ஒன்ப்ளஸ் 3T மாடலைவிட ஒன்ப்ளஸ் 5 எந்த வகையில் சிறந்தது?

புதிய ஒன்ப்ளஸ் 5 மாடலின் சிறப்பு அம்சம்

By Siva
|

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துள்ள நிறுவனங்களில் ஒன்று ஒன்ப்ளஸ் நிறுவனம். இந்த நிறுவனம் கடந்த ஆண்டு வெளியிட்ட ஒன்ப்ளஸ் 3 மற்றும் ஒன்ப்ளஸ் 3T ஆகிய மாடல்கள் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்றது.

ஒன்ப்ளஸ் 3T மாடலைவிட ஒன்ப்ளஸ் 5 எந்த வகையில் சிறந்தது?

நடுத்தர விலையில் உயர்ந்த டெக்னாலஜி ஸ்போன்களை கொடுத்து வருவதால் தான் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் வெகுவேகமாக மக்களை சென்று அடைந்தது.

இதே தரம், டெக்னாலஜி உள்ள மற்ற நிறுவனங்களின் போன்கள் இதைவிட இருமடங்கு விலை இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஒன்ப்ளஸ் நிறுவனம் தனது அடுத்த மாடலான ஒன்ப்ளஸ் 5 மாடலை வெகுவிரைவில் வெளியிட திட்டமிட்டு உள்ளது.

வரும் வாரங்களில் வெளியாகலாம் என்று கூறப்படும் இந்த ஒன்ப்ளஸ் 5 மாடல் ஸ்மார்ட்போன் குறித்து பல்வேறு வதந்திகளும், உறுதி செய்யப்பட்ட செய்திகளும் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்த மாடல் குறித்து நமக்கு கிடைத்துள்ள தகவல்களை தற்போது பார்ப்போம்

ஒன்ப்ளஸ் 5 மாடல் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்

ஒன்ப்ளஸ் 5 மாடல் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்

இந்த புதிய ஒன்ப்ளஸ் 5 மாடல் ஸ்மார்ட்போனில் லேட்டஸ்ட் குவால்கோமின் ஆக்டோகோர் பிராஸசர் ஸ்னாப்டிராகன் 835 அமைந்துள்ளது என்ற தகவல் வாடிக்கையாளர்களை மகிழ்ச்சிப்படுத்தும் ஒரு தகவல்.

இதே நிறுவனத்தின் கடந்த மாடலான ஒன்ப்ளஸ் 3 மற்றும் ஒன்ப்ளஸ் 3T மாடல்களில் ஸ்னாப்டிராகன் 821 தன்மை இருந்தது. எனவே இந்த புதிய ஒன்ப்ளஸ் 5 மாடல் ஸ்மார்ட்போன், பழைய மாடலை விட 10% வேகமாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாடலில் கிராபிக்ஸ் மற்றும் பவர் அம்சங்கள் சிறப்பானதாக உள்ளது.

டூயல் லென்ஸ் கேமிரா

டூயல் லென்ஸ் கேமிரா

ஒன்ப்ளஸ் மாடல்களில் டூயல் லென்ஸ் கேமிரா என்பது எப்போதும் இருக்கக்கூடிய ஒன்றுதான். எனவே இந்த புதிய ஒன்ப்ளஸ் 5 மாடல் ஸ்மார்ட்போனிலும் டூயல் லென்ஸ் கேமிரா இருக்கும் என்பதை நாம் சொல்லவே தேவையில்லை.

ஆனாலும் இந்த போனின் கேமிரா மாடல் எண் A5000 மிகச்சிறந்த அனுபவங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் என ஒன்ப்ளஸ் நிறுவனத்தார் உறுதி அளித்துள்ளனர்.

8GB ரேம் போன்?

8GB ரேம் போன்?

கடந்த மாடலான ஒன்ப்ளஸ் 3 மற்றும் ஒன்ப்ளஸ் 3T மாடல்களில் 6GB ரேம் வைத்து அனைவரையும் அசத்திய நிலையில் தற்போது இந்த புதிய ஒன்ப்ளஸ் 5 மாடல் ஸ்மார்ட்போனில் 8GB ரேம் வைத்து அனைவரையும் மூக்கின் மேல் விரல் வைக்க செய்துள்ளது.

இந்த தகவல் லீக்கான இந்த மாடலின் புகைப்படங்களில் இருந்து தெரிய வருகிறது. இந்த தகவல் உண்மையென்றால் ஸ்மார்ட்போன் உலகின் இது ஒரு புரட்சி என்றுதான் சொல்ல வேண்டும்.

பேட்டரி திறன் எப்படின்னு தெரியுமா?

பேட்டரி திறன் எப்படின்னு தெரியுமா?

என்னதான் ஒரு மாடல் ஸ்மார்ட்போனில் மிகச்சிறந்த டெக்னாலஜி இருந்தாலும் அதன் பேட்டரி மொக்கையாக இருந்தால் பெயிலியர் ஆகிவிடும். ஆனால் அந்த வகையில் ஒன்ப்ளஸ் நிறுவனத்தார் சரியான வகையில் 4000 mAh திறன் கொண்ட பேட்டரியை இந்த புதிய ஒன்ப்ளஸ் 5 மாடல் ஸ்மார்ட்போனில் வைத்துள்லனர்.

இதற்கு முந்தைய மாடல்களில் 3600 mAh திறன் கொண்ட பேட்டரி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த போனில் ஸ்னாப்டிராகன் 835 SoC அம்சங்கள் இருப்பதால் பேட்டரி திறன் குறைந்த அளவே செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் முந்தைய மாடலை விட 25% மிக வேகமாக சார்ஜ் ஆகும் என்பதும் ஒரு சிறப்பு அம்சம் ஆகும்.

Best Mobiles in India

Read more about:
English summary
OnePlus 5 is coming sometime this summer. We have come up with a list of features those will make the smartphone better than the OnePlus 3T.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X