தற்சமயம் ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளது. அதன்படி ஐபோன் வடிவமைப்பைக் கொண்டு இந்த ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளத என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஐபோனில் இடம்பெற்றுள்ள டிஸ்பிளே மற்றும் செங்குத்தான கேமரா போன்ற அம்சங்கள் இந்த ஒன்பிளஸ் 6சாதனத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும் அதிநவீன தொழில்நுட்ப அம்சங்கள் கொண்டு இந்த ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் ஆனது 6.28-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு 2280 x 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு ஓரியோ 8.0 இயங்குதளத்தை
கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன்.
இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக 256ஜிபி வரை மெமரி
நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
இந்த ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனில் 16எம்பி +16எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.
இதனுடைய செல்பீ கேமரா 16மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.
ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனில் 3400எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தமட்டில்,
ஒன்ப்ளஸ் 6 ஆனது, அதன் டிஸ்பிளேவில் உட்பொதிக்கப்பட்ட கைரேகை ஸ்கேனர் ஒன்றை கொண்டுள்ளது.இதுதவிர, சமீபத்திய ஆப்பிள் ஐபோன்களில் இடம்பெற்றுள்ள பேஸ் ஐடியை விட அதிவேகமாக செயல்படுமென கருதப்படும் 3டி முக அடையாள அங்கீகாரமும் இக்கருவியில் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது.
Gizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.