Subscribe to Gizbot

இந்திய ரசிகர்களை ஆக்கிரமிக்கும் ஒன்ப்ளஸ் 5டி: இதோ ஆதாரம்.!

Written By:

ஒன்ப்ளஸ் 5டி ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனையானது இந்திய ஸ்மார்ட்போன் சந்தையை சற்று நேரம் நிறுத்தி விட்டது என்றே கூறவேண்டும். மிக வலிமையான தலைமை ஸ்மார்ட்போனாக களமிறங்கிய இக்கருவி ஆரம்ப நாளே அதிரடி காட்டி, ஆன்லைன் உலகை ஸ்தம்பிக்க செய்து, ப்ரைம் உறுப்பினர்களுக்கு மத்தியிலான ஒரு நாள் வசூல் சாதனைகளை முறியடித்துள்ளது.

இந்திய ரசிகர்களை ஆக்கிரமிக்கும் ஒன்ப்ளஸ் 5டி: இதோ ஆதாரம்.!

ஒரு ஆற்றல்மிக்க விலை-புள்ளி மற்றும் உயர்மட்ட-வரிசையிலான அம்சங்கள் கொண்ட ஒன்ப்ளஸ் 5டி ஆனது, வலுவான முறையில் வாடிக்கையாளர்களை சென்றடைந்துள்ளது என்பதோடு, இதே பிராண்டின் முந்தைய முன்னணி-சாதனமான ஒன்ப்ளஸ் 5 ஸ்மார்ட்போன் உடன் ஒப்பிடும்போது இரண்டு மடங்கு பெரிய வெற்றியை அடைந்துள்ளது என்பதையும் ஒற்றுக்கொண்டே ஆகவேண்டும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
நேர்மறையான கருத்து

நேர்மறையான கருத்து

அமேசான்.இன் வலைத்தளத்தில் நிகழந்த முதலாவது விற்பனை தினத்தன்று, வாடிக்கையாளர்களிடமிருந்து கிடைத்த நேர்மறையான கருத்துக்களின் காரணமாக நவம்பர் 24 அன்று அமேசான்.இன் மற்றும் ஒன்ப்ளஸ்ஸ்டோர்.இன் ஆகியவற்றில் சிறப்பு முன்னோட்ட விற்பனை ஒன்றை நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விற்பனை 12 மணி முதல் 1 மணி வரை அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் திறக்கப்படும்.

உலகம் முழுவதும் பாப்-அப் நிகழ்வுகள்

உலகம் முழுவதும் பாப்-அப் நிகழ்வுகள்

இக்கருவியின் பிரத்தியேக பாப்-அப் நிகழ்வுகளின் வழியாக ஒன்ப்ளஸ் ரசிகர்களுக்கு சமீபத்திய ஒன்ப்ளஸ் 5டி கைபேசியின் முதன்மையான அனுபவத்தைப்பெ பெறும் வாய்ப்புகள் கிடைத்தன. ஆம்ஸ்டர்டாம், இங்கிலாந்து, பாரிஸ், ஜெர்மனி, இத்தாலி, ஹாலந்து போன்ற நகரங்களில் பாப்-அப் சந்திப்புகள் நடத்தப்பட்டன. மேலும் தில்லி மற்றும் பெங்களூரின் சில மத்திய இடங்களில் பாப்-அப் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

முதல் அனுபவம் மற்றும் சொந்த கைபேசியை வாங்குமொரு வாய்ப்பு

முதல் அனுபவம் மற்றும் சொந்த கைபேசியை வாங்குமொரு வாய்ப்பு

ஆர்வமுள்ள வாடிக்கையாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் உதவும் முனைப்பில், நிறுவனத்தின் தொண்டர்கள் பாப்-அப் நிகழ்வுகளின் போது கிடைக்கப்பெற்றன. இந்த தொண்டர்கள் மற்றும் செய்தி தொடர்பாளர்கள் புதிய ஸ்மார்ட்போன் மற்றும் பிராண்ட் தொடர்பான ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கின்றனர். ரசிகர்கள் மற்றும் ஆர்வமுள்ள வாங்குபவர்களின் நீண்ட வரிசையை பாப்-அப் நிகழ்வுகளிலும் காணப்பட்டது.

இந்திய விற்பனையில் சாதனை

இந்திய விற்பனையில் சாதனை

சந்தேகத்திற்கு இடமின்றி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹேண்ட்செட் ஆன ஒன்ப்ளஸ் 5டி ஒரு ஆக்ரோஷமான விலை புள்ளியில் தொடங்கப்பட்டது. சில வெளிப்படையான விலையுயர்ந்த மற்றும் தேவையற்ற கருவிகளுக்கு மத்தியில் சிறப்பானதொரு சாதனமாக இது பார்க்கப்பட்டது, அதன் பிரதிபலிப்பே இந்தியாவில் நிகழ்ந்த ஒன்ப்ளஸ் 5டி ஸ்மார்ட்போனின் சாதனைமிக்க விற்பனை.ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் ட்விட்டர் ஒன்றின்படி, உலகம் முழுக்க வெறும் 6 மணி நேரத்தில் விற்ற ஒன்ப்ளஸ் 5டி ஆனதின் மிகவேகமான விற்பனை இந்தியாவில் நிகழ்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனை அமேசான் இந்தியாவில் (பிரதம உறுப்பினர்களுக்கு மட்டுமே), மற்றும் ஒன்ப்ளஸ் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஒரு ஆரம்ப அணுகல் விற்பனையாக நடந்தது.

அம்சங்களை பொறுத்தமட்டில்..

அம்சங்களை பொறுத்தமட்டில்..

இரட்டை சிம் (நானோ) ஆதரவு கொண்ட ஒன்ப்ளஸ் 5டி ஆனது ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்ட ஆக்சிஜென் 4.7 கொண்டு இயங்கும். ஒன்ப்ளஸ் 5 ஸ்மார்ட்போனில் காணப்படாத பேஸ் அன்லாக் அம்சம் இக்கருவியை சேர்க்கப்பட்டுள்ளது. இது மேம்பட்ட முக அங்கீகார நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்டது மற்றும் ஸ்மார்ட்போனை 0.4 வினாடிகளில் "பாதுகாப்பாக திறகும்" அடையாள புள்ளிகளைக் கொண்டுள்ளது.

பின்பக்கம் உட்பொதிக்கப்பட்டுள்ள கைரேகை சென்சரை நீண்ட நேரம் அழுத்துவதன் மோளம் பயனர்கள் செல்பீக்களை எடுத்துக்கொள்ளலாம், மேலும் நோட்டிபிகேஷன் ஷேட்களை கொண்டு வர கைரேகை சென்சாரை ஸ்வைப் செய்யலாம். ஒன்ப்ளஸ் 5டி ஆனது, 18: 9 விகித அளவிலான, 401பிபிஐ பிக்சல் அடர்த்தி மற்றும் 2.5டி கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு கொண்ட 6.01 அங்குல முழு எச்டி ப்ளஸ் (1080x1920 பிக்சல்கள்) அமோஎல்இடி டிஸ்பிளே கொண்டுள்ளது.

மேலும் இந்த டிஸ்பிளே எஸ்ஆர்ஜிபி (sRGB) மற்றும் டிசிஐI-பி3 கலர் கமட்ஸ் ஆகியவ் அம்சங்களையும் ஆதரிக்கிறது. ஒன்ப்ளஸ் 5 போன்றே, ஒன்ப்ளஸ் 5டி ஸ்மார்ட்போனும் ஒரு ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. 2.45ஜிகாஹெர்ட்ஸ் உடனான 6ஜிபி அல்லது 8ஜிபி எல்பிடிடிஆர்4எக்ஸ் ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

இரட்டை பின்புற கேமரா அமைப்பு

இரட்டை பின்புற கேமரா அமைப்பு

கேமராத்துறையை பொறுத்தமட்டில், இந்த ஸ்மார்ட்போனில் ஒன்ப்ளஸ் அதன் இரட்டை பின்புற கேமரா அமைப்பை மேம்படுத்தியுள்ளது. முதன்மை சென்சார் கேமராவது ஒன்ப்ளஸ் 5 ஸ்மார்ட்போனில் காணப்பட்ட அதே சோனி ஐஎம்எக்ஸ்398 சென்சார், 1.12 மைக்ரான் பிக்சல்கள் மற்று எப் / 1.7 துளை கொண்ட ஒரு 16 மெகாபிக்சல் கேமராவாக இருப்பினும் கூட, இது 27.22 மிமீ ஒரு மேம்படுத்தப்பட்ட குவிய நீளம் கொண்டதாக மேம்படுத்தப்பட்டுள்ளது.

பின்பக்கத்தின் இரண்டாம் நிலை கேமராவை பொறுத்தமட்டில், சோனி ஐஎம்எக்ஸ்376கே சென்சார் மற்றும் ஒரு டெலிஃபோட்டோ லென்ஸுடன் கூடிய ஒரு 20 மெகாபிக்சல் கேமரா உள்ளது. இது 1 மைக்ரான் பிக்சல் அளவைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது, இருப்பினும், எப் / 1.7 துளை மற்றும் குவிய நீளம் 27.22 மிமீ வரை குறிப்பிட்ட மேம்பாடுகளை பெற்றுள்ளது. இரட்டை-எல்இடி ஃப்ளாஷ் கொண்டிருக்கும் இதன் பின்புற கேமரா அமைப்பு 10கே வீடியோவில் நொடிக்கு 60 ப்ரேம்கள் என்ற வேகத்தில் வீடியோக்களை பதிவு செய்யலாம்.

ஒன்ப்ளஸ் 5டி ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தை பொறுத்தமட்டில், ஒன்ப்ளஸ் 5 உடன் அனைத்து அம்சங்களிலும் ஒரே மாதிரியாக இருக்கிறது, 16-மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 371 சென்சார், 1-மைக்ரான் பிக்சல்கள் மற்றும் எப் / 2.0 இன் ஒரு துளை ஆகியவைகளை கொண்டுள்ளது. மேலும் இது நொடிக்கு 30 ப்ரேம்கள் என்ற வேகத்தில் 1080பி வீடியோக்களை பதிவு செய்யலாம்.

இணைப்பு ஆதரவு

இணைப்பு ஆதரவு

செல்பீ கேமராவை போலவே உள்ளமைக்கப்பட்ட சேமிப்பு கட்டமைப்புகளில் ஒன்ப்ளஸ் 5 உடன் 5டி ஒற்றுப்போகிறது. இது 64 ஜிபி அல்லது 128ஜிபி சேமிப்புடன் வருகிறது. இணைப்பு ஆதரவுகளை பொறுத்தமட்டில், 4ஜி வோல்ட், டூயல்-பேண்ட் (2.4ஜிகாஹெர்ட்ஸ், 5ஜிகாஹெர்ட்ஸ்) வைஃபை 802.11ஏசி உடன் மிமோ (MIMO 2x2), ப்ளூடூத் வி5.0, 3.5மிமீ ஆடியோ ஜாக், மற்றும் ஒரு யூஎஸ்பி டைப்சி- (வி2.0) போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது.

ஒரு நீக்கமுடியாத 3300எம்ஏஎச் பேட்டரி மூலம் இயக்கப்படும் ஒன்ப்ளஸ் 5டி ஆனது நிறுவனத்தின் டாஸ் சார்ஜ் (5வி, 4ஏ) பாஸ்ட் சார்ஜ் செய்யும் தொழில்நுட்பத்தை ஆதரிக்கிறது. சுமார் 162 கிராம் எடையும், 156.1x75x7.3 மிமீ அளவும் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் அதன் முன்னோடி விட நீண்ட, பரந்த, மற்றும் தடிமனாகதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

விலை நிர்ணயம்

விலை நிர்ணயம்

64 ஜிபி மற்றும் 128 ஜிபி (மிட்நைட் கருப்பு) என்ற இரண்டு சேமிப்பு மாறுபாடுகளில் வெளியாகியுள்ள ஒன்ப்ளஸ் 5டி ஆனது முறையே ரூ.32,999/- மற்றும் ரூ.37,999/- என்ற விலை நிர்ணயத்தை கொண்டுள்ளது. 40கே பட்ஜெட் பிரிவில் உள்ள அனைத்து ஸ்மார்ட்போன்களையும் இந்த விலைப்புள்ளி கடுமையான போட்டியை உண்டாகும் என்பதில் ஐயமில்லை.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
OnePlus 5T does it again: Creates launch day sales record in just 6 hours. Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot