ஒன்ப்ளஸ் 5டி : பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் பிரிவில் ஒரு புதிய அத்தியாயம்.!

Written By:

ஸ்மார்ட்போன் சந்தையில் மீண்டுமொரு புயலை உண்டாக்க ஒன்ப்ளஸ் நிறுவனம் தயாராகவுள்ளது. ஆம், கடந்த ஒரு சில மாதங்களாக லீக்ஸ் செய்திகளில் சிக்கித்தவித்த ஒன்ப்ளஸ் 5டி ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்ப்ளஸ் 5டி : பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் பிரிவில் ஒரு புதிய அத்தியாயம்.!

நவம்பர் 16 அன்று (காலை 9:30 ஐஎஸ்டி) நியூ யார்க், ப்ரூக்லினில் நடக்குமொரு நேரடி நிகழ்ச்சியில் ஒன்ப்ளஸ் நிறுவனம் அதன் புதிய சாதனமான ஒன்ப்ளஸ் 5டி-யை அறிமுகம் செய்கிறது.

டெல்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் புனே ஆகிய 5 நகரங்களில் தேர்வு செய்யப்பட்ட பி.வி.ஆர் தியேட்டர்களில் முதல் முறையாக, ஒன்ப்ளஸ் 5டி ஸ்மார்ட்போனின் அறிமுகத்தை இந்திய ரசிகர்கள் பார்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளதென்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த டிக்கெட்களை புக்மைஷோ வழியாக ரூ.99/-க்கு புக் செய்யலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஆரம்ப விற்பனையானது நவம்பர் 21-ஆம் தேதி.!

ஆரம்ப விற்பனையானது நவம்பர் 21-ஆம் தேதி.!

இக்கருவியின் ஆரம்ப விற்பனையானது நவம்பர் 21-ஆம் தேதியன்று அமேசான்.இன் மற்றும் ஒன்ப்ளஸ்ஸ்டோர்.இன் ஆகிய தளங்களில் நிகழும். விரைவில் நாட்டில் உள்ள அனைத்து விற்பனை சேனல்களிலும் கிடைக்கும். சமீபத்தில் வெளியான ஒன்ப்ளஸ் 5டி டீசரை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.!

வலிமையான ஒன்ப்ளஸ் 5 ஸ்மார்ட்போனின் அடுத்தகட்ட படைப்பு.!

வலிமையான ஒன்ப்ளஸ் 5 ஸ்மார்ட்போனின் அடுத்தகட்ட படைப்பு.!

ஒன்ப்ளஸ் 5டி ஸ்மார்ட்போன் ஆனது, ரூ.40கே பட்ஜெட்டில் சிறந்து விளங்கிய, மிகவும் பிரபலமான ஒன்ப்ளஸ் 5 ஸ்மார்ட்போனின் அடுத்தக்கட்ட படைப்பாகும். உலகம் முழுவதுமே, ஒன்ப்ளஸ் 5 ஸ்மார்ட்போனின் செயல்திறனை கண்டு பயனர்கள் இன்றும் வியந்த வண்ணமிருக்க, ஒன்ப்ளஸ் 5டி ஆனது இன்னும் பல புதுமைகள் மற்றும் அதிக செயல்திறனை கொண்டிருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

உயரமான 18: 9 விகிதம்; 6 அங்குல முழு எச்டி+ டிஸ்பிளே.!

உயரமான 18: 9 விகிதம்; 6 அங்குல முழு எச்டி+ டிஸ்பிளே.!

ஒன்ப்ளஸ் 5டி ஸ்மார்ட்போன் ஆனது 1060 × 2080 பிக்சல்கள் என்ற தீர்மானம் கொண்ட ஒரு முழு எச்டி+ வடிவமைப்பிலான 6 அங்குல டிஸ்பிளே கொண்டிருக்க வாய்ப்பு உள்ளது. இந்த டிஸ்பிளே 18: 9 என்ற சமீபத்திய உயரமான அம்ச விகிதத்தில் வெளியாகலாம். ஒரு லீக்ஸ் தகவலானது, ஒன்ப்ளஸ் 5டி அதன் உயரத்தை அதிகரித்து இரண்டு பக்கமுள்ள பெஸல்களை குறைக்கும் என்று கூறுகிறது.

சிறந்த செயலி மற்றும் போதுமான ரேம்.!

சிறந்த செயலி மற்றும் போதுமான ரேம்.!

மேலும் கூறப்படும் ஒன்ப்ளஸ் 5டி ஆனது கிட்டத்தட்ட பெஸல்கள் இல்லாத மற்றும் தீவிரமான மெல்லிய வடிவமைப்புடன் வெளியாகலாம். வன்பொருள்களை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் சந்தேகத்திற்கு இடமின்றி ஒவ்வொரு நாளும் மற்றும் கடுமையான பணிகளை நிகழ்த்தும் சிறந்த செயலி மற்றும் போதுமான ரேம் கொண்டிக்கும்.

குறிப்பிடத்தக்க கேமரா மேம்பாடுகள்

குறிப்பிடத்தக்க கேமரா மேம்பாடுகள்

இதுவரை வெளியான வதந்திகள் மற்றும் கசிவுகள் எல்லாம் ஒருபக்கம் இருக்க, ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர்கள் ஆன கார்ல் பீ மற்றும் பீட் லாவ் ஆகிய இருவரும் வரவிருக்கும் கைபேசி பற்றிய சில நுட்பமான குறிப்புகளை வெளியிட்டுள்ளார். ஆக, ஒன்ப்ளஸ் 5டி கேமரா சென்சாரில் சில குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் இருக்கும் என்பது உறுதி. குறிப்பாக போட்ரியட் மோட் பயன்முறையில் அறிமுகம் செய்யப்பட்டு ஒரு முழுமையான மாற்றத்தையே கூட கொண்டு வரலாம்.

சாம்சங் டிஸ்ப்ளே தொழில்நுட்பம்

சாம்சங் டிஸ்ப்ளே தொழில்நுட்பம்

பீட் லாவின் சமீபத்திய ட்வீட் ஒன்றின் கீழ் "மெல்லிய சாதனங்கள் மற்றும் சிறந்த காட்சி அனுபவங்களை உருவாக்க ஓஎல்இடி உதவுகிறது. சாம்சங் டிஸ்ப்ளே தொழில்நுட்பம் தான் தற்போதுள்ள ஆப்டிக் அமோஎல்இடி-க்கு சிறந்தது" என்று அறிவியக்கப்பட்டுள்ளது.

ஒரு பெரிய பேட்டரி அலகு

ஒரு பெரிய பேட்டரி அலகு

இதன்மூலம் சாம்சங்அ நிறுவனத்தின் டிஸ்பிளே தொழில்நுட்பத்தின் பேனலின் கீழ் தன ஒன்ப்ளஸ் 5டி அறிமுகமாகும் என்பது உறுதியாகிவிட்டது. மேலும் இக்கருவியில் ஒரு பெரிய பேட்டரி அலகு இடம்பெறும் வாய்ப்பும் அதிகமாக உள்ளது. அதுவொரு 3450எம்ஏஎச் பேட்டரியாக இருக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி நெருக்கமாக இருப்பதால் மேலும் தகவல்களுக்கு தமிழ் கிஸ்பாட் வலைத்தளத்துடன் இணைந்திருங்கள்.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
OnePlus 5T to write a new chapter in flagship smartphone category. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot