ஒன்ப்ளஸ் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி கேஸ்பேக், எக்ஸ்சேன்ஜ், நோ காஸ்ட் இஎம்ஐ சலுகைகள்.!

|

தீபாவளி பண்டிகை நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. இந்த புதிய தீபாவளி பண்டிகை பருவத்தில் வாங்குவதற்கு ஏராளமான தேவைகள் உள்ளன. ஒருவேளை அந்த தேவைகளில் உங்களுக்காக அல்லது உங்களுடைய அன்புக்குரியவகளுக்காக ஒரு புதிய ஸ்மார்ட்போன் வாங்க அல்லது பரிசளிக்க திட்டமிட்டால், இதை விட சிறந்த நேரம் இல்லை.

ஒன்ப்ளஸ் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி கேஸ்பேக், எக்ஸ்சேன்ஜ் சலுகைகள்.!

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையானது விலை வகைப்படி பல நல்ல சாதனங்களின் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது, ஆனால் அவைகளில் நீங்கள் சிறந்ததை அனுபவிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

பரிந்துரைக்கப்பட்ட பிராண்ட்

பரிந்துரைக்கப்பட்ட பிராண்ட்

ஆக சமீபத்திய சைபர் மீடியா ஆராய்ச்சியின் ஒரு அறிக்கையின்படி, ​​இந்தியாவில் மிகவும் பரிந்துரைக்கப்பட்ட பிராண்ட் ஆக கருதப்படும் ஒன்ப்ளஸ் ஸ்மார்ட்போன் ஒன்றை வாங்குவதற்கு பரிந்துரை செய்கிறோம். இந்நேரம் நீங்கள் யூகிக்க ஆரம்பித்து இருப்பீர்கள்; உங்கள் யூகம் சரியென்றால் - ஆம் நாம் இங்கு ஒன்ப்ளஸ் 5 பற்றி தான் பேசுகிறோம். இந்த தீபாவளிக்கு இதைவிட செயல்திறன் மிக்க ஒரு பண்டிகை கால பரிசை வழங்க முடியாது.

அமேசான் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள்

அமேசான் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள்

இந்திய வாடிக்கையாளர்கள் இக்கருவியை இன்னும் அணுகக்கூடிய வகையில், அமேசான்.காம் வலைத்தளத்தில் ஒன்ப்ளஸ் 5 ஸ்மார்ட்போனிற்கு பல தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.3000/- எக்ஸ்சேன்ஜ் ஆபர்

ரூ.3000/- எக்ஸ்சேன்ஜ் ஆபர்

அதாவது நீங்கள் உங்கள் பழைய ஸ்மார்ட்போன் ஒன்றை கொடுத்து எக்ஸ்சேன்ஜ் ஆபர் மூலம், ரூ.3000/- வரையிலான தள்ளுபடியை பெறலாம். மேலும் இக்கருவிக்கு 12 மாதங்கள் வரையிலான 'நோ காஸ்ட் இஎம்ஐ' சலுகையும் கிடைக்கிறது, இதன் மூலம் நீங்கள் ஒரு முழுமையான தொகையை செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது.

கேஷ்பேக் சலுகை

கேஷ்பேக் சலுகை

அது மட்டுமின்றி ஒன்ப்ளஸ் 5 மீது ரூ,2000/- அளவிலான கேஷ்பேக் சலுகை ஒன்றையும் நீங்கள் பெறலாம். எல்லாவற்றிற்கும் மேலாக குறைந்தபட்சம் ரூ.25,000/- அளவிலான கிளீட்ரிப் வவுச்சர்களும் இந்த தீபாவளி பண்டிகை காலத்தில் கிடைக்கும்.

5.5 அங்குல 1080பி டிஸ்பிளே

5.5 அங்குல 1080பி டிஸ்பிளே

ஒன்ப்ளஸ் 5 ஸ்மார்ட்போனின் அம்சங்களை பொறுத்தமட்டில், ஒரு 5.5 அங்குல 1080பி டிஸ்பிளே கொண்டு க்வால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது . ஒரு சூப்பர் மெல்லிய ஆண்ட்ராய்டு கைபேசியான இது 8 ஜிபி ரேம் வரை வழங்குகிறது. இதன் ஒரு அம்சம் கூட இதர பிரீமியம் முதன்மை ஸ்மார்ட்போன்களுடன் பொருந்தவில்லை.

16எம்பி சோனி ஐஎம்எக்ஸ் 398 சென்சார்

16எம்பி சோனி ஐஎம்எக்ஸ் 398 சென்சார்

கேமராத்துறையை பொறுத்தமட்டில், இக்கருவி நிறுவனத்தின் முதல் இரட்டை கேமரா அமைப்பு சாதனமாக திகழ்கிறது. இது பொக்கே காட்சிகளை கவரும் 16எம்பி சோனி ஐஎம்எக்ஸ் 398 சென்சார் கொண்டுள்ளது. மறுபக்கம் 16எம்பி சென்சார் (எப் / 1.7 துல்லியம்) மற்றும் 20எம்பி டெலிஃபோட்டோ லென்ஸுடன் இணைந்து செயல்படுகிறது.

இரண்டு சேமிப்பு வகை

இரண்டு சேமிப்பு வகை

இந்த ஸ்மார்ட்போன் இரண்டு சேமிப்பு வகைகளில் வருகிறது - 64ஜிபி மற்றும் 128ஜிபி மற்றும் ஒரு 3300எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது. இது சந்தேகத்திற்கு இடமின்றி பாஸ்ட் சார்ஜ் தொழில்நுட்பம் கொண்டுள்ளது. டாஷ் சார்ஜர் உடன் இணைந்திருப்பதால், நீங்கள் பேட்டரி காப்பு பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை.

ஒன்ப்ளஸ் 3டி

ஒன்ப்ளஸ் 3டி

ஒன்ப்ளஸ் 3டி மீதான சலுகைகளை பொறுத்தமட்டில், எளிமையான இஎம்ஐ மற்றும் கேஷ்பேக் சலுகை கிடைக்கிறது. ஒன்ப்ளஸ் 3டி ஸ்மார்ட்போனின் மென்மையான கோல்ட் வேரியண்ட் ரூ.24,999/-க்கும் மற்றும் அதன் கன் மெட்டல் வேரியண்ட் ரூ.25.999/-க்கும் கிடைக்கிறது. இந்த தீபாவளி ஒரு சிறந்த பண்டிகைக் காலமாக உருவாக இந்த உயர் செயல்திறன் மிக்க கைபேசிகள் உங்களுக்கு உதவும். மேலும் பல் ஒன்ப்ளஸ் ஸ்மார்ட்போன்களின் மீதான உற்சாகமான சலுகைகளை பார்வையிட ஒன்ப்ளஸ்ஸ்டோர் (oneplusstore.in) வலைத்தளத்திற்குள் நுழையவும்.`

Best Mobiles in India

English summary
OnePlus 5 is the best flagship smartphone you can buy this Diwali season. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X