6 இன்ச் டிஸ்பிளே; 20 எம்பி செல்பீ கேம் என ஒன்ப்ளஸ் 5டி நம்மை மிரட்டப்போகிறது.!

|

இதுவரை வெளியான அனைத்து வகையான வதந்திகள் மற்றும் லீக்ஸ் தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்படி, ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான - பீட் லாவ், நிறுவனத்தின் அடுத்த தலைமை சாதனமான ஒன்ப்ளஸ் 5டி சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வருவதை அதிகாரப்ப்ப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார்.

6 இன்ச் டிஸ்பிளே; 20 எம்பி செல்பீ கேம் என ஒன்ப்ளஸ் 5டி மிரட்டப்போகிறது

அதுமட்டுமின்றி, மிக விரைவில் ஒன்ப்ளஸ் 5டி ஸ்மார்ட்போனை அறிவிக்க போவதாகவும் உறுதிப்படுத்தினார். எனினும், எப்போது என்ற தெளிவான விவரத்தை குறிப்பிடவில்லை. ஆனால் அவ்வப்போது வெளியாகும் ஒன்ப்ளஸ் 5டி டீஸர்களின் மூலமாக அதன் வெளியீடு மிக அருகாமைக்குயில் உள்ளதென்பது உறுதிசெய்யப்படுகிறது.

நவம்பர் 16 அன்று அறிமுகமாகலாம்

நவம்பர் 16 அன்று அறிமுகமாகலாம்

முந்தைய வதந்திகளின்படி, ஒன்ப்ளஸ் 5டி ஆனது வருகிற நவம்பர் 16 அன்று அறிமுகமாகலாம். ஜிஎப்எக்ஸ்பெஞ்ச்சில் காணப்பட்ட ஒன்ப்ளஸ் 5டி, கிட்டத்தட்ட அதன் அனைத்து முக்கிய அம்சங்களையும் வெளிப்படுத்தியது என்றே கூறலாம். இக்கருவி 2160x1080 பிக்சல் தீர்மானம் கொண்ட ஒரு மாடல் எண் ஏ5010 என்ற பெயரின் ங்கேல் வெளிப்பட்டது.

6 அங்குல முழுஎச்டி ப்ளஸ்+ பேனல்

6 அங்குல முழுஎச்டி ப்ளஸ்+ பேனல்

இது உண்மையாயின் ஒன்ப்ளஸ் 5டி ஆனது ஒரு 6 அங்குல முழுஎச்டி ப்ளஸ்+ பேனல் மற்றும் 18: 9 என்ற திரை விகிதத்தை கொண்டிருக்கும். எனினும்,மற்றொரு வனத்தந்தியானது ஒன்ப்ளஸ் 5டி ஆனது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒப்போ ஆர்11எஸ் கருவியை போல இருக்கலாம் எனக் கூறுகின்றது.

20 மெகாபிக்சல் செல்பீ கேமரா

20 மெகாபிக்சல் செல்பீ கேமரா

ஜிஎப்எக்ஸ்பெஞ்ச் பட்டியலின்படி சென்றால், ஒன்ப்ளஸ் 5டி ஆனது ஒன்ப்ளஸ் 5 ஸ்மார்ட்போனின் ஒரு மேம்பட்ட (குறிப்பாக கேமரா துறையில்) பதிப்பாகும். அதன்படி, ஒன்ப்ளஸ் 5டி ஸ்மார்ட்போனில் ஒரு 20 மெகாபிக்சல் செல்பீ கேமரா எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்ப்ளஸ் 5 ஸ்மார்ட்போனில் 16எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றதென்பது குறிப்பிடத்தக்கது.

20 மெகாபிக்சல் + 16 மெகாபிக்சல்

20 மெகாபிக்சல் + 16 மெகாபிக்சல்

பின்பக்க கேமராவை பொறுத்தமட்டில், ஒன்ப்ளஸ் 5டி இரட்டை கேமராக்கள் கொண்டு வர அதிக வாய்ப்புள்ளது. அதாவது ஒரு 20 மெகாபிக்சல் சென்சார் ஜோடியாக 16 மெகாபிக்சல் சென்சார் இடம்பெறலாம், மேலும் சில வதந்திகளின்படி, வரவிருக்கும் ஒன்ப்ளஸ் 5டி ஸ்மார்ட்போனின் முன் மற்றும் பின்புற கேமராவில் பொக்கே விளைவுகள் ஏற்படுத்தும் அம்சம் மற்றும் சில செயற்கை நுண்ணறிவு அம்சங்களுடன் சேர்க்கப்படலாம்.

இரண்டு வேரியண்ட்களில் வெளியாகலாம்

இரண்டு வேரியண்ட்களில் வெளியாகலாம்

முன்னர் வெளியான ஒன்ப்ளஸ் 5 போலவே ஒன்ப்ளஸ் 5டி ஸ்மார்ட்போனும் இரண்டு வேரியண்ட்களில் வெளியாகலாம், ஒரு 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள் சேமிப்பு மாறுபாடு கிடைக்கும் மறுகையில் கருவியின் உயர்தர பதிப்பானது 8 ஜிபி ரேம் மற்றும் 128GB உள் சேமிப்பு மாறுபாடாக வெளியாகலாம். எஸ்டி அட்டை வழியாக நீட்டிக்கப்பெறும் மெமரி பற்றிய வார்த்தைகள் ஏதுமில்லை.

3.5மிமீ ஆடியோ ஜாக் இடம்பெறாது என்பது உறுதி

3.5மிமீ ஆடியோ ஜாக் இடம்பெறாது என்பது உறுதி

ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட் அடிப்படையிலான ஆக்சிஜென்ஓஎஸ் கொண்டு இயங்குமென எதிர்பார்க்கப்படும் இக்கருவி ஆண்ட்ராய்டு 8.0 ஒரியோ உடனும் அனுப்பப்படலாம். பேட்டரித்திறன் பற்றிய அதிகாரப்பூர்வ வார்த்தைகள் ஏதுமில்லை என்கிற போதிலும் ஒன்ப்ளஸ் 5டி ஸ்மார்ட்போனில் 3.5மிமீ ஆடியோ ஜாக் இடம்பெறும் என்பது உறுதியாகிவிட்டது. மேலும் பல ஒன்ப்ளஸ் 5டி சார்ந்த அப்டேட் செய்திகளுக்கு தமிழ் கிஸ்பாட் உடன் இணைந்திருங்கள்.!

Best Mobiles in India

English summary
OnePlus 5T spotted on GFXBench with 6-inch display, 20MP front camera ahead of launch. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X