Home
Mobile

ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு அறிவிப்பு.!

ஒன்ப்ளஸ் 6 ஆனது ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ உடனான ஆக்சிஜென் ஓஎஸ் 5.1 கொண்டு இயங்குகிறது. இது ஆண்ட்ராய்டு பி இயங்குதளத்தின் ஆரம்பகால நுண்ணறிவுகளில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று நிலையில், தற்சமயம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம். அதன்படி சில மாதங்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பை அறிவித்துள்ளது அந்நிறுவனம். மேலும் இந்த சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்க்படுகிறது. ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.34,999-ஆக இருந்தது தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.29,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு அறிவிப்பு.!

மேலும் விலைகுறைக்கப்பட்ட இந்த ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் வலைதளத்தில் மிக எளிமையாக வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு பயன்படுத்துவதற்கு மிக அருமையாக இருக்கும் ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் மாடல். பின்பு இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது ஒன்பிளஸ் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்ப்ளே:

டிஸ்ப்ளே:

மிரர் பிளாக் மாறுபாடு மற்றும் மிட்நைட் பிளாக் மாறுபாடு என்கிற இரண்டு வேரியண்ட்களில் வெளியாகியுள்ளது. உடன் வரையறுக்கப்பட்ட மாடலாக சில்க் வைட் வேரியண்ட்டும் கிடைக்கும். பின்புற பேனலின் இடது மூலையில் ஒரு இரட்டை கேமரா அமைப்பு உள்ளது. கைரேகை சென்சார் ஆனது கேமரா தொகுதி கீழ் உள்ளது. 2280 x 1080 பிக்ஸல் தீர்மானம் கொண்ட 6.28 அங்குல FHD+ ஆப்டிக் டிஸ்ப்ளேவை கொண்டுள்ள ஒன்ப்ளஸ் 6 ஆனது 19: 9 என்ற அளவிலான திரை விகிதத்தையும் கொண்டுள்ளது.

வன்பொருள்:

வன்பொருள்:

ஒன்ப்ளஸ் 6 ஆனது வேகமான மற்றும் மென்மையான அனுபவத்தை வழங்கும் ஒரு அதிவேக ஸ்மார்ட்போன் என்று அறிவிக்கப்பட்டது. அதை உண்மையாகும் வண்ணம், ஒன்ப்ளஸ் 6 ஆனது, க்வால்காம் ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஓசி கொண்டுள்ளது. இது செயல்திறன் அடிப்படையில், முந்தைய மாடலை விட 30% வேகமாகவும், 10% அதிக திறன் கொண்டதாகவும் உள்ளது. இந்த செயலியானது அட்ரெனோ 630 ஜிபியூ உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது யூஜிபி 2.1 சேமிப்பு திறன் அடிப்படையிலான 6 ஜிபி / 8 ஜிபி ரேம் உடனாக 64 ஜிபி / 128 ஜிபி / 256 ஜிபி ஆகிய உள்ளடக்க சேமிப்பு மாடல்களின் கீழ் வெளியாகியுள்ளது. பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான (4வி மற்றும் 4ஏ) உடனான ஒரு 3300mAh பேட்டரி கொண்டு உள்ளது. இது 30 நிமிடங்களில் ஒரு நாள் முழுக்க தாங்கும்படியான பேட்டரியை வழங்கும்.

கேமரா:

கேமரா:

குறைந்த ஒளி நிலைமைகளில் கூட, சிறப்பான புகைப்படங்களை எடுக்க உதவும் ஒரு 16 எம்பி பிரதான கேமரா உட்பட அதன் பின்புறத்தில் ஒரு இரட்டை கேமரா தொகுதி உள்ளது. இரண்டாம் நிலை கேமராவை பொறுத்தவரை, அதுவொரு 20 எம்பி சென்சார் ஆகும். போர்ட்ரெயிட் மோட்ம் விரைவாக புகைப்படத்தை காட்சிப்படுத்துதல், OIS மற்றும் EIS திறன், உட்பட ஒன்ப்ளஸ் 6 கேமராத்துறையில் ஒரு குறையையும் சொல்ல முடியாதபடி உள்ளது. குறிப்பாக, இதன் இன்ட்பில்ட் வீடியோ எடிட்டர், சோனி IMX 371 சென்சார் மற்றும் எப் / 2.0 துளை கொண்ட ஒரு 16 எம்பி செல்பே கேமராக்கள் போன்ற அம்சங்கள் கேமராவை வேற லெவலுக்கு கொண்டு செல்கின்றன என்றே கூறலாம். பின்புற கேமராவை பொறுத்தவரை சோனி IMX519 சென்சார் மற்றும் சோனி IMX376K சென்சார்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

  பேட்டரி மீட்டர் மாற்றலாம்

பேட்டரி மீட்டர் மாற்றலாம்

ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனில் உள்ள வட்ட வடிவம் கொண்ட பேட்டரி மீட்டரை தேர்வு செய்வதோடு, ஐகான்களை சேர்க்கவோ அல்லது அழிக்கவோ முடியும். இதற்கு ஸ்டேட்டஸ் பாரை ஃப்ளிப் செய்தாலே போதுமானது. செட்டிங்ஸ் -- ஸ்டேட்டஸ் பார் -- பேட்டரி ஸ்டைல் ஆப்ஷன்களுக்கு செல்ல வேண்டும். இங்கு ஸ்டேட்டஸ் பாரில் உங்களுக்கு தேவையான அம்சங்களை தேர்வு செய்து வைத்துக் கொள்ளவோ அல்லது அழிக்கவோ முடியும்.

மென்பொருள் மற்றும் பிற அம்சங்கள்:

மென்பொருள் மற்றும் பிற அம்சங்கள்:

ஒன்ப்ளஸ் 6 ஆனது ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ உடனான ஆக்சிஜென் ஓஎஸ் 5.1 கொண்டு இயங்குகிறது. இது ஆண்ட்ராய்டு பி இயங்குதளத்தின் ஆரம்பகால நுண்ணறிவுகளில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்ட்ராய்டு பி டெவலப்பர் முன்னோட்டம் இரண்டு நாட்களில் உருட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பேஸ் அன்லாக் அம்சம். ஸ்மார்ட்போனை திறக்க 0.4 வினாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும். பின்புறத்தில் கைரேகை சென்சார் ஒன்றும் உள்ளது. இது 0.2 விநாடிகளில் ஸ்மார்ட்போனை அன்லாக் செய்ய உதவும். உடன் NFC, ப்ளூடூத் 5.0, 4ஜி VoLTE மற்றும் இன்னும் பல இணைப்பு ஆதரவுகளும் உள்ளன. இந்த ஸ்மார்ட்போனில் ஒரு கேமிங் மோட் ஒன்றும் உள்ளது. அது முந்தைய ஸ்மார்ட்போனில் இருந்த கேமிங் முறையை மேம்படுத்தியுள்ளது. மிகவும் சுவாரஸ்யமாக ஒன்ப்ளஸ் 6 ஆனது 3.5மிமீ ஆடியோ ஜாக்கை கொண்டுள்ளது.

மேலும் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனின் விலைகுறைப்பு ஆஃபர் வரும் அக்டோபர் 10-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடைபெறும் அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் மூலம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
OnePlus 6 at a discounted price of INR 29,999 is the best smartphone deal of the year: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X