ஆப்பிள் கருவிகளின் எதிரி ஒன்ப்ளஸ் 5 : அறிமுக தேதி வெளியானது.!

Written By:

ஒன்ப்ளஸ் 5 சார்ந்த டீஸர்கள் கருவியின் மீதான எதிர்பார்ப்பு வேகத்தை அதிகரிக்கின்றன. அடிக்கடி வெளியாகும் தகவல்கள் மூலம் வெளியீடு மிகவும் அருகில் உள்ளது என்பதை மறைமுகமாக நிறுவனம் கூறுகிறது. இப்போது வெளியாகியுள்ள ஒரு இன்டர்நெட் மெயில் லீக்ஸ் தகவலானது சாதனத்தின் ஒரு சாத்தியமான வெளியீட்டு தேதியை தருகிறது. அதாவது ஜூன் 15-ஆம் தேதி இக்கருவி வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

ஆப்பிள் கருவிகளின் எதிரி ஒன்ப்ளஸ் 5 : அறிமுக தேதி வெளியானது.!

விபோ மூலம் வெளியிடப்பட்டுள்ள இந்த அதிகாரப்பூர்வமாக இருந்தால் ஒன்ப்ளஸ் 5 ஜூன் 15 அன்று துவங்கும். மேலும் இந்த தா சாதனத்தின் அம்சங்களை பொறுத்தமட்டில் ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஓசி, சாத்தியமான நான்கு வண்ண மாறுபாடுகள், மற்றும் ஒரு சிறந்த கேமரா உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் கசிவுகள் மூலம் வெளியான தகவல்களின் கீழ் இக்கருவி பின்புறத்தில் ஒரு செங்குத்தான இரட்டை கேமரா அமைப்பு கொண்டுருக்கும் என்று அறிவிக்கிறது. மேலும் இந்த கசிவு ஒன்ப்ளஸ் 5 ஆனது முதல் தரமான பாதுகாக்கக்கூடிய மற்றும் கவர்ச்சியான ஒரு கவர் கொண்டு இருப்பதைக் காட்டுகிறது. ஒரு எல்இடி ப்ளாஷ் உடனான செங்குத்தான இரட்டை கேமரா அமைப்பு மற்றும் வால்யூம் பொத்தான்கள், பவர் பொத்தான் ஸ்மார்ட்போனின் வலது விளிம்பில் உள்ளது.

ஆப்பிள் கருவிகளின் எதிரி ஒன்ப்ளஸ் 5 : அறிமுக தேதி வெளியானது.!

ஒன்ப்ளஸ் 5 கருவியின் மிக அற்புதமான அம்சமாக திகழும் இரட்டை கேமரா அமைப்பு டிஎக்ஸ்மார்க் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்மார்ட்போனின் முன்பக்கமும் அதே போன்ற ஒரு இரட்டை கேமரா அமைப்பு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு குறிப்பிடத்தக்க 3600எம்ஏஎச் பேட்டரி கொண்டிருக்கலாம்.

இக்கருவி 5.5 இன்ச் முழு எச்டி சாதனமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, இருப்பினும் ஒரு க்வாட் எச்டி அம்சம் கொண்டிருக்கவும் சிறிய வாய்ப்பு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இரண்டு வகைகளில் வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது - 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி சேமிப்பு மற்றும் 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள் சேமிப்புகொண்ட ஒரு உயர் இறுதியில் மாதிரி. பிளாக், தங்கம், செர்ரி ரெட் மற்றும் ஒன் ப்ளஸ் என்கிற யூனிகார்னால் ஈர்க்கப்பட்ட ஒரு புதிய வண்ணம் என நான்கு வெவ்வேறு வண்ணங்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read more about:
English summary
OnePlus 5 Launch Set for June 15, Tips Leaked Internal Mail. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot