Subscribe to Gizbot

போட்டியாளர்களை மிரட்டும் ஒன்ப்ளஸ் 5 ஸ்மார்ட்போனின் அம்சங்கள்.!

Written By:

இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தொலைபேசியான ஒன்ப்ளஸ் 5 ஆனது வெறுமனே நுகர்வோர் மற்றும் ரசிகர்கள் எதிர்பார்த்த ஒரு ஸ்மார்ட்போன் அல்ல, இதர போட்டி நிறுவனங்களும் எதிர்பார்த்த ஒரு கருவியாகும். ஒன்ப்ளஸ் 3டி ஸ்மார்ட்போனுக்கு அடுத்தபடியாக வெளியாகும் இந்த புதிய தலைமை ஏற்கனவே சந்தையில் நிலவும் கற்பனையை கைப்பற்றியுள்ள அம்சங்களை கொண்டுள்ளது.

இந்த சாதனம் இந்திய கடற்கரையை 22 ஜூன் அன்று எட்டுகிறது. இந்தியாவில் உள்ள முன்னணி பிராண்ட்களில் ஒன்றாக நிலையான இடத்தை பெற்றுள்ள ஒன்ப்ளஸ் அதன் அடுத்த ஸ்மார்ட்போன் அனைத்து வகை ஊடக பதிவுகள் மற்றும் பதாகைகளை நிகழ்த்தியது.

பல லீக்ஸ் செய்திகள் மற்றும் பல செய்திகளுக்கு பின்னர் ஒன்ப்ளஸ் 5 சாதனம் அறிமுகமாகியுள்ளது. இக்கருவிக்கு சிவப்பு கம்பளத்தை உருட்டும் சில பிராண்டுகள் பின்வருமாறு :

அமேசான், யுபர், சர்வீட்டி, க்ளியர்ட்ரிப், புக்மைஸ்ஷோ, ஜபாங்.

இந்த பிரதான பிராண்டுகள் மற்றும் தொழில் நுட்ப உறுப்பினர்களின் ஆதரவு மூலம் ஒன்ப்ளஸ் 5 ஸ்மார்ட்போனுக்கு இருக்கும் முக்கியத்துவதத்தை அறிந்துகொள்ள முடிகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
மிக உயர் தீர்மானம் கொண்ட இரட்டை கேமரா அமைப்பு

மிக உயர் தீர்மானம் கொண்ட இரட்டை கேமரா அமைப்பு

ஒன்ப்ளஸ் 5 ஆனது ஒரு இரட்டை லென்ஸ் பின்புற கேமரா அமைப்பு கொண்டு வருகிறது என்பது முன்னரே அறியப்பட்ட ஒன்றுதான். ஆனால் அதன் தீர்மானம் அறியப்படவில்லை. இப்போது இந்த சாதனம் மிக உயர்ந்த தீர்மானம் கொண்ட இரட்டை கேமரா அமைப்பு கொண்ட ஸ்மார்ட்போன் ஆக களமிறங்கியுள்ளது. ரியர் கேமராவனது 16எம்பி சோனி ஐஎம்எக்ஸ்398 சென்சார் எப் / 1.7 துளை கொண்டிருக்கிறது, இது ஒன்ப்ளஸ் 3டி சாதனத்தில் உள்ளதை விட 34% அதிக ஒளி மற்றொரு ரியர் கேமரா எப் / 2.6 துளை கொண்ட 20எம்பி டெலிஃபோட்டோ லென்ஸ் கொண்டுள்ளது உள்ளது. மேலும் இக்கருவி இதன் முன்னோடியை விட 40% ஸ்னாப்பியர் என்றும், ஒரு வேகமாக ஆட்டோபோக்கஸ் கொடுள்ளது என்று கூறப்படுகிறது.

2எக்ஸ் ஆப்டிகல் ஜூம்

2எக்ஸ் ஆப்டிகல் ஜூம்

பின்புற கேமராவுடன் இணைந்த மற்ற அம்சங்கள் இரட்டை-எல்இடி பிளாஷ் மற்றும் ஐ.ஐ.எஸ் உடன் 4கே வீடியோ பதிவு ஆகியவை அடங்கும். இவை தவிர, கேமரா 2எக்ஸ் ஆப்டிகல் ஜூம் வரை சென்று பொக்கே விளைவை அளிக்கும் அம்சமும் கொண்டுள்ளது. மேலும் வைட் பேலன்ஸ், ஷட்டர் வேகம், ஐஎஸ்ஓ, ராக் இமேஜ் எடிட்டிங் மற்றும் இன்னும் பல விருப்பங்கள் உள்ள ப்ரோ முறை கொண்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட எச்டிஆர் மற்றும் ஸ்மார்ட் கேட்ச் அம்சமம் கொண்டுள்ளது. முன்பக்க கேமராவை பொறுத்தமட்டில் ஒரு சோனி சென்சார், இஐஎஸ் மற்றும் எப் / 2.0 துளை கொண்ட ஒரு 16எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது. இந்த செல்பீ கேமரா முழுஎச்டி 1080பி வீடியோ பதிவை நிகழ்த்தும்.

பவர் ஹவுஸ் ஸ்மார்ட்போன்

பவர் ஹவுஸ் ஸ்மார்ட்போன்

ஒன்ப்ளஸ் 5 ஆனது ஒரு வன்பொருள் அதிகாரமுள்ள கருவியாக திகழ்கிறது. இப்போது சந்தையில் மிக சக்தி வாய்ந்த ஸ்மார்ட்போன்களில் இதுவும் ஒன்றாகும். ஸ்னாப்ட்ராகன் 835 எஸ்ஓசி, சமீபத்திய உயர் இறுதியில் செயலி கொண்டிருக்கிறது.2.45ஜிகார்ட்ஸ் உடனான ஆக்டா-கோர் செயலி கொண்டுள்ளது மற்றும் 25% உயர் வரைகலை செயல்திறன் வரை வழங்கக்கூடிய அட்ரெனோ 450 கிராபிக்ஸ் உடன் இணைக்கப்படுகிறது.

ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட்

ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட்

மேலும் 8 ஜிபி ரேம் கொண்டு நிறுவனத்தின் கீழ் வெளியிடப்படும் முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும். இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி / 8ஜிபி என்ற இரண்டு ரேம் விருப்பங்கள் மற்றும் 64ஜிபி / 128ஜிபி சேமிப்பு திறன் கொண்ட ஒரு உயரடுக்கு கருவியாக வெளியாகியுள்ளது. மேலும் இக்கருவி ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட் அடிப்படையிலான மேம்பட்ட ஆக்ஸிஜன் ஓஎஸ் உடன் வருகிறது.

கொரில்லா கண்ணாடி 5 உடன் முழு எச்டி பேனல்

கொரில்லா கண்ணாடி 5 உடன் முழு எச்டி பேனல்

ஒன்ப்ளஸ் 5 ஆனது அனடைஸ்டு அலுமினியம் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது மற்றும் ஐபோன் 7 பிளஸ் கருவியை ஒத்திருக்கிறது. ஒரே பெரிய வித்தியாசம் என்னவென்றால் முன்பக்கம் ஹாம் பொத்தான் வடிவம் மட்டும்தான். அளவீட்டில் இந்த சாதனம் இது 7.25 மிமீ கொண்டுள்ளது அதாவது வழக்கமான கருவிகளை விட மெலிந் வடிவமைப்பு கொண்டுள்ளது. கைபேசியில் 5.5 அங்குல முழு எச்டி 1080பி ஆப்டிக் அமோ எல்இடி டிஸ்ப்ளே உள்ளது. மேலும் இதன் திரை 2.5டி கொரில்லா கண்ணாடி 5 கொண்டு பாதுகாக்கப்படுகிறது.

மேம்படுத்தப்பட்ட 3300எம்ஏஎச் பேட்டரி

மேம்படுத்தப்பட்ட 3300எம்ஏஎச் பேட்டரி

ஒன்ப்ளஸ் 5 வன்பொருள் மற்றும் மென்பொருள் மேம்படுத்தல்கள் சேர்ந்தே வரும் ஒரு சிறிய 3300எம்ஏஎச் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. இந்த மேம்படுத்தல்கள் மூலம், சாதனம் ஒன்ப்ளஸ் 3டி ஸ்மார்ட்போனின் 3400எம்ஏஎச் பேட்டரியைஉ ஒப்பிடுகையில் 20% அதிக பேட்டரி ஆயுள் வரை வழங்கும் என்று நிறுவனம் கூறுகிறது. மேலும், 30 நிமிட சார்ஜ் ஆனது பேட்டரி ஆயுளை ஒரு நாள் வழங்குமென்றும் நிறுவனம் கூறுகிறது.

இணைப்பு மற்றும் பிற அம்சங்கள்

இணைப்பு மற்றும் பிற அம்சங்கள்

ஒன்ப்ளஸ் 5 ஸ்மார்ட்போனின் இணைப்பு அம்சங்களை பொறுத்தமட்டில் 4ஜி வோல்ட், ப்ளூடூத் 5.0, என்எப்சி, மற்றும் யூஎஸ்பி டைப்-சி ஆகிய ஆதரவுகளை வழங்குகிறது. ஒரு பீங்கான் கைரேகை சென்சார் உள்ளது, அதனை கொண்டு 0.2 விநாடிகளில் சாதனத்தை திறக்க முடியும் என்று நிறுவனம் கூறப்படுகிறது. மேலும், கீழே ஒரு 3.5மிமீ ஆடியோ ஜாக் உள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
OnePlus 5 gets a high five from leading brands. Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot