அறிமுகம் : ஒன்ப்ளஸ் 5டி (இந்திய விலை நிர்ணயம்; திறந்த விற்பனை & அம்சங்கள்).!
40கே பட்ஜெட் பிரிவில் உள்ள அனைத்து ஸ்மார்ட்போன்களையும் இந்த விலைப்புள்ளி கடுமையான போட்டியை உண்டாகும் என்பதில் ஐயமில்லை.
இந்தியாவில் பிரீமியம் ஸ்மார்ட்போன் பிரிவில் அதன் சந்தை பங்கை இரட்டிப்பாக்கிய பிறகு, சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஒன்ப்ளஸ், அதன் புதிய தலைமை சாதனமான ஒன்ப்ளஸ் 5டி ஸ்மார்ட்போனை உலகளாவிய அளவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

8ஜிபி அளவிலான பாரிய ரேம் கொண்டுள்ள இக்கருவி "ஃபேஸ் லாக்" வசதியுடன் கூடிய ஒரு 18: 9 திரை விகித அளவிலான டிஸ்ப்ளே மற்றும் ஒரு மேம்பட்ட குறைந்த-ஒளி கேமரா தொழில்நுட்பம் போன்ற பல பிரதான அம்சங்களை திருப்திப்படுத்தும் வண்ணம் தன்னுள் கொண்டுள்ளது.

பேஸ் அன்லாக் அம்சம்
இரட்டை சிம் (நானோ) ஆதரவு கொண்ட ஒன்ப்ளஸ் 5டி ஆனது ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்ட ஆக்சிஜென் 4.7 கொண்டு இயங்கும். ஒன்ப்ளஸ் 5 ஸ்மார்ட்போனில் காணப்படாத பேஸ் அன்லாக் அம்சம் இக்கருவியை சேர்க்கப்பட்டுள்ளது. இது மேம்பட்ட முக அங்கீகார நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்டது மற்றும் ஸ்மார்ட்போனை 0.4 வினாடிகளில் "பாதுகாப்பாக திறகும்" அடையாள புள்ளிகளைக் கொண்டுள்ளது.

6.01 அங்குல முழு எச்டி ப்ளஸ்
பின்பக்கம் உட்பொதிக்கப்பட்டுள்ள கைரேகை சென்சரை நீண்ட நேரம் அழுத்துவதன் மோளம் பயனர்கள் செல்பீக்களை எடுத்துக்கொள்ளலாம், மேலும் நோட்டிபிகேஷன் ஷேட்களை கொண்டு வர கைரேகை சென்சாரை ஸ்வைப் செய்யலாம். ஒன்ப்ளஸ் 5டி ஆனது, 18: 9 விகித அளவிலான, 401பிபிஐ பிக்சல் அடர்த்தி மற்றும் 2.5டி கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு கொண்ட 6.01 அங்குல முழு எச்டி ப்ளஸ் (1080x1920 பிக்சல்கள்) அமோஎல்இடி டிஸ்பிளே கொண்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஓசி
மேலும் இந்த டிஸ்பிளே எஸ்ஆர்ஜிபி (sRGB) மற்றும் டிசிஐI-பி3 கலர் கமட்ஸ் ஆகியவ் அம்சங்களையும் ஆதரிக்கிறது. ஒன்ப்ளஸ் 5 போன்றே, ஒன்ப்ளஸ் 5டி ஸ்மார்ட்போனும் ஒரு ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. 2.45ஜிகாஹெர்ட்ஸ் உடனான 6ஜிபி அல்லது 8ஜிபி எல்பிடிடிஆர்4எக்ஸ் ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

இரட்டை பின்புற கேமரா அமைப்பு
கேமராத்துறையை பொறுத்தமட்டில், இந்த ஸ்மார்ட்போனில் ஒன்ப்ளஸ் அதன் இரட்டை பின்புற கேமரா அமைப்பை மேம்படுத்தியுள்ளது. முதன்மை சென்சார் கேமராவது ஒன்ப்ளஸ் 5 ஸ்மார்ட்போனில் காணப்பட்ட அதே சோனி ஐஎம்எக்ஸ்398 சென்சார், 1.12 மைக்ரான் பிக்சல்கள் மற்று எப் / 1.7 துளை கொண்ட ஒரு 16 மெகாபிக்சல் கேமராவாக இருப்பினும் கூட, இது 27.22 மிமீ ஒரு மேம்படுத்தப்பட்ட குவிய நீளம் கொண்டதாக மேம்படுத்தப்பட்டுள்ளது.

இரண்டாம் நிலை கேமரா
பின்பக்கத்தின் இரண்டாம் நிலை கேமராவை பொறுத்தமட்டில், சோனி ஐஎம்எக்ஸ்376கே சென்சார் மற்றும் ஒரு டெலிஃபோட்டோ லென்ஸுடன் கூடிய ஒரு 20 மெகாபிக்சல் கேமரா உள்ளது. இது 1 மைக்ரான் பிக்சல் அளவைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது, இருப்பினும், எப் / 1.7 துளை மற்றும் குவிய நீளம் 27.22 மிமீ வரை குறிப்பிட்ட மேம்பாடுகளை பெற்றுள்ளது. இரட்டை-எல்இடி ஃப்ளாஷ் கொண்டிருக்கும் இதன் பின்புற கேமரா அமைப்பு 10கே வீடியோவில் நொடிக்கு 60 ப்ரேம்கள் என்ற வேகத்தில் வீடியோக்களை பதிவு செய்யலாம்.

16-மெகாபிக்சல்
ஒன்ப்ளஸ் 5டி ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தை பொறுத்தமட்டில், ஒன்ப்ளஸ் 5 உடன் அனைத்து அம்சங்களிலும் ஒரே மாதிரியாக இருக்கிறது, 16-மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 371 சென்சார், 1-மைக்ரான் பிக்சல்கள் மற்றும் எப் / 2.0 இன் ஒரு துளை ஆகியவைகளை கொண்டுள்ளது. மேலும் இது நொடிக்கு 30 ப்ரேம்கள் என்ற வேகத்தில் 1080பி வீடியோக்களை பதிவு செய்யலாம்.

இணைப்பு ஆதரவு
செல்பீ கேமராவை போலவே உள்ளமைக்கப்பட்ட சேமிப்பு கட்டமைப்புகளில் ஒன்ப்ளஸ் 5 உடன் 5டி ஒற்றுப்போகிறது. இது 64 ஜிபி அல்லது 128ஜிபி சேமிப்புடன் வருகிறது. இணைப்பு ஆதரவுகளை பொறுத்தமட்டில், 4ஜி வோல்ட், டூயல்-பேண்ட் (2.4ஜிகாஹெர்ட்ஸ், 5ஜிகாஹெர்ட்ஸ்) வைஃபை 802.11ஏசி உடன் மிமோ (MIMO 2x2), ப்ளூடூத் வி5.0, 3.5மிமீ ஆடியோ ஜாக், மற்றும் ஒரு யூஎஸ்பி டைப்சி- (வி2.0) போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது.

3300எம்ஏஎச் பேட்டரி
ஒரு நீக்கமுடியாத 3300எம்ஏஎச் பேட்டரி மூலம் இயக்கப்படும் ஒன்ப்ளஸ் 5டி ஆனது நிறுவனத்தின் டாஸ் சார்ஜ் (5வி, 4ஏ) பாஸ்ட் சார்ஜ் செய்யும் தொழில்நுட்பத்தை ஆதரிக்கிறது. சுமார் 162 கிராம் எடையும், 156.1x75x7.3 மிமீ அளவும் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் அதன் முன்னோடி விட நீண்ட, பரந்த, மற்றும் தடிமனாகதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

விலை நிர்ணயம்
64 ஜிபி மற்றும் 128 ஜிபி (மிட்நைட் கருப்பு) என்ற இரண்டு சேமிப்பு மாறுபாடுகளில் வெளியாகியுள்ள ஒன்ப்ளஸ் 5டி ஆனது முறையே ரூ.32,999/- மற்றும் ரூ.37,999/- என்ற விலை நிர்ணயத்தை கொண்டுள்ளது. 40கே பட்ஜெட் பிரிவில் உள்ள அனைத்து ஸ்மார்ட்போன்களையும் இந்த விலைப்புள்ளி கடுமையான போட்டியை உண்டாகும் என்பதில் ஐயமில்லை.

திறந்த விற்பனையானது நவம்பர் 28-ஆம் தேதி முதல்
இ-காமர்ஸ் வலைத்தளமான அமேசான், ஒன்ப்ளஸ்ஸ்டோர்.இந்த வலைத்தளம் மற்றும் பெங்களூரில் உள்ள ஒன்ப்ளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோரில் நவம்பர் 21-ஆம் தேதி முதல் இக்கருவி வாங்குவதற்கு கிடைக்கும். அதன் பின்னர் திறந்த விற்பனையானது நவம்பர் 28-ஆம் தேதி முதல் இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்க நாடுகளில் தொடங்கும்.


Click it and Unblock the Notifications