நவம்பர் 5 : புதிய ஒன்பிளஸ் 5டி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
பெசல்-லெஸ்: இந்த ஒன்பிளஸ் 5டி ஸ்மார்ட்போன் பொறுத்தவரை பெசல்-லெஸ் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. அதன்பின் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனம் புதிய ஒன்பிளஸ் 5டி என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, அதன்படி வரும் நவம்பர் 5-ம்தேதி அன்று இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போனை ஒன்பிளஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மொபைல் சந்தையில் ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போன் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இப்போது வரும் ஒன்பிளஸ் 5டி ஸ்மார்ட்போன் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

பெசல்-லெஸ்:
இந்த ஒன்பிளஸ் 5டி ஸ்மார்ட்போன் பொறுத்தவரை பெசல்-லெஸ் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. அதன்பின் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6-இன்ச் டிஸ்பிளே:
இக்கருவி 6-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் (2160-1080) பிக்சல் தீர்மானம் இவற்றுள்ள இடம்பெற்றுள்ளது. 18:9 என்ற திரை விகிதத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

டூயல் கேமரா வசதி:
ஒன்பிளஸ் 5டி ஸ்மார்ட்போனில் டூயல் கேமரா வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின் பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைரேகை ஸ்கேனர் :
இந்த ஒன்பிளஸ் 5டி ஸ்மார்ட்போனில் கைரேகை ஸ்கேனர், சிறந்த ரேம் வசதி மற்றும் உள் சேமிப்பு, பேட்டரி போன்ற வசதிகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளன.


Click it and Unblock the Notifications