புதிய மாறுபாடுகளுடன் வெளிவரும் ஒன்பிளஸ் 5டி.!
ஒன்பிளஸ் 5டி ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 2.45ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 835 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட் இந்த ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனம் தற்சமயம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி ஒன்பிளஸ் 5டி ஸ்மார்ட்போன் மாடல் புதிய நிறத்தில் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் பிரபல சான்ட்ஸ்டோன் நிற ஸ்மார்ட்போன் விரைவில் வெளிவரும் என தகவவல் வெளிவந்துள்ளது, மேலும் பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். இந்நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது, அதில் மர்ம பெட்டியை ஒருவர் கையில் வைப்பது போல் படமாக்கப்பட்டுள்ளது.
இந்த மாதம் புதிய மாறுபாடுகளுடன் ஒன்பிளஸ் 5டி ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும், மேலும் இந்திய மொபைல் சந்தையில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது இந்த ஒன்பிளஸ் 5டி ஸ்மார்ட்போன்.
இக்கருவி 6.01-இன்ச் முழு எச்டி அமோல்ட் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (2160-1080)பிக்சல் தீர்மானம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. அதன்பின்பு 2.5டி வளைந்த டிஸ்பிளே மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்
ஒன்பிளஸ் 5டி ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 2.45ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 835 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட் இந்த ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் 20எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்பு இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 16மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
ஒன்பிளஸ் 5டி ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 64/128ஜிபி உள்ளடக்க மெமரி இவற்றுள் அடக்கம், மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
இந்த ஒன்பிளஸ் 5டி ஸ்மார்ட்போன் மாடலில் 3300எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications