ஒன்ப்ளஸ் 5 ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது.!

|

அனுதினமும் ஒன்ப்ளஸ் 5 பற்றி கசிவுகள் மற்றும் நிச்சயமற்ற தகவலைகளை கேட்டுக்கேட்டு நீங்கள் சலித்துப்போய் விட்டீர்கள் அல்லது ஏமாந்துபோய் கிடக்குறீர்கள் என்றால் இதோ நீங்கள் ஆவலோடு காத்திருந்த அதிகாரப்பூர்வமான செய்தி வெளியாகி இருக்கிறது.

ஒன்ப்ளஸ் 5 ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி.!

ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் அதன் அடுத்த தலைமுறை ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி தற்போது உறுதிப்படுத்தியுள்ளது. இது ஜூன் 20-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது என்று இந்த வாரத்திற்கு முன்னதாக இணையத்தில் வெளிவந்த ஒரு லீக்ஸ் போஸ்டர் தெரிவித்திருந்தது. தற்போது அது உறுதி செய்யப்பட்டு இந்தியாவில் வரும் ஜூன் 22-ஆம் தேதி மும்பையில் மதியம் 2மணி அளவில் நடைபெறவிருக்கும் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

முன்பு ஒன்ப்ளஸ் நிறுவனம் இந்த (ஜூன்) மாதத்தில், அதன் ஒன்ப்ளஸ் 5 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்திருந்தது. முந்தைய ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டைபோலவே இந்த நோகழ்வும் நியூயார்க், அதே வேளை,பாரிஸ், ஆம்ஸ்டெர்டாம், பேர்லினில் பாப்-அப் நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளது. இருப்பினும் நிறுவனம் இதுவரை நிகழ்வை பற்றிய விவரங்கள் எதையும் விரிவாக விளக்கவில்லை.

லைவ் ஸ்ட்ரீம்

லைவ் ஸ்ட்ரீம்

மேலே குறிப்பிட்டுள்ளபடி, இந்தியாவில் (ஜூன் 22-ஆம் தேதி) ஒன்ப்ளஸ் 5 தொடக்க நிகழ்வானது தனித்தன்மையாகும் மேலும் இந்நிகழ்வு நிறுவனத்தின் இந்திய தளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

கேமரா

கேமரா

ஒளியியல் அடிப்படையில், கசிந்த விவரக்குறிப்புகளின்படி ஒன்ப்ளஸ் 5 ஆனது ஒரு 23 மெகாபிக்சல் பின்புற சென்சார் மற்றும் ஒரு 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா வரும் என்று கூறுகின்றன.

டூயல் கேமரா அமைப்பு

டூயல் கேமரா அமைப்பு

உடன் இந்த தொலைபேசி ஒரு இரட்டை கேமரா அமைப்பும் கொண்டு உள்ளது என்றும் லீக்ஸ் தகவல்கள் கூறுகின்றன. அது நிஜமாகினால் இயக்கருவி 23 மெகாபிக்சல் சென்சார் கொண்டு வெளிவரலாம். ஆனால் இது சார்ந்த விவரத்தில் அதிக இல்லை.

டிஸ்பிளே

டிஸ்பிளே

கேமராக்கள் தவிர ஒன்ப்ளஸ் 5 சாதனம் ஆண்ட்ராய்டு 7.1 நௌவ்கட் (பெட்டிக்கு வெளியே) கொண்டு இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் ஒரு 5.5 அங்குல டிஸ்பிளே கொண்டுள்ளது

மெமரி

மெமரி

மேலும் இக்கருவி 2.35ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஓசி உடன் இணைந்து 8 ஜிபி ரேம் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் 64ஜிபி மற்றும் 128ஜிபி என்ற இரண்டு வகையான உள்ளமைக்கப்பட்ட சேமிப்பு விருப்பங்களை கொண்டும் வெளிவரலாம்.

கைரேகை சென்சார்

கைரேகை சென்சார்

லீக்ஸ் தகவலுக்கு அப்பால் ஒன்ப்ளஸ் 5 கருவியானது க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 835 எஸ்ஓசி, முன்பக்கம் எதிர்கொள்ளும் கைரேகை சென்சார் மற்றும் குறைந்த ஒளியில் கூட செயல்திறன் மிக்க கேமரா உருவாக்கம் ஆகிய பணிகளில் ஈடுபடுவது உறுதி.

Best Mobiles in India

English summary
OnePlus 5 Launch Set for June 20; India Launch Set for June 22. Read more about this in Tamil GiBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X