ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் அம்சத்துடன் களமிறங்கும் ஒன்பிளஸ் 6.!
ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனில் 3டி கேமரா மாட்யூல் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது, அதன்பின் இந்த கேமரா வசதி பொறுத்தவரை இன்ஃப்ராரெட் வெளிச்சத்தை பயன்படுத்தி ஆழத்தை கணக்கிடும் என கூறப்படுகிறது.
தற்சமயம் ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது, அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வரும் ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். இப்போது ஆன்லைனில் வெளிவந்த தகவலின் அடிப்படையில் ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனில்
ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் இடம்பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போன் இந்திய மொபைல் சந்தையில் அதிக வரவேற்ப்பை பெற்றது. மேலும் இப்போது வரும் ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனில் சிறந்த மென்பொருள் தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது என ஒன்பிளஸ் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
இக்கருவி பொதுவாக பெசல்-லெஸ் வடிவமைப்பு பெற்று வெளிவரும் என அந்நிறுவனம் கூறியுள்ளது, ஒன்பிளஸ் 5ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ள சில முக்கிய அம்சங்கள் இந்த ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனில் இடம்பெறும் என எதிர்பார்க்கபடுகிறுது.
சாம்சங் கேலக்ஸி எஸ்9, எல்ஜி ஜி7, சியோமி மி 7போன்ற ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு இந்த ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன்போட்டியாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனில் 3டி கேமரா மாட்யூல் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது, அதன்பின் இந்த கேமரா வசதி பொறுத்தவரை இன்ஃப்ராரெட் வெளிச்சத்தை பயன்படுத்தி ஆழத்தை கணக்கிடும் என கூறப்படுகிறது.
ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனில் கைரேகை ஸ்கேனர் வழங்கப்படும் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது, மேலும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6ஜிபி அல்லது 8ஜிபி ரேம் கொண்டு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின் 128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெறலாம்.


Click it and Unblock the Notifications