஹெட்போன் ஜாக்கும் தள்ளிப்போய்விடவில்லை.


  மேலும் ஒன்ப்ளஸ் நிறுவனம் தனது புதிய ஒன்ப்ளஸ்6 கருவிகளை சில புதிய ஆச்சர்யமூட்டும் வண்ணங்களில் அறிமுகப்படுத்தவுள்ளது.

  ஒன்ப்ளஸ் நிறுவனம் டிவிட்டரில் வெளியிட்ட அதிகாரப்பூர்வ டீசர் வீடியோ மூலம் இந்த புதிய ஒன்ப்ளஸ்6, முதல் நீர் எதிர்ப்புதிறன் வாய்ந்த கருவியாக இருக்கும் என யூகிக்கமுடிகிறது.இதன் மூலம் ஸ்மார்ட்போன் ஆர்வலர்கள், ஒன்ப்ளஸ்6 என்னென்ன வசதிகளுடன் வெளிவரப் போகிறது என ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

  இன்டெலிஜென்ட் அலர்ட் ஸ்லைடர் (Intelligent Alert Slider)

  ஒன்ப்ளஸ்6 மொபைலின் மற்றுமொரு குறிப்பிடத்தகுந்த அம்சம் புதிய இன்டெலிஜென்ட் அலர்ட் ஸ்லைடர். இந்த புதிய ஸ்மார்ட்போனில் உள்ள அலர்ட் ஸ்லைடர் வசதி ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் டிவிட் மூலம் வெளிவந்தது. இந்த அலர்ட் ஸ்லைடர் மூலம் ஒன்ப்ளஸ்6 ல் கேமராவின் போகஸை சரி செய்யலாம் என்ற தனித்துவமான மற்றும் ஆச்சர்யமான வசதி உள்ளது.

  திரை: எட்ஜ் டூ எட்ஜ் பிக்சல் பாப்பிங் எப்.ஹெச்.டி திரை

  புதிய நாட்ச் வடிவமைப்பின் மூலம் பார்க்கக்கூடிய பகுதியின் பரப்பளவை அதிகரித்துள்ளதாக ஒன்ப்ளஸ் உறுதிசெய்துள்ளது. திரையின் மேல்பகுதியில் உள்ள காலிஇடத்தை குறிப்பிட்ட அளவு குறைத்துள்ளனர். இந்த புதிய திரையின் மேல்மத்திய பகுதியின் மிகக்குறைந்த இடத்தையே இந்த நாட்ச் பிடித்துள்ளது.

  ஒன்ப்ளஸ்6 ன் 6 இன்ச் எட்ஜ் டூ எட்ஜ் பிக்சல் பாப்பிங் எப்.ஹெச்.டி திரை கொரில்லா கிளாஸ் பாதுகாப்பை கொண்டுள்ளது. மேலும் இதில் புதிதாக சைகைகளின் மூலம் கட்டுப்படுத்தும் வசதியும் உள்ளது.

  'சைகைகள் மூலம் அனுபவத்தை வேகப்படுத்துங்கள்' என்ற டேக்லைனுடன் வெளியான 6 நொடி வீடியோ மூலம், பல்வேறு சைகைகள் மூலம் கட்டுபடுத்தும் புதிய வசதிகளை அறியமுடிகிறது.

  கேமரா: சீரமைக்கப்பட்ட டூயல் லென்ஸ் கேமரா

  சமீபத்தில் ஒன்ப்ளஸ்6 கேமரா பற்றிய தகவல் அனைவரையும் குழப்பிவிட்டது. ஏஸ் போட்டோகிராப்பரான எரிக்கோஸ் ஆண்ட்ரூ , வோக் இந்தியாவிற்காக பாலிவுட் நடிகை அதிதி ராவின் முழு போட்டோ சூட்டையும் விரைவில் வெளியாகவுள்ள ஒன்பளஸ்6 மொபைலில் எடுத்துள்ளார். அதன் மூலம் இந்த மொபைல் எவ்வளவு அழகாக போட்டோ எடுக்கிறது என தெரியவந்துள்ளது.

  ஒன்ப்ளஸ்6 மொபைலின் டூயல் லென்ஸ் கேமராவில் உள்ள இமேஜ் சென்சார் மூலம் புகைப்படங்களின் தரத்தை மேலும் அதிகரித்துள்ளது. கேமராவை பற்றிய பிற விவரங்கள் வெளியாகவில்லை என்றாலும், புகைப்படங்களின் தரம் மேலும் அதிகரிப்பது உறுதி.

  வன்பொருள் : சிறப்பான சி.பி.யூ, ரேம் மற்றும் ஜி.பி.யூ

  ஒன்ப்ளஸ் நிறுவனம் வன்பொருள் விசயத்தில் எப்போதும் சமரசம் செய்ததே இல்லை மற்றம் சிறப்பான சிப்செட் மற்றும் ரேம் இணையை அளித்துள்ளது. இதன் மூலம் விரைவில் வெளியாகும் ஒன்ப்ளஸ்6 தான் சந்தையில் சிறந்ததாக இருக்கும். இதில் புதிய ஸ்னாப்டிராகன் 845 சி.பி.யூ, 8GB ரேம் மற்றும் 246GB உள்ளார்ந்த சேமிப்புதிறன் உள்ளது. இந்த சேர்க்கையின் மூலம் ஒப்பிட முடியாத அளவு வேகம் மற்றும் செயல்திறனுடன் இயங்கப்போகிறது ஒன்ப்ளஸ்6.

  மென்பொருள் : புதிய ஆக்ஸிஜன் ஓ.எஸ்

  உயர்தர வன்பொருளுடன் சிறப்பு இணைப்பாக, புதிய ஆக்ஸிஜன் ஓ.எஸ்-ஐ அடிப்படையாக கொண்ட கூகுள் ஆண்ராய்டு மென்பொருளை கொண்டுள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் ஒன்ப்ளஸ்6 ஆண்ராய்டு பி மென்பொருள் அப்டேட்டை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  ஒன்ப்ளஸ்6 மார்வல் அவென்சர்ஸ் ஸ்பெசல் எடிசன்

  பெரிய செய்தி என்னவென்றால், ஒன்ப்ளஸ் ஸ்மார்ட்போனில் குறைந்த வகைகளே உள்ளன என்பதாகும். நிறுவனம் வெளியிட்ட டீசர் மூலம் விரைவில் வெளியாகும் ஒன்ப்ளஸ்6 ன் ஸ்பெசல் எடிசன் உறுதிபடுத்தப்பட்டது. ஒன்ப்ளஸ்6 மார்வல் அவென்சன்ஸ் ஸ்பெசல் எடிசன் ஸ்மார்ட்போன் மே17, 2018 அன்று இந்திய சந்தையில் வெளியாகிறது. ஆனால் இது அமேசானில் மட்டுமே கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  கடந்தாண்டு வெளியாகி உலகம் முழுக்க சக்கப்போடு போட்ட ஒன்ப்ளஸ்5டி ஸ்டார்வார் எடிசன் போல ஒன்ப்ளஸ்6 மார்வல் அவென்சன்ஸ் ஸ்பெசல் எடிசனும் வரலாறு படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  விலை மற்றும் கிடைக்கும் இடங்கள்

  ஒன்ப்ளஸ் 6 ன் வெளியீடு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் மேலும் காத்திருக்கத் தேவையில்லை. ஒன்ப்ளஸ்6 மார்வல் அவென்சன்ஸ் ஸ்பெசல் எடிசன் ஸ்மார்ட்போன் மே17, 2018 அன்று இந்திய சந்தையில் மும்பையில் வெளியாகிறது. அறிமுக விழா 8 நகரங்களில் மே21-22 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு, டெல்லி, மும்பை, பூனே, சென்னை , ஹைதராபாத், கொல்கத்தா மற்றும் அகமதாபாத் நகரங்களில் இந்த அறிமுகவிழா நடைபெறுகிறது.இந்த இரண்டு நாட்களில், முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஒன்ப்ளஸ்6 வாடிக்கையாளர்களுக்கு விற்கப்படும்.

  விலையை பொறுத்தவரை, ஒன்ப்ளஸ்6 ன் நிலையான விலை ரூ39,999 ஆக இருக்கலாம். ரேம் மற்றும் சேமிப்புதிறனை பொறுத்து விலை ரூ40,000 ஐ கூட தாண்டலாம்.

  அமேசானின் நோட்டிவிக்கேசன் மூலம் ஒன்ப்ளஸ்6 விற்பனையை உடனுக்குடன் அறியலாம். அமேசான் ப்ரைம் வாடிக்கையாளர்கள் மே21 2018 12 மணி முதல் ஒன்ப்ளஸ் 6ஐ முன்கூட்டியே வாங்கலாம்.

  ஒன்ப்ளஸ்5டி அறிமுக விழா மூலம், சமூக பிரதிநிதிகளை அறிமுக விழாவில் அனுமதித்த மூலம் ஸ்மார்ட்போன் நிறுவனம் என்ற பெயரை பெற்றுள்ளது ஒன்ப்ளஸ். ஒன்ப்ளஸ்6 அறிமுக விழாவிற்கான டிக்கெட் விற்பனை 8 மே 2018 காலை 10 மணி முதல் துவங்குகிறது. https://www.oneplus.in/launch-6open_window_by_link என்ற இணையதளத்தில் டிக்கெட்களை வாங்கலாம்.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  English summary
  OnePlus 6 Everything you need to know about the upcoming flagship smartphone; Read more about this in Tamil GizBot
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more