6-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் ஒன்பிளஸ் 5டி.!
ஒன்பிளஸ் 5டி ஸ்மார்ட்போன் பொதுவாக 6-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பு மற்றும் (2160-1080)பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 காட்சி விகிதம் கொண்டவையாக உள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனம் கடந்த ஜூன் மாதம் ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போனை வெளியிட்டது, மேலும் கூடிய விரைவில் ஒன்பிளஸ் 5டி என்ற ஸ்மார்ட்போன் மாடலை வெளியிட திட்டமிட்டுள்ளது அந்நிறுவனம். இந்த ஸ்மார்ட்போன் மாடலில் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது என ஒன்பிளஸ் நிறுவனம் கூறியுள்ளது.
ஒன்பிளஸ் 3டி ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 820 செயலி மற்றும் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது. அந்த வரிசையில் பல்வேறு மென்பொருள் தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த ஒன்பிளஸ் 5டி ஸ்மார்ட்போன் வெளிவரும் எனத் தகவல்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஸ்பிளே:
ஒன்பிளஸ் 5டி ஸ்மார்ட்போன் பொதுவாக 6-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பு மற்றும் (2160-1080)பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 காட்சி விகிதம் கொண்டவையாக உள்ளது.

பெசல்-லெஸ்:
இந்த ஒன்பிளஸ் 5டி ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை பெசல்-லெஸ் வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது. அதன்பின் இந்த ஸ்மார்ட்போனின் முன் வடிவமைப்பு ஓப்போ எப்5 ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு போலவே உள்ளது.

டூயல் கேமரா:
ஒன்பிளஸ் 5டி ஸ்மார்ட்போனில் டூயல் கேமரா வசதி இடம்பெற்றுள்ளது எனத் தகவல்கள் கசிந்துள்ளது, மேலும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் 3டி:
ஒன்பிளஸ் 3டி ஸ்மார்ட்போனில் 16மெகாபிக்சல் ரியர் கேமரா மற்றும் 8மெகாபிக்சல் செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது. மேலும்ஸ்னாப்டிராகன் 821 செயலி இவற்றுள் இடம்பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications