புதிய மாறுபாடுகளுடன் வெளிவரும் ஒன்பிளஸ் 5டி.!
ஒன்பிளஸ் 5டி ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 2.45ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 835 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட் இந்த ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் மிட்நைட் பிளாக் மாறுதலில் ஒன்பிளஸ் 5டி ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டது. அதை தொடர்ந்து இப்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது இந்த ஒன்பிளஸ், வரும் ஜனவரி 26-ம் தேதி லவா ரெட் நிறத்தில் அறிமுகப்படுத்தப்படும் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

ஒன்பிளஸ் சீனாவின் நான்காவது ஆண்டு நிறைவை நினைவுகூறும் பொருட்டு அதன் சமீபத்திய ஸ்மார்ட்போனின் ஒன்பிளஸ் 5டி ஸ்மார்ட்போனின் லவா ரெட் வண்ண மாறுபாட்டை அறிமுகப்படுத்துகிறது.
இக்கருவி 6.01-இன்ச் முழு எச்டி அமோல்ட் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் 2160 x 1080 பிக்சல் தீர்மானம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. அதன்பின்பு 2.5டி வளைந்த டிஸ்பிளே மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஒன்பிளஸ் 5டி ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 2.45ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 835 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட் இந்த ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் 20எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்பு இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 16மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஒன்பிளஸ் 5டி ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 64/128ஜிபி உள்ளடக்க மெமரி இவற்றுள் அடக்கம், மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
இந்த ஒன்பிளஸ் 5டி ஸ்மார்ட்போன் மாடலில் 3300எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications