'ட்ரெண்ட் செட்' செய்யும் அம்சங்களுடன் ஒன்ப்ளஸ் 5டி.!

ஒன்ப்ளஸ் 5டி ஸ்மார்ட்போனின் குறிப்பிடத்தக்க மேம்படுத்தல்களில் முன்பை விட சிறந்த இரட்டை கேமரா அமைப்பு எதிர்பார்க்கப்படுகிறது

|

ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் எப்பொழுதும் - ஒரு சிறந்த அம்சங்களின் தொகுப்பு, நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் மலிவு விலை ஆகிய குறியீடுகளை தக்கவைக்க மறப்பதேயில்லை.

'ட்ரெண்ட் செட்' செய்யும் அம்சங்களுடன் ஒன்ப்ளஸ் 5டி.!

அதற்கு ஒன்ப்ளஸ் 5 ஸ்மார்ட்போனே ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். இன்றும் ஒன்ப்ளஸ் 5 ஸ்மார்ட்போன் சார்ந்த வியப்பான நிலைப்பாடு குறைந்தபாடில்லை. அதற்குள் ஒன்ப்ளஸ் 5டி வெளியாகிறது.

பயனர்களிடமிருந்து கருத்துக்களைத் தொடர்ந்து தேடி, அதை பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஸ்மார்ட்போன்களில் உள்ளடக்கப்படுவதன் மூலம் பயனர்களுக்கான ஒரு கருவியை உருவாக்கம் செய்யவதில் ஒன்ப்ளஸ் நிறுவனம் எந்தவொரு குறையும் வைப்பதில்லை. அதற்கு சிறந்த எடுத்துகாட்டாக வரவிருக்கும் ஒன்ப்ளஸ் 5டி ஸ்மார்ட்போனில் 3.5மிமீ ஆடியோ ஜாக் தக்கவைக்கப்பட்டுள்ளதை கூறலாம்.

ஒரே நாளில் உலகம் முழுவதும்.!

ஒரே நாளில் உலகம் முழுவதும்.!

ஒன்ப்ளஸ் 5டி கொன்டு பல புதிய விடயங்களை, ஒன்ப்ளஸ் நிறுவனம் முயற்சி செய்கிறது. நியூயார்க், புரூக்ளினில் நவம்பர் 16 ம் தேதி நடக்கும் நிகழ்வொன்றின் கீழ் இக்கருவி உலக அளவில் வெளியாகிறது. நவம்பர் 16 அன்று நடக்கும் நிகழ்விற்கான டிக்கெட்கள் சுமார் ரூ .2,600/-க்கு (50 அமெரிக்க டாலர்கள்) விற்பனை செய்யப்படுகின்றதென்பது குறிப்பிடத்தக்கது.

தேர்ந்தெடுக்கப்பட்ட பிவிஆர் திரையரங்குகளில்.!

தேர்ந்தெடுக்கப்பட்ட பிவிஆர் திரையரங்குகளில்.!

மற்றொரு முதல் முயற்சியாக, ப்ரூக்லினில் நடைபெறும் அறிமுக நிகழ்வை நுகர்வோர் மற்றும் ஒன்ப்ளஸ் பயனர் சமூகம் ஆகிய அனைவரும் காணும் வண்ணம் பெங்களூரு, டெல்லி, மும்பை, ஹைதராபாத் மற்றும் புனே போன்ற நாட்டின் ஐந்து நகரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிவிஆர் திரையரங்குகளில் நிகழ்வின் லைவ் ஸ்ட்ரீம் திரையிடப்படுகிறது.

மற்றவர்கள் நவம்பர் 2- ஆம் தேதி முதல்.!

மற்றவர்கள் நவம்பர் 2- ஆம் தேதி முதல்.!

ரூ.99/- என்ற விலைக்கு புக்மைஷோ ஆப் வழியாக விற்பனையை செய்த சில நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்கப்பட்டன. டிக்கெட் விற்கப்பட்டாலும் கூட, அதிகாரப்பூர்வ ஒன்ப்ளஸ் வலைத்தளத்தில் நீங்கள் லைவ் ஸ்ட்ரீமை காணலாம். இது தவிர அமேசான் ப்ரைம் பயனர்கள், ஒன்ப்ளஸ் 5டி ஸ்மார்ட்போனின் ஆரம்ப அணுகல் விற்பனையைப் பெற முடியும். மற்றவர்கள் நவம்பர் 2- ஆம் தேதி முதல் மட்டுமே பெற முடியும்.

நிறைய வேறுபாடுகள் இருக்காது.!

நிறைய வேறுபாடுகள் இருக்காது.!

அம்சங்களை பொறுத்தமட்டில், ஒன்ப்ளஸ் 5 மற்றும் ஒன்ப்ளஸ் 5டி கருவிகளுக்கு இடையே நிறைய வேறுபாடுகள் இருக்காது என்று ஊகிக்க முடிகிறது. சில முக்கிய வேறுபாடுகளாக, முழு திரை வடிவமைப்பு 18: 9 விகித காட்சி மற்றும் பின்புறத்தில் கைரேகை சென்சரின் நிலை ஆகியவைகளை எதிர்பார்க்கலாம். நினைவூட்டும் வண்ணம் கடந்த ஆண்டு வெளியான ஒன்ப்ளஸ் 3 மற்றும் 3டி ஆகிய கருவிகளுக்கு இடையே மேம்படுத்தப்பட்ட ஸ்னாப்டிராகன் 821 எஸ்ஓசி பயன்பாடு மட்டுமே இருந்தது.

ஒரு பெரிய 6 இன்ச் டிஸ்ப்ளே.!

ஒரு பெரிய 6 இன்ச் டிஸ்ப்ளே.!

அப்படியாக ஒன்ப்ளஸ் 5டி ஸ்மார்ட்போனில், 2160 x 1080 பிக்சல்கள் அளவிலான முழு எச்டி ப்ளஸ் திரை தீர்மானம் மற்றும் 18: 9 என்ற காட்சி விகிதம் கொண்ட ஒரு பெரிய 6 இன்ச் டிஸ்ப்ளே எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த சாதனம் அதன் பக்கங்களில் குறைந்த அளவிலான பெஸல்களே கொண்டிருப்பதாகவும், ஒரு உயர் ஸ்க்ரீன்-டூ-ஸ்க்ரீன் விகிதத்தை பெறும் எனவும் கூறப்படுகிறது.

பின்புறம் எதிர்கொள்ளும் கைரேகை சென்சார்.!

பின்புறம் எதிர்கொள்ளும் கைரேகை சென்சார்.!

ஒரு உயரமான டிஸ்பிளேவுடன் வெளியாகும் ஒன்ப்ளஸ் 5டி ஆனது, முதல் முறையாக பின்புறத்தில் கைரேகை சென்சார் கொண்டு வருகிறது. பின்புறம் எதிர்கொள்ளும் கைரேகை சென்சார் ஆனது பணிச்சூழலியல்மிக்க இடங்களில் சிரமத்தை குறைக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

முன்பை விட சிறந்த இரட்டை கேமரா அமைப்பு.!

முன்பை விட சிறந்த இரட்டை கேமரா அமைப்பு.!

ஒன்ப்ளஸ் 5டி ஸ்மார்ட்போனின் குறிப்பிடத்தக்க மேம்படுத்தல்களில் முன்பை விட சிறந்த இரட்டை கேமரா அமைப்பு எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, 16எம்பி + 20எம்பி கலவையை பின்புறத்திலும், ஒன்ப்ளஸ் 5-ல் இல் காணப்பட்டதைப் போல 16எம்பி முன்பக்க கேமராவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது ஒன்ப்ளஸ் 5 ஸ்மார்ட்போனின் பின்புற கேமராவின் மூலம் கைப்பற்றப்படும் குறைந்த ஒளி படங்களை விட அதிக தரம் மிக்கதாக இருக்குமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஓசி.!

ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஓசி.!

வன்பொருள் அம்சங்களை பொறுத்தவரை, ஒன்ப்ளஸ் 5டி ஆனது மற்றொரு ஒன்ப்ளஸ் 5 ஆக இருக்குமென நம்பப்படுகிறது. அதாவது, அதே குறிப்புகளை கொண்டிருக்கும். 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு அல்லது 8ஜிபி ரேம் உடனான 128 ஜிபி உள்ளடக்க சேமிப்பு ஆகியவர்களுடன் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஓசி கொண்டு இயங்கலாம். சக்தி ஆதாரத்தை பொறுத்தமட்டில், ஒன்ப்ளஸ் 5 பயன்படுத்தும் 3300எம்ஏஎச் பேட்டரியைவிட அதிகமான பேட்டரியைக் கொண்டிருக்கலாம்.

Best Mobiles in India

English summary
OnePlus 5T set to redefine smartphone trend as it will be the first in many aspects. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X