அடேங்கப்பா.. ஆப்பிளுக்கு ஆப்பு ரெடி - ரூ.32,999/-க்கு ஒன்ப்ளஸ் 5.!

|

ஜூன் 20-ஆம் தேதி மாபெரும் எதிர்பார்ப்புகளுக்குள் உள்ள ஒன்ப்ளஸ்4 ஸ்மார்ட்போன் வெளியிடப்பட உள்ளது. இந்தியாவை பொறுத்தம்மட்டில் மும்பையில் நடக்கும் நிகழ்ச்சியில் ஜூன் 22 அன்று அறிமுகமாகிறது.

வரவிருக்கும் இந்த பிளாக்ஷிப் கில்லர் சாதகமானது இரண்டு வகைகளில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது - 6 ஜிபி ரேம் மற்றொன்று 8 ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன். தாமதமாக வந்தாலும் ஒன்ப்ளஸ் 5 பற்றிய பல வதந்திகள் மற்றும் ஊகங்கள் முழுவதும் வெளி வந்துள்ளன. மேலும், ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஓசி பயன்பாடு போன்ற ஒரு சில அதிகாரப்பூர்வ உறுதிமொழிகளும் ஆன்லைனில் வெளிவந்துள்ளன. இப்போது ட்ரூடெக் வெளியிட்டுள்ள ஒன்ப்ளஸ் 5 பற்றிய ஒரு சுவாரஸ்யமான விவரத்தை காண்போம்.

இந்திய விலை வெளியானது

இந்திய விலை வெளியானது

விரைவில் வெளியாகவுள்ள இக்கருவியின் விலை நிர்ணயம் ரூ.32,999/- இருக்கலாம். அதாவது 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு கொண்டிருக்கும் அடிப்படை மாறுபாடு ரூ.32,999 மற்றும் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு கொண்ட உயர் இறுதியில் மாதிரி ரூ.37.999/- விலை நிர்ணயம் பெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

லீக்ஸ் விலை நிர்ணயம் நடைமுறையாக தெரிகிறது

லீக்ஸ் விலை நிர்ணயம் நடைமுறையாக தெரிகிறது

ஒன்ப்ளஸ் 3டி அடிப்படை சாதனத்துடன் ஒப்பிட்டால் அதன் உயர்-முடிவு வகை கருவி ரூ.3,000 அதிக விலை நிர்ணயம் பெற்றது. ஆக தற்போது கசிந்துள்ள ஒன்ப்ளஸ் 5 மாறுபாடுகளுக்கு இடையிலேயான வித்தியாசம் ரூ.5,000/- ஆக உள்ளது. எனவே இதுவொரு நடைமுறையான ஒன்றாகவே தெரிகிறது.

ரசிகர்களும் நிகழ்வில் கலந்து கொள்ளலாம்

ரசிகர்களும் நிகழ்வில் கலந்து கொள்ளலாம்

ஜூன் 22-ஆம் தேதி இந்தியாவின் மும்பையில் நடக்கும் நிகழ்ச்சியில் ரூ.999/- மதிப்புள்ள அழைப்பிதழை வாங்குவதில் மூலம் ரசிகர்களும் நிகழ்வில் கலந்து கொள்ளலாம். ஜூன் 12 அன்று அதிகாரப்பூர்வ ஒன்ப்ளஸ் ஸ்டோரிலிருந்து அழைப்பிதழ்களை நீங்கள் பெறலாம். மொபைல் அறிமுகம் ஆன அதே நாளில் நிறுவன்தான் இ-காமர்ஸ் கூட்டாளியான அமேசானில் மொபைலை வாங்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டிஸ்பிளே

டிஸ்பிளே

வெளியான தகவல்களின் கீழ் ஒன்ப்ளஸ் 5 ஆனது ஒரு 5.5 அங்குல முழு எச்டி 1080பி டிஸ்பிளே கொண்டு வெளியாகலாம் மற்றும் ஒரு ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஓசி பயன்படுத்துகிறது என்று உறுதி செய்யப்பட்டுவிட்டது.

பேட்டரி

பேட்டரி

சாதனம் ஒரு இரட்டை லென்ஸ் பின்புற கேமரா அமைப்பு மற்றும் ஒளி குறைந்த நிலையில் கூட ஒரு ஈர்க்கக்கூடிய தரம் வழங்குவதற்கு போதுமான திறன் கொண்ட கேமரா மாதிரிகள் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சாதனம் 3300எம்ஏஎச் பேட்டரி மூலம் மேம்படுத்தப்பட்ட டேஷ் சார்ஜ் அம்சத்துடன் இயங்குகிறது, இது 30 நிமிடங்களில் 0% முதல் 100% வரை சார்ஜ் செய்யும்.

Best Mobiles in India

English summary
OnePlus 5 India price leaks; 8GB variant might cost Rs. 37,999. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X